Monday, September 25, 2006

தமிழ் கஜினியும் பிரெஞ்ச் அமெலியும் ஆங்கில மெமென்டோவும்

2005-ல் சக்கை போடு போட்ட படங்களில் கஜினியும் ஒன்று. ரமணாவில் தேர்ந்த இயக்குனர் என்று பெயர் வாங்கிய ஏ ஆர் முருகதாஸ், அதற்கு பின்பு இயக்கும் படம் என்பதால், நான் நிறைய எதிர்பார்த்தேன் கஜினியில். என் எல்லாவிதமான எதிர்பார்ப்பையும் அவர் பூர்த்தி செய்யவில்லை என்றாலும், படத்தை அவர் கொண்டு சென்ற விதம் மிக அருமை. அதுவும் தன் தலையில், அந்த பயமுறுத்தும் இரும்பு உலக்கையினால் நாலு அடி வாங்கிய பின்பு, அசின் சூர்யாவை பார்க்கும் அந்த ஒற்றை பார்வை மட்டுமே ஆயிரம் வசனங்கள் பேசும். இப்படி படத்தை புகழ்ந்து நிறைய சொல்லலாம். அதன் பிறகு அந்த படம் ஒரு ஆங்கில பட மெமென்டோவின் (MEMENTO) தழுவல் என்று கேள்விப் பட்டபின், முருகதாஸ் மீது இருந்த மரியாதை கொஞ்சம் தொலைந்து போனதென்னவோ உண்மை. சமீபத்தில் நான் பார்த்த ஒரு படக் காட்சி சுத்தமாக அவர் மரியாதையையும் திறமை மீது இருந்த நம்பிக்கையையும் மிகவும் குறைத்து விட்டது.

நமது நாட்டில் இருந்து லகான் படம் ஆஸ்காருக்கு சென்ற போது, இந்த படத்துக்கு ஆஸ்கார் கிடைக்காமல் தட்டி பறித்து சென்றது பிரஞ்ச் மொழியின் அமெலி (AMELIE).இந்த படம், துறுதுறுப்பான, மற்றவர்க்கு நல்லது செய்ய நினைக்கும் ஒரு பெண்ணை பற்றிய படம். ஒரளவுக்கு கஜினியின் கல்பனா பாத்திரத்திற்கு ஒத்துப் போகக்கூடியது. அதில் அமெலி பிளாட்பாரத்தில் வழியிழந்த ஒரு விழியிழந்த முதியவருக்கு, ஒரு இடத்திலிருந்து அவ்ர் செல்லும் இடம் வரை அழைத்து சென்று விட்டு வருவார். போகும் வழியில் அமெலி பார்ப்பதை எல்லாம் அந்த விழியிழந்த முதியவருக்கு விவரித்து வருவார்.. புது ஆடை அணிந்த ஒரு பெண்ணை பற்றி, கடையில் தொங்கவிடப்பட்ட சில பொருட்கள் பற்றி, ஒரு குதிரை சிலையை பற்றி என எல்லாவற்றையும் உயிரோட்டமாக விவரிப்பார். எப்படி என்றால் கஜினியில் இதே மாதிரி ஒருவருக்கு கல்பனா கதாபாத்திரம் என்ன செய்யுமோ அதே மாதிரி..அடப்பாவிகளா... படம் தான் இன்னொரு மெமென்டோவின் ஈயடிச்சான் காப்பி என்றால் அதில் வரும் சம்பவம் இன்னொரு படத்திலிருந்தா.. அப்படி என்றால், கஜினியில் இருக்கும் காட்சிகள் இன்னும் எத்தனை படத்தில் இருந்து உருவி எடுக்கப்பட்டது.. முருகதாஸ், நீங்கள் ஒரு இயக்குனரா இல்லை மற்ற மொழிப் படத்திலிருந்து தமிழுக்கு காட்சிகளை இறக்குமதி செய்பவரா...

சரி..ஏதோ..கஜினியில் காப்பி அடித்தது சின்ன தப்பு என்று பார்த்தால், இப்போது சிரஞ்சீவியை வைத்து எடுத்த தெலுங்கு ஸ்டாலினும் ஒரு ஆங்கில மொழித் தழுவலாமே..
(அந்த படத்தின் பெயர் பே இட் ஃபார்வர்ட்-PAY IT FORWARD).. உங்களுக்கே இது நியாயமா.. தங்களது அடுத்த படமாவது சொந்த சரக்கா இல்லை அதுவும் வேறேதும் படத்தின் தழுவலா.. ஒரு வேளை கதை டிஸ்கஷன் என்ற பெயரில் நீங்கள் உங்கள் உதவியாளர்களுடன் சேர்ந்து எல்லா மொழி படங்கள் தான் பார்கின்றீர்களா..

