Friday, September 29, 2006

பெஸ்ட் கண்ணா பெஸ்ட்

அண்ணா, உங்க வாழ்க்கைல நடந்த பெஸ்ட் என்னன்னா..பாசமுடன் கேட்டாள் தங்கை தீக்க்ஷன்யா.. கேட்டதோட நிக்காம, இது தான் என்னோட பெஸ்ட், உங்களோடத இதே மாதிரி வரிசை படுத்தி சொல்லுங்க அப்படின்னா. தங்கை பாசம் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழனுக்கே உரியது.. அப்படி தங்கை சொல்லை மீறாம வரிசைப்படுத்தியது தான் கீழே என்னோட பெஸ்ட் எல்லாம்..

1.The best thing to do - சும்மா மழைல நனைஞ்சு கும்மாளம் போடுறது..
2.The best gift - நல்ல நண்பர்கள்
3.The best thing I've ever heard - நானிருக்கேன் கவலைப்படாதே, நண்பர்கள் என்னிடம் சொன்னது
4.The best thing I've said - நானிருக்கேன் கவலைப்படாதே, நான் நண்பர்களிடம் சொன்னது
5.The best thing that happened to me - அமெரிக்காவுக்கு என் ஊரே சேர்ந்து வழியனுப்பியது
6.The best person I've met - சோமநாதன், என் முதல் கம்பெனியில் எனக்கு GL ஆக இருந்தவர்
7.The best friend - என் தந்தை
8.The best moment - முதன்முதலாய் நான் விமானத்தில் ஏறியதும், எப்படி இருக்குமோ என்று பயந்துகொண்டே அங்கிருந்த பணிபெண்ணை பார்த்து சிரித்ததும், (வழிஞ்சதுன்னு யாரும் கமெண்ட் போட வேண்டாம்) அந்த பெண்ணும் திரும்ப சிரிச்சது
9.The best book - கலைஞர் கருணாநிதி எழுதிய புத்தகங்கள் எல்லாம்
10.The best blog - நான் படிக்கிற எல்லாம் (உண்மையிலே, சமாளிக்க இல்ல)
11.The best place - என் ஊர் அ.வெள்ளோடும், அந்த சில்லுன்னு காற்று தரும் சிறுமலையும்
12.The best food - கெட்டித் தயிர் விட்டு வச்ச சாதமும், நெய் விட்டு வறுத்த கருவாடும் (நினைச்சாலே நாக்குல எச்சில் ஊறுதே)
13.The best song - ஆட்டோகிராப் படத்துல வர்ற ஒவ்வொரு பூக்களுமே
14.The best hangout - வேளச்சேரி, தண்டீஸ்வரம் நகர், மூன்றாம் தெருல, நாங்க தங்கியிருந்த வீட்டின் மாடிப் பகுதி தான் (புது வசந்தம் படத்துல முரளி மற்றும் எல்லோரும் தங்கி இருக்க மாடி மாதிரி)
15.The best eatout - சென்னைக்கு வந்த புதுசுல, MLA ஹாஸ்டல் பக்கத்துல சாப்பிட்ட கையேந்தி பவன்கள்..
16.The best hobby - அரட்டை அடிக்கிறது, அதுவும் சினிமா பத்தின அரட்டைனா வாய்கிழிய பேசுறது
17.The best TV show ever - விடாது கருப்பு
18.The best manager - நம்ம கடவுள் தான்
19.The best musician - இளையராஜா
20.The best gang - நண்டு சிண்டுகளாய் நாலஞ்சு வாண்டு சேர்ந்து வீட்லயோ வெளிலயோ லீவுல கொட்டம் அடிக்கிறது.. அந்த கேங் தான் பக்கா கேங்
21.The best drink - இளநீர்.. அதுவும் குடிச்சா அஞ்சு ஆறு தான்
22.The best quote - "நான் மாறும் போது தானும் மாறி நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்."
23.The best woman - என் தாய்
24.The best kid - சுஷ்மிதா (என் (சித்தி பெண்)தங்கை அருணாவின் பெண்)
25.The best poem - பாரதியின் எல்லாம், கண்ணதாசனின் தத்துவ பாடல்கள், வாலியின் சுலப வார்த்தை விளையாட்டுகள்
26.The best dancer - சின்ன குழந்தைகள் தள்ளாடி நடப்பது
27.The best movie - ஆட்டோகிராப்
28.The best actor - ஏதாவது திருட்டுத்தனம் பண்ணிட்டு அதை மறைக்க, வீட்ல தில்லாலங்குடி வேலை காமிக்கிற எல்லோரும்
29.The best vehicle - போன வருஷம் வாங்கிய SPLENDOR பிளஸ்
30.The best scene in a movie - தவமாய் தவமிருந்து படத்துல, தன் அப்பா அம்மாவை கூட்டிகிட்டு சேரன் போற சுற்றுலா காட்சி

