Monday, September 18, 2006

திருவிழான்னு வந்தா..

எங்க ஊர்ல அடிக்கடி திருவிழா நடக்கும்.. சித்திரையில் பகவதி அம்மன் கோவில் திருவிழாவும் ஆடியில் சந்தியாகப்பர் திருவிழாவும் நடக்கும்.. இது தவிர அப்பப்போ ஏழு எட்டு குட்டி திருவிழாக்களும் உண்டு..

என் ஊர்ல கிறித்தவர்கள் 65% சதவீதமும், இந்துக்கள் 35% உள்ளனர். ஆடியில் நடக்குற சந்தியாகப்பர் திருவிழா தான் பெரிய திருவிழ.. கிட்டதட்ட ஒரு பதிமூன்று சப்பரங்கள் (தேர்) உலா வரும்.. எல்லாமே சிரீயல் செட்டிங்ஸ் போட்டது.. இரவுல அந்த இடமே ஜெகஜோதியா இருக்கும்.. நான் இங்கே கிளம்பி வருவதற்கு முந்தய ஞாயிற்றுக்கிழமை தான் இந்த திருவிழா நடந்தது..

ஊருக்கு மேக்கால தான் சர்ச் இருக்கு.. அதுக்கு முன்னாடி இருக்க பெரிய இடத்துல தான் அந்த சப்பரங்களை நிறுத்திருப்பாங்க.. அப்படி எல்லா சப்பரங்களை ஒரே இடத்துல பாக்க மக்கள் கூட்டம் கூட்டமாய் வருவாங்க.. நானும் என் நண்பர்களும் அந்த சர்ச் வாசலிலேயே நின்னுக்குவோம்.. அப்பத்தான், உள்ள போறவங்களையும் பாக்க முடியும் வெளியே வர்றவங்களையும் பாக்க முடியும்.. எல்லாத்தையும் கவர் பண்ணமுடியும்.. எங்க ஊரை சேர்ந்தவங்க ரொம்ப பேர் சிறுமலையிலும் அதன் அடிவாரத்துல இருக்க தோட்டங்களிலும் இருப்பதால், இந்த மாதிரி தேர் திருவிழான்னா தான் சில பேரை பாக்கவே முடியும்..

கலர்கலராய் அழகழகான பலூன்கள், பொம்மை கார்கள், குட்டி ஏரோபிளேன்னு விளையாட்டு சாமான்கள் ஒரு புறம், சின்ன சைஸ் ராட்டினங்கள் ஒரு புறம், பிதாமகன்ல சூர்யா குலுக்குற டப்பா சூதாட்டம் ஒரு புறம்னு அங்க இருக்கிற ஒவ்வொருவர் முகத்துலயும் சந்தோசம் இருக்கும்.. ஒரு பக்கம் சாக்கரின் பவுடருல கலந்த ஜூஸ் விப்பாங்க.. வளையல் கடை.. தோடு, டிசைன் டிசைன ரப்பர் பேண்டு கடை, நடிகர் நடிகைகள் போஸ்டர் கடைன்னு ஏகப்பட்ட கடைகள் போட்டு வியாபாரம் வெகு ஜோரா நடக்கும்..அன்னிக்கு ஒரு நாள் விடிய விடிய எங்க கடையும் இருக்கும்.. ஒதுங்க முடியாத கூட்டமும் இருக்கும்.. பான்பராக்கும், பீடி சிகரட்டும் அன்னிக்கு விக்கிற மாதிரி என்னிக்கும் விக்காது..