தங்களது தீனாவும், ரமணாவும் சொந்த சரக்கா என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை.. ஆனால் சொந்த சரக்காய் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது..

உங்கள் படம் வேன்டுமென்றால் நிறைய காசுகளை அள்ளி இருக்கலாம்.. தயாரிப்பாளருக்கு நல்லதொரு மகசூலை தந்திருக்கலாம்..அனால் அது எதற்கும் நீங்கள் உரியவரா.. அருகதை ஆனவர் தானா.. அடுத்த படத்தில் பதில் சொல்லுங்களேன் முடிந்தால்..

நீங்கள் மெல்லமாய் முணுமுணுப்பது எனக்கு கேட்கிறது, முருகதாஸ்.. உனக்கும் எனக்கும் படத்தை அப்படியே காப்பியடித்தாரே அந்த படத்தின் இயக்குனர், ஜெயம் ரவியின் அண்ணன் ராஜா, அவரை நீ என்ன சொல்லப் போகிறாய் என்று கேட்கிறீர்கள்.. நான்(ங்கள்) உங்களிடம் நிறைய எதிர்ப்பார்த்ததால் தான் இப்படி குமுறுகிறேன்.. அது தவறா..

தவறு என்பது உங்கள் பதில் என்றால், நீங்கள் வசனம் எழுதிய ரமணா படத்தில் சொல்வது போல உங்களுக்கு மன்னிப்பே கிடையாது..

34 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Hello Mr. Karthiheyan,
I dont unerstand whaatare you tryingto say. Movies are movies. They are not real. First you have to understand that. IF you want anything new, you have to dream. May be you get the same dream again and again. There is no way one can make a movie without having the same thing from other movie. Can you show any english movie like what you say. If you analyze frame by frame you can have mix of 100 movie as one movie.

said...

anonya deal a vidaren :) so me first! edunga sundala! inum posta padikala.. meeting mudichitu padikren :D

said...

Murugadaasa thitturadhula gyayame illa.. Kannadhaasane athikkai paatula irundhu neriya paatu namma ilakkiyathula irundhu thirudi potu irukkaar.. Adhayellam naama rasikkalaiyaa.. Ilakkiyathula irundhu irundhaa namma adhai ellaam padichu kooda iruppamo ennamo..
Ungalukku Amelieum, pay it forwardum paakura chance kedachadhaala copy adichadhu theriudhu.. But neriya perukku adha paakura vaipe illa.. Ethanaiyo padangal, ethanaiyo stunt scenes, paadal katchigal ellame copy adichu pannathaan pannuraanga.. Tamil mozhi padam mattume paakuravangalaium adhu poi serudhunnu sandhosha padunga..

Adhukkaaga naan copy adikkaradhu mothamum sarinnu solla maaten..

said...

YoW! ithellam too much! oruvarai nee thappu senja!nu solvathuku munnadi first we shud justify ourself. try to ask the qstn to yourself. it will give ans.

Great men think alike! ore output rendu logic vechu vara koodathaa? namakku thevai o/p thaane? if/while statement yaarellam use pannangaloo avanga ellam en codea copy adichutaanga!nu solluva poliruke!

ore thaali, kumkumam, vella podavai, kozhandaiya thandrathu, naatamai theerpu(syam unna illa) theemithi, pondra sentimentsa vida oru nalla vishayatha 4 perukku kondu sekrathula thappu illai, though it's a copy!

apdinu paartha y u posted diff pics like an hero? originalaa oru pose kuduthrukalaam illa? (no offense karthi)

enna solroom, atha epdi solroom? ithaan cinimavula mukyam.

ramana la oru club dance vechu irunthaara? atha kuthi kaatu nyaam!
gajini la 9 thara adinaale oru aatam atha solli kaatu, unakku maalai potrupen naan, yen akka asina katti vechrupen.
paaru, akka Asin azhara. avalukku vera maapilai paaka sollitta. better lucku nestu time! (side gapula santro ootitom illa) :D

@porkodi, thangachi, sundal kudutha vaangi vai. Hot panla vechru ma! enakku suda iruntha thaan saaptuven. enna? :D

said...

Annan,
kalakal review. I felt the same when I saw such e-adichan copies.. One day when I was watching the Hallmark channel, I saw a dance sequence from a very very old movie,(eastman color mathiri irundadu) which has been copied inch by inch in picturising "hello mr.ethirkatchi" from iruvar.Maniratnamay ipdina mathavanga epdiyo!!

I also saw the same bridge, dance movements, moonlight setting that are shot for the song "vennilavae vennilavae" from minsara kanavu in another old black and white English movie in TCM channel.

enga poi muttikarathu,such copies do come often, its upto our discretion to view them or not. Thats the max we can do ...
-Deeksh

said...

மெமெண்டோ, ஒரு சகாப்தம்...! அதன் வருகைக்கு முன்னர் ஹாலிவுட் படங்களில் ஒரு ஆரம்பம், இடைப்பட்ட தருணம், ஒரு முடிவு என்று இருக்கும்...மெமெண்டோவில் அது இல்லை. ஆரம்பத்திலிருந்தே cyclic ஆக சுற்றும் காட்சிகள்...மெமெண்டோ வைத்து திரைக்கதையை எழுதுவதில் ஏகப்ப்ட்ட மாற்றங்கள் கொண்டுவந்துள்ளனர் ஹாலிவுட் காரர்கள்...திரைப்படக் கல்லூரியிலும் சொல்லிக் கொடுப்பதாகக் கேள்வி. அதனால் அதன் influnece பல திரைப்படங்களில் இருக்கும். நம்ம ரமணா முருகதாஸ் செய்தது தழுவல் என்று கூட சொல்லக் கூடாது...அச்சு அசல் காப்பி...!

அதில் ஆமிலி கதாப்பத்திரத்தை நுளைத்ததைத் தவிர ஒரிஜினாலிடி என்று எதுவும் இல்லை. க்விண்டின் டாரண்டீனோவின் படக்காட்சிகளையும் ஜான் வூ சண்டை காட்சிகளையும் தமிழில் ஏகத்துக்கு அச்சு அசல் காப்பி அடித்திருக்கிறார்கள்...(தூள் படத்தில் பசுபதியின் கையை முறிக்கும் காட்சி Romeo must die படத்திலிருந்து எடுத்தது...).

என்ன செய்ய...இதையெல்லாம் வளர்ச்சியின் ஒரு stage ஆக இருந்து பார்த்துவிட்டு போகவேண்டும்... இரண்டாம் உலகப் போரின் பிறகு ஜப்பானிய எலெக்ட்ராணிக் உபகரணிகள் என்றாலே சீப் தொழில் நுட்பம், Copied version of european goods என்ற நிலை இருந்தது...ஆனால் இன்று...ஜப்பானிய தொழில்னுட்பத்திற்கு ஈடு இணை இல்லை. அதே போல் தமிழ் சினிமாவும் ஒரு நாள் முன்னேறும் என்று நம்புவோம்...!!

said...
This comment has been removed by a blog administrator.
said...

Anon,
Hold on. Just see that movies and comment. I am asking Murugadoss, not to do same thing in his next movie. I am totally agreeing the Vagra points..

said...

porkodi.. meeting mudichuttu vanga.. unga managaer kaiyaalaye ethum karacharama kodukka solren :-))

said...

Sasi.. antha karuththai eduththi athai inga maaththi use panni iruntha paravaillai..
amelie padathula varra scene appadiye copy.. atha murugadosse thannoda karpanaiyai use panni pannaarunnu sonna ennaala namba mudiyaathu.. first amelie padam paarunga.. oru 45 minutes kalichchu antha scene varum.. appo puriyum ungalukkE..

said...

//yen akka asina katti vechrupen//

Ambi, athai muthalla seyyappa.. Naan paattukku varam rendu post pottu 'asin'nennnu kidappen..

Ambi..try to see that amelie movie and memento.. Then you will know how he copied.. ayyaa... udambula pachchai kuththikirathai kooda appadiye eduthirukkiraaruppaa..
padam paaththu semma tension akiduchchu..

said...

Ambi, oru padaththoda concept vachchu padam edukkalam.. athukkaaka.. antha padaththaiye copy adikka koodathillaiya.. neenga antha rendu padaththaiyum paarunga appuram sollunga ambi.. en kobam niyaayamnu puriyum

said...

ayyO thangachchi..thanks thanks.. mudinjaa antha rendu padamum paaruma..unakkE theriyum..Naan kumurunathu niyaayamnu..

said...

ரொம்ப நன்றி வஜ்ரா.. நீங்க சொன்ன எல்லா கருத்துக்களும் அப்படியே என்னோட எண்ணங்களை பிரதிபலிச்சது.. முதன் முறையா இங்கே வந்தமைக்கு நன்றி

said...

கார்த்திக் அவர்களே,

உங்கள் ப்ளாக்கர் அக்கவுண்டில் கமெண்ட் மாடரேஷன் (பின்னூட்ட மட்டுறுதல்) ஏற்பாடு செய்யவில்லையே? ஏன்...? யார் வேண்டுமானாலும் கெட்டவார்த்தை பின்னூட்டம் கூட போட முடியும்..அது அவ்வளவு சிறப்பாக இருக்காது...ஆகயால் முதலில் comment moderation enable செய்துகொள்ளுங்கள்..

மேலும் comment moderation இருந்தால் தான் தமிழ்மணம் அன்மையில் மறுமொழியிடப்பட்ட இடுகைத் திரட்டியில் திரட்டப்படும்..!

சென்று பார்க்க : http://thamizmanam.blogspot.com/2006/05/blog-post.html

said...

Murugadoss ennanga, avaru verum jujubi. Kamal is the Godfather for all these folks. His list of inspirations/ copies are just endless. Murugadoss has just started his journey. Please bookmark this link:

http://jackofall.blogspot.com/2005/03/inspired-kamal-hassan.html

said...

என்னங்க இது மைக் கிடைச்சா என்ன வேனா பேசுவீங்களா...இவருக்கு வந்த ஐடியாவ அவங்க சுட்டு படம் எடுத்தா முருகதாஸ் என்ன பண்ணுவாரு, இதே மாதிரி தான் filbert சொல்ற மாதிரி கமலுக்கு வர ஐடியாவ எல்லாம் சுட்டு வெளிநாட்ல படமா எடுதுடறாங்க :-)))

said...

I agree with what you are saying. Originality இல்லனா என்ன பெரிய directors. நானும் ஏதாவது TV ல பழைய English movies பாக்கும் போது இதே மாதிரி தமிழ் படத்துல வந்திருக்கேனு யோசிச்சிருக்கேன் (scenes, music). நம்ம ஊர்ல வர TV shows ம் அதே மாதிரி ஈ அடிச்சான் copy தான்..
But as an audience, we don't mind watching these as long as they are entertaining, do we? நாயகன் is still one of the best tamil films.

said...

//இவருக்கு வந்த ஐடியாவ அவங்க சுட்டு படம் எடுத்தா முருகதாஸ் என்ன பண்ணுவாரு, இதே மாதிரி கமலுக்கு வர ஐடியாவ எல்லாம் சுட்டு வெளிநாட்ல படமா எடுதுடறாங்க //
அதுவும் time machine ல பின்னாடி போய் எடுத்துடராங்க. பாவம்ங்க நம்ம ஆளுங்க.

said...

//
என்னங்க இது மைக் கிடைச்சா என்ன வேனா பேசுவீங்களா...இவருக்கு வந்த ஐடியாவ அவங்க சுட்டு படம் எடுத்தா முருகதாஸ் என்ன பண்ணுவாரு, இதே மாதிரி தான் filbert சொல்ற மாதிரி கமலுக்கு வர ஐடியாவ எல்லாம் சுட்டு வெளிநாட்ல படமா எடுதுடறாங்க :-)))
//

அந்த ஏழு நாட்கள் பாக்கியராஜ் பேசுவது மாதிரி இருக்கு..!!

said...

அட ஏஞ்சாமி! என்ன இது கார்த்தி இப்படி காரசாரமா பதிவு போடறாரு..! உங்க கருத்து சரி தான், ஆனா எந்த படத்துலயும் வேறொரு படத்தின் சாயல் வரத் தான் செய்யும்.. தவிர்க்க முடியாது னு தோணுது :)

Anonymous said...

A week before Ghajini was released, I saw the Movie Memento. It was a nice movie.
But Ghajini was a lot different. The director just took the concept and improviced a lot on it. I liked Ghajini better than Mememto.
Surya and Asin added a lots of love to the movie.

said...