எழுதி முடிச்ச பின்னாடி தான் தெரிஞ்சது, என்னோட பெஸ்ட் எல்லாம்.. அப்பா அம்மாவை ரொம்ப மிஸ் பண்றதால, நிறைய விஷயங்களில் அந்த தாக்கம் தெரிஞ்சது...

இதே விஷயத்தை நிறைய பேரை எழுத வைக்கலாம்னு பாத்தா பிரியாவும், தீக்க்ஷன்யாவும் நிறைய பேரை இந்த வளையத்துக்குள் இழுத்துவிட்டாங்க.. அதனால..அதனால.. பிரியா, தீக்க்ஷன்யா, அம்பி, பரணி, ஷ்யாம், சசி, நம்ம தலைவி கீதா, வேதா, பொற்கொடி, தி ரா சா சார், இந்திய தேவதை (IndianAngel), எல்லோரும் நீங்க கண்டதிலயே மிகக் கொடுமையான கனவை எழுதுங்க, நான் கண்ட கனவுன்னு..

எல்லாத்தையும் ஒண்ணா கோத்துட்டு விட்டேன்.. கொஞ்ச நாளா நிம்மதியா இருக்கலாம்..

32 பின்னூட்டங்கள்:

said...

கொசுவத்தி வாங்க, இதோ போய்க்கிட்டு இருக்கேன்.
என்கிட்டே(யே!) ஸ்டாக் தீர்ந்து போச்சு:-)))

நல்ல பதிவு

said...

appada 2nd 2nd.. irunga saptitu varen.. :))

said...

aahaa.. unga best moment iduva?? vazhinjinga enbadai vazhinjinga nu sollama enanu solradhu :)) kuzhandaigal nadai than best dance nu nan solla nenachen, seri karthikeyan sollatum nu vittu kuduthen ;)

nan kanda kanava!!!!!!!!! ada saami nane ida podrada than iruken, iduku oru taga? hmmmmmmm en kanavellam ketta ellarum alari adichu odiduvinga :D

said...

நன்றி துளசி.. நீங்களும் இப்படி எதையாவது சுத்தி விடுங்க, கொசுவத்தி வாங்கி வந்த பிறகு :-))

said...

பொற்கொடி, ரெண்டாவதா வந்ததால, ஏற்கனவே வாங்கிவச்ச புளியோதரையை அமுக்க போயாச்சா

said...

பொற்கொடி, வழியல அப்படிங்கிறத வழியலன்னு சொல்லாம வேற எப்படி சொல்றது...

நான் கொஞ்சம் பயத்தோட தான் காத்திருக்கேன், உங்க கனவுகளை பாக்க..

said...

//The best moment - முதன்முதலாய் நான் விமானத்தில் ஏறியதும், எப்படி இருக்குமோ என்று பயந்துகொண்டே அங்கிருந்த பணிபெண்ணை பார்த்து சிரித்ததும், (வழிஞ்சதுன்னு யாரும் கமெண்ட் போட வேண்டாம்) அந்த பெண்ணும் திரும்ப சிரிச்சது//-- Mams Idhai karpanai panni parkuren.....Vazhinjathunuthan sollanum....sirichathunu sollapadathu :)

//The best quote - "நான் மாறும் போது தானும் மாறி நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்."// - quote mams...quote..