ஒரு எட்டுமணி ஆகுற நேரத்துல, ஒரு கூட்டம் வரும் பாருங்க அது தான் ஹைலைட்டே.. வெள்ளைகலர் பேண்ட், சட்டை, சிவப்பு கலர் தொப்பி, ஒரு கூலிங்கிளாஸ், கல்ல வெள்ளைகலர்ல ஷூ.. கழுத்துல ஒரு மப்ளர்..மொகத்துல ஒரு ஒண்ணரை இஞ்ச்சுக்கு பவுடர்..இந்த கெட்டப்புல ஒரு எழு எட்டு பேர் வருவாங்க.. பாக்கவே சிரிப்பா இருக்கும்.. (இவங்களை பாக்கவே சிரிப்பா இருந்தாலும், இவங்க தோட்டத்துலயே வாழ்க்கையை போக்குறதால..இந்த மாதிரி திருவிழாவுக்கு தான் புது டிரஸ் எடுப்பாங்க.. அப்படி எடுக்கிறப்போ சினிமாவுல என்னன்ன ஹீரோ போட்டு வர்றானோ அதெல்லாம் ஒரே நேரத்துல இவங்க வாங்கிடுவாங்க.. மத்த நேரமெல்லம் இவங்களுக்கு ஒரு டவுசர் தான் டிரஸே)

நாமளும் எப்பவாவது ஊருக்கு போரதால நெரைய பேருக்கு எனக்கு அடையாளம் தெரியாது.. ஆனா அப்பா கடை வச்சு இருக்கிறதால் முக்காவாசி பேருக்கு நம்மளைத் தெரியும்..

தேவதைகள்..தாவணி அணிந்த பட்டாம்பூச்சிகள், புது உடைல, சில் சில்லுன்னு கொலுசு சத்தம் கேக்க கூட்டமா அவங்க சிரிச்சு பேசிகிட்டு போறதை பாக்கவே இந்த ஜென்மம் எடுத்த மாதிரி இருக்கும்..சும்மா வாசம் வீசுற பூக்களை தலைல அவங்க வச்சுட்டு போற அழகே அழகு தான்.. அவங்க தலைல சொருகிட்டு போறது அந்த பூக்களையா இல்லை எங்களோட மனசையுமான்னு அந்த ரெண்டுங்கெட்டான் வயசுல தெரியாது.. ஏதாவது ஒரு பொண்ணு நல்லா இருந்தாலே போதும்.. அந்த பொண்ணு போற வழிலல எல்லாம் போய் நிப்போம், அந்த பொண்ணு எங்களை பாக்குற மாதிரி.. அதுகளும் என்னடா இவிங்க நம்ம பின்னாடியே சுத்துராங்கன்னு நினச்சுட்டு மனசுல சிரிஅச்சு, எங்களை பாத்து லைட்ட உதட்ல சிரிக்கும்.. அது கண்ணு ரெண்டும் படபடன்னு அடிக்கும்.. இது போதாது எங்களுக்கு.. இப்ப யாரை பாத்து அந்த பொண்ணு சிரிச்சதுன்னு ஒரு பெரிய சண்டையே வரும்.. இந்த பக்கம் எல்லோரும் அடிச்சுகிட்டு இருக்க, ஒருத்தன் மட்டும் நைசா கூட்டதை விட்டு நழுவி, அந்த பொண்ணுக்கு பக்கத்துல போய்டுவான்.. பெரும்பாலும் இந்தமாதிரி கம்பியை நீட்டிட்டு போறது நானாத் தான் இருக்கும்..

ஒரு தடவை அப்படி போய் நின்னேன்.. உடனே அவங்க அம்மா திரும்பி பாத்தது.. அந்த பொண்ணும் பாத்தது.. அதுக்கு பிறகு அந்தம்மா பேசின வார்த்தைகளை கேட்டு நான் மயங்கி விழாத குறை தான்

நீ கடைக்கார முத்துராசு மவன் தானே.. எப்படிப்பா இருக்க.. ராணி (அந்த பொண்ணு பேரு போல) இது உங்க அண்ணன்..