Karthik Mams....idhu murugadoss-ku mattum illa...Pattiyal is a direct rip of a thai movie....balu mahendra ripped a english movie for juile ganapathy(scene by scene)....most of kamal movies are direct lift from english movies....idhu mathiri namba aalunga panra ellam movies...vera edavathu language-la irundhu suttathu than.....if u dont know the exact original movie....then our ppl have smartly lifted....avlo than....idha ellam meeri than namba tamizh cinemava love pannanum :)

Anonymous said...

உங்க பதிவில் இருந்து, நீங்க மெமெண்டோ படமே பார்கலன்னு தெரியுது (நான் ரெண்டு படத்தையும் பார்த்திருக்கேன்)

1. முதல்ல கஜினி படத்துக்கும் மெமென்டோ படத்துக்கும் உள்ள ஒரே ஒற்றுமை '15 நிமிட மெமரி' மட்டுமே
அதுவே தவறு. மெமென்டோவில கொஞ்ச நேரம்தான் நினைவு இருக்கும்னு சொல்லுவாங்களே தவிர அது 15 நிமிடம்னு கூட சொல்லமாட்டாங்க
இந்த ஒரே காரணத்துக்காக முருகதாஸ் காப்பி அடிச்சார்னு சொன்னா இப்ப வர எல்லாப்படமும் காதல் படங்கள்தான், அதுக்காக எல்லாம் காப்பி அடிச்ச படம்னு சொல்ல முடியுமா?

2. அமெலி படத்துல இருந்து ஒரு சீனே அப்படியே சுட்டுட்டார்னு சொல்ரீங்க
மணிரத்னம் தெரியுமில்ல உங்களுக்கு... நாயகன் படத்துல வயதான கமலோட ஸ்டைல 'GodFather' (English) படத்துல வர கதாநாயகனிடமிருந்து எடுத்திருக்காரு.
அப்ப அவர என்ன சொல்லுவீங்க. அவர் முருகதாஸவிட பெரிய ஆள் இல்லையா?

முதல்ல நீங்க எல்லாப் படத்தையும் பாருங்க, அப்புறம் ஒரு முடிவுக்கு வாங்க...
முருகதாஸோட 'DieHard' fan இப்படி பேசலாமா?

said...

நன்றி வஜ்ரா.. நான் மாற்றம் செய்கிறேன்

said...

Thanks for supporting Filbert

said...

shyam, rendu padam paaththavudane appadi thoninathu.. athu thaan

said...

//Originality இல்லனா என்ன பெரிய directors//

appadi sollunga priya..

said...

//அதுவும் time machine ல பின்னாடி போய் எடுத்துடராங்க. பாவம்ங்க நம்ம ஆளுங்க//

LOL Priyaa :-))

said...

//அந்த ஏழு நாட்கள் பாக்கியராஜ் பேசுவது மாதிரி இருக்கு..//

sila samayam shyam pesurathai paaththa appadiththaan thonum, vajra..

shyam, moraikkaatheenga..chummmmma

said...

//எந்த படத்துலயும் வேறொரு படத்தின் சாயல் வரத் தான் செய்யும்..//

சரியாச் சொன்ன பொற்கொடி.. ஆனா ஏன் பாதிப்பு வர்ற மாதிரி எடுக்கணும்

said...

Adaponga Anon, eppadiyellam support panninaa murugadoss next padaththai appadiyE copy adippar..ok vaa?

said...

//idha ellam meeri than namba tamizh cinemava love pannanum//

Naanum thamizh cinemaavai love panrathaala thaan, ippadi ellam pesuren Mapla

said...

ஏங்க கார்த்திகேயன், மணிரத்னம் தப்பு பண்ணிதால முருகதாஸும் பண்ணலாம.. ஏங்க ஒருத்தன் காப்பி அடிக்காம எடுப்பான்னு முருகதஸ்ஸ் கிட்ட சொன்ன, இல்ல இல்ல, மணிரத்னமெல்லம் காப்பி அடிச்சிருக்கார்.. அதனல், முருகதாஸ் காப்பி அடிச்சா தப்பில்லைன்னு சொல்றீங்களே..

முருகதாஸ், எப்படி வேண்டுமானாலும் எடுப்பா.. நானும் மத்தவங்க மாதிரி படத்தை வந்து பாத்துட்டு போறேன்..னெல்லாம் சொல்ல முடியாது..