Thursday, September 28, 2006

என் கிராம ஊர்வலங்கள்

எனக்கு பழைய பாடல்கள்னா ரொம்ப பிடிக்கும். எனக்கு அந்த பாடல்களை கேட்கிற வழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் எங்கள் ஊர்ல மைக் செட் போடும் அன்பர்கள் தான். என் ஊர்ல எதுன்னாலும் மொதல செய்றது நாலு சவுண்டு குழாய்களும், ரெண்டு ஸ்பீக்கர் வைக்கிறதும் தான். வாழைமரம் கட்டுறது எல்லாம் அடுத்த விஷயம் தான்.

இந்த மாதிரி மைக் செட் போடுறவங்க ஒரு நாலஞ்சு குரூப் இருந்தாலும், அவங்க போடுற முறை எப்போதுமே ஒண்ணு தான். முதல்ல சாமி பாட்டு போட்டா, ஏதோ அந்த வீட்ல நல்ல விசயம்னு தெரியும். சாமி பாட்டும் கிறித்தவர் வீட்ல அவங்க பாடல்களும் (பெரும்பாலும் 'கேளுங்கள் தரப்படும்' பாடல் தான்), இந்துக்கள் வீட்ல விநாயகர் பாட்டும் தான். இதே மாதிரி பொண்ணை அழைச்சுகிட்டு வீட்டுக்கு வர்றப்போ, 'மணமகளே மருமகளே வா வா..நீ வலது காலை எடுத்துவைத்து வா வா'ன்னு "சாரதா" படத்துல இருந்து ஒரு பாட்டு. இதே அந்த வீட்ல யாராவது அண்ணன் இருந்தா 'புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே, தங்கச்சி கண்ணே..சில புத்தி மதிகள் சொல்லுறேன்'னு..ஒரு பாட்டுன்னு டைமிங்கா போடுவாங்க.

பொண்ணு மாப்பிள்ளையை அழைச்சுட்டு போறதுன்னா என்னன்னா..இப்போ இந்துக்கள்னா விநாயகர் கோவிலிலும், கிறித்தவர்னா சர்சிலும் வைத்து தாலி கட்டுவாங்க. அங்க இருந்து மாப்பிள்ளை வீடு வரை ஊர்வலம் இருக்கும். அந்த ஊர்வலத்துல பொண்ணு மாப்பிள்ளை நடந்தும் வரலாம்.. காரிலும் வரலாம்.. கொஞ்ச நாள் முன்னாடி யானைல கூட வந்தாங்க..அது அவங்க அவங்க வசதியை பொறுத்தது.அப்படி ஊர்வலத்துல போறப்போ அந்த மணமக்கள் முன்னாடி டிரம் செட்டுகாரவங்க மேள தாளம் உண்டு. அவங்க சில சமயம் ஆடிகிட்டும் போவாங்க.. காசு இருந்து ஏதாவது கலர் பாட்டில் (உள்ளூர் குளிர்பானங்கள்) வாங்கிக் கொடுத்தா, அதை மேளம் அடிச்சுகிட்டே, வாயால கவ்வி, பாட்டிலை திறந்து குடிப்பாங்க..

இதுமட்டும் இல்ல.. பொண்ணு மாப்பிள்ளைக்கு தெரிஞ்சவங்களோ நண்பர்களோ அவங்களுக்கு குளிர்பானமும் வாங்கி கொடுப்பாங்க.. சில பேர் மேள தாளம் காரவங்க கிட்ட ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்த சொல்லுவாங்க.. அவங்களும் அந்த பணத்தை வாங்கிட்டு இதனால "ஊருக்கு சொல்றது என்னனா, அஞ்சா நெஞ்சன், கொடை வள்ளல், இந்த வெள்ளொட்டுக்கே ராசா, பொண்ணு மாப்பிள்ளையோட மாமா பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துராருப்பா".. டண்டணக்க டணக்கு அப்படின்னு ஒரு ஹைபீட் மேளத்தோட சொல்வாங்க..இந்த ஊர்வலத்தை ஊர் மக்கள் எல்லோரும் பார்ப்பாங்க..

மொத எடுத்தவுடனே 'வீடு வரை உறவு'ன்னு "பாதகாணிக்கை" படத்துல வர்ற சோக பாட்டு வந்தா, யாரோ ஒருத்தவங்க வீட்ல இறந்துட்டாங்கன்னு நினைச்சுக்க வேண்டியது தான். அந்த பாடல் முடிந்தவுடன், சாமி பாட்டு.. அதுக்கு பிறகு யாரு, எந்த வீட்டுல இருக்கிறவரு, யாரோட அப்பா, பிள்ளை ன்னு எல்லா விவரமும் சொல்லிடுவாங்க. அதுக்கு பிறகு பழைய படங்களில் இருந்து ஒரே சோக பாடல்கள் தான். இப்படி மைக் செட் போடுறதுல கூட ஒரு நேர்த்தியை, ஒழுங்கை கடைபிடிப்பாங்க.

அப்படி இறந்தவங்களை வீட்ல இருந்து தூக்குறப்போ, கரெக்டா மறுபடியும் 'வீடு வரை உறவு' பாட்டை போட்டுருவாங்க.. அதுவரைக்கும் அழாதவங்க கூட அப்போ நிச்சயமா கண்ணீர் விடுவாங்க..

பாடல்கள் எந்த அளவுக்கு மக்களோட இரண்டற கலந்திருக்கு அப்படின்னு நான் கண்ணார பல தடவை நான் பாத்துருக்கேன்.. உணர்ந்தும் இருக்கேன்.

24 பின்னூட்டங்கள்:

said...

கார்த்திகேயன்,

என்னையும் கிராமத்துக்குக் கொண்டு போனதுக்கு நன்றி.

'வாராயோ தோழி வாராயோ' போடமாட்டாங்களா உங்கூர்லே?

said...

appada kalkandu sadham avadu vangarene!

said...

hmmmmm gramathula vaazhnadadu illa, irundalum i m able to relate to what u have written :) ippo adu madri inga podunga, noise pollution nu ulla vechiduvanga!

said...

Kalyaanathukku poduraangalo illayo, setha veetula kandippa paatu.. Ippo ellaam parava illa Karthi, oppaari paatukkunnu thaniya cassettes ellaam vandhu irukku. Adhathaan ippo vidiya vidiya paada viduraanga.. "Aakathi, aakathi.." appidinnu "Thavamaai thavamirundhu" padathila oru gramiya paadal vechaanga illa, adhu kooda oru amma oppari paata paadi ketu irukken.
Valkaiyila ella nigalvugalum isaiyoda kalandhu dhaan irukku

said...

//டண்டணக்க டணக்கு அப்படின்னு ஒரு ஹைபீட் மேளத்தோட சொல்வாங்க..//
ha haa LOL :) this is too much..

another nice one. :D

said...

அய்யோ..துளசி..அந்த பாட்டு இல்லாமலா..எல்லா பாட்டையும் சொல்ல வேண்டாமேன்னு நினச்சு விட்டுட்டேன்..

said...

//appada kalkandu sadham avadu vangarene! //

ஜஸ்ட்ல துளசி வாங்கிட்டு போயிட்டாரேமா, பொற்கொடி

said...

//irundalum i m able to relate to what u have written //

நினைச்சு பாக்கவே பக்காவா இருக்கும்.. பொற்கொடி.. அதெல்லாம் ஒரு மறக்க முடியாத வாழ்க்கை

said...

//Valkaiyila ella nigalvugalum isaiyoda kalandhu dhaan irukku //

romba chari sasi..

said...

////டண்டணக்க டணக்கு அப்படின்னு ஒரு ஹைபீட் மேளத்தோட சொல்வாங்க..//
ha haa LOL :) this is too much..//

அய்யோ அம்பி அந்த அடியை கேட்ட ஆடாதவங்களும் ஆடுவாங்க தெரியுமா

//another nice one//
Thanks ambi

said...

ம்ஹூம், படிக்கவே முடியலை. ஏதோ டண்டணக்கு பத்தி எழுதி இருக்கிறதா ஆப்பு சொல்லுது. பார்க்கிறேன். உங்க ஊர்? எந்த ஊர்? எனது ஊர் அந்த ஊர்! :D

said...

டண்டனக்க டண்டன்னக்க சூப்பரோ சூப்பர்!!!

said...
This comment has been removed by a blog administrator.
said...

இன்னொரு மலரும் நினைவுகளா? எப்பவும் போல நல்லா எழுதி இருக்கிங்க.

கிராமத்துல மைக் செட் போடராங்க.நகரத்துல ஆர்க்கெஸ்ட்ரா..
கண்டிப்பா music can make our moods light or sad. Movie songs have always accompanied us through all events of life.

said...

Mams.....romba correct...namma oorlayum appadithan....ellathukume paatu....ennaku ennavo paatu mattum illana...naama mirugangalathan irudhu irupomnu nenaikaren....even i our personal lives music and songs makes a lot of diff...night irutu room-la paduthukitu oru soga pattu ketta andha sogam nammayum thaakidum :(

vaazhaga namma music directors :)

said...

இதைத்தான் ஈதல் இசைபட வாழ்தல் என்பதோ.

கிராமத்தில் சொல்வது வழக்கம் "நான் போனது எம்மாம் பெரிய கன்ணாலம் தெரியுமா 2 நாளைக்கு புல்லா மைக்செட் போட்டாங்கோன்னா பாத்துகோயேன்"

said...

வாங்க மேடம். ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்க, சௌக்கியமா தலைவியே

said...

வாங்க நடேசன்.. முதல் முறை வந்து இருக்கீங்க..மேள தாள முழக்கத்தோட..நன்றி

said...

ஆமா பிரியா... அந்த மாதிரி நினைவுகள் தான் நம்மள இன்னும் மலர்ச்சியா வச்சிருக்கு

said...

//night irutu room-la paduthukitu oru soga pattu ketta andha sogam nammayum thaakidum //

அய்யோ சான்ஸே இல்லாத சூழ்நிலை..மாப்ள

said...

//நான் போனது எம்மாம் பெரிய கன்ணாலம் தெரியுமா 2 நாளைக்கு புல்லா மைக்செட் போட்டாங்கோன்னா பாத்துகோயேன்//

பின்னிட்டீங்க திராசா சார்

said...

Karthi: super post! grama anubavangalai silagithu ethanai padivu venumnaalum podalam alukkave alukkadhu! :)

said...

//grama anubavangalai silagithu ethanai padivu venumnaalum podalam alukkave alukkadhu//

unmai IA..unmai..enakkum eththanai post ezhuthinaalum azhukkave azhukkala

Anonymous said...

அட நீங்க வெள்ளோடா? நான் சின்னாளபட்டி.....உலகம் ரொம்ப சின்னது தான்
..அகிலா