(ஒரே ஊர் என்பதால, கிறித்தவர்களாய் இருந்தாலும், பொண்ணு எடுக்கிறது, கொடுக்கிறது எல்லாம் நடக்கும்.. அப்படி எப்படியோ அந்த பொண்ணுக்கு நான் அண்ணன் ஆகிட்டேன்.. அதுக்கு பிறகு, கூட்டத்துல இருந்து நான் தனியா நழுவுறதே இல்லை)

14 பின்னூட்டங்கள்:

said...

Karthik Mams...thiruvizhavuku neenga porathe...dhavanigala parka thane...ellam sari....oru naal ella figurungaloda appavum ungala oodu kati adichaangalame.....andha matter enga kaanum....thani post-a poduveengala :)

said...

Mapla.. thiruvizhavukku Naan mattum illa, Neengalum porathu athukku thaane.. adi vankinEnaa.. enna prachchinai vanthaalum chamaalichchu vanthuruvomla.. bharani mamsna summava...

said...

//அப்பத்தான், உள்ள போறவங்களையும் பாக்க முடியும் வெளியே வர்றவங்களையும் பாக்க முடியும்.. //

Neenga namma aalaa?

said...

//பெரும்பாலும் இந்தமாதிரி கம்பியை நீட்டிட்டு போறது நானாத் தான் இருக்கும்..//

Rombathaan.. Illa rombathaan buthisaaliya irukkeengannu solla vandhen..

//கடைக்கார முத்துராசு மவன் தானே.. எப்படிப்பா இருக்க.. ராணி (அந்த பொண்ணு பேரு போல) இது உங்க அண்ணன்..//
Aapu aapu appidingaradhu idhaana..

said...

//ராணி (அந்த பொண்ணு பேரு போல) இது உங்க அண்ணன்..
//
ROTFL :) nalla kettiya? antha ponnu peru Asinnu sonnanga! :)

said...

bala, naama ellaam ore aaluthanappu..

said...

Aappellam kidaiyaathu sasi.. athukku special-a ambi irukkaru..vangurathukkum kodukkurathukkum

said...

enna ambi, un palaya gyabagam varutha.. eppadiththane asin unakku akka aananGka.. LOL :-))

said...

நீங்க என்ன சின்ன வயசுல இவ்ளோ enjoy பண்ணியிருக்கீங்க?? நல்லா எழுதியிருக்கீங்க..

//ராணி (அந்த பொண்ணு பேரு போல) இது உங்க அண்ணன்..
//

அந்த அம்மா செம விவரம் போல இருக்கு..உங்கள பத்தி தெரிஞ்சிட்டு safety measure எடுத்திட்டாங்க..

said...

//ராணி (அந்த பொண்ணு பேரு போல) இது உங்க அண்ணன//

I agree with sasi, ஆப்பு சூப்பரப்பு....சரி உங்களுக்கு அஸின்னு ஆண்டவன் விதிச்சு இருக்கும் போது எதுக்கு ராணி கோணி னுட்டு :-)

said...

priyaa.. chanc illatha enjoyment athuvum ononum marakkave mudiyaathu pOnga..

//அந்த அம்மா செம விவரம் போல இருக்கு..உங்கள பத்தி தெரிஞ்சிட்டு safety measure எடுத்திட்டாங்க.. //

athaavathu avanga ponnu ennai kandu mayingidumonno oru payam LOL :-))

said...

//உங்களுக்கு அஸின்னு ஆண்டவன் விதிச்சு இருக்கும் போது எதுக்கு ராணி கோணி னுட்டு//

shyaam, ungalukku kovil kattanumnu mudive pannitten, intha maathiri nadantha :-))

said...

ஆகா! இங்க ஒரு மலரும் நினைவுகளா!? நான் காலேஜுல படிக்கும்போது கோபிசெட்டிபாளையம் போயிருந்தேன் நண்பனோட வீட்டுக்கு, அப்ப பார்த்து ஊர்ல திருவிழா! நல்லா கும்மாளம் அடிச்சுட்டு வந்தோம்!

said...

ayyO..indian angel athellam chance illatha ninaivukal