//அப்பா அம்மாவை ரொம்ப மிஸ் பண்றதால, நிறைய விஷயங்களில் அந்த தாக்கம் தெரிஞ்சது...//...correct...US kelambum pothu onnum theriyarathu illa...aana inga vanthatuku appuram konjam kastamathan iruku :(

said...

Yappa Quote ellaam engappa pudikkiringa.. SShhh..

//நானிருக்கேன் கவலைப்படாதே//
Nanbanin nambikkayana vaarthaigala vida best tonic vera edhuvume kedaiyaadhuppa.

Kalaingar eludhinadhula 'Ponnar Sankar' mattum thaan padichu irukken. Vera enna books irukkunnu list out pannunga.

//ஏதாவது திருட்டுத்தனம் பண்ணிட்டு அதை மறைக்க, வீட்ல தில்லாலங்குடி வேலை காமிக்கிற எல்லோரும்//
Anubavam pesudhunappo.

said...

//எல்லோரும் நீங்க கண்டதிலயே மிகக் கொடுமையான கனவை எழுதுங்க// Idhu yaarukku dhandanai.. Padikkiravangalukka, eludhuravangalukka.

Anonymous said...

//The best actor - ஏதாவது திருட்டுத்தனம் பண்ணிட்டு அதை மறைக்க, வீட்ல தில்லாலங்குடி வேலை காமிக்கிற எல்லோரும்//

seriya sonneenganna... :)

//The best dancer - சின்ன குழந்தைகள் தள்ளாடி நடப்பது// nalla rasanai ungalukku...

last 2 postla comments poda mudiyalaye...some errornu sollichhu namma gumbooter...seri indha dhadava pottudalaamnu... :))

said...

LOL, (with curiosity)entha flight service? Emiratesaa? athaan superrra irukkum. Flight servicea thaan sonnen.

nice written. one more tag..? Ufff..
porkodi will write on behalf of me. :D

said...

//1.The best thing to do - சும்மா மழைல நனைஞ்சு கும்மாளம் போடுறது..

Super tag! naanun idhadhaan sollalannu irundhen neenga mndhikiteengale! :)

said...

//Vazhinjathunuthan sollanum....sirichathunu sollapadathu//
என்ன மாப்ள..நீயே இப்படி சொன்னா எப்படி

said...

//Yappa Quote ellaam engappa pudikkiringa//

sasi, கூடிய சீக்கிரம் ஒரு பெரிய லிஸ்டே போடுறேன்.

//Vera enna books irukkunnu list out pannunga.//

sure..i will list out this too

said...

//Padikkiravangalukka, eludhuravangalukka//

ரெண்டு பேருக்குமே, சசி

said...

//nalla rasanai ungalukku//

நன்றி கோல்மால்..

said...

//entha flight service? Emiratesaa? athaan superrra irukkum//

ஃபர்ஸ்ட் நான் போனது ஜெட் ஏர்வேஸ், அம்பி. விச இன்டர்வியுக்காக டெல்லி போனேன்.. போறப்ப எல்லாமே பொண்ணுங்க..வர்றப்ப எல்லமே பையனுங்க.. செம்ம போர்.. :-((

said...

//Super tag! naanun idhadhaan sollalannu irundhen neenga mndhikiteengale//

cheekkiram unGka kanavai ezhuthunga IA

said...

oh, dheekshanya unga thangai-ya? okie!!

said...

ama usha.. en kooda pirakkalainaalum vaazhra thangachchi.. :-))

said...

அம்பி, முதல்ல பேசின பதிவ போடுங்க.. X-(

said...

நல்லா எழுதியிருக்கிங்க.
Best moment ஒரே காமெடி..
ஒவ்வொரு பூக்களுமே எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

கனவா, எனக்கு வரவே வராதே? நீங்க முதல்ல எழுதிட்டு தான் மத்தவங்கள tag பண்ணனும்.

said...

ambi, mothalla poRkodikitta chonna pathivap pOduppa..

said...

Thanks priyaa..

Naan already kanavu paththi oru periya pOstE ezhuthiyaachchu..

inga pOy padingka en kanavukalai
http://mkarthik.blogspot.com/2006/06/blog-post_21.html

said...

//The best thing I've said - நானிருக்கேன் கவலைப்படாதே, நான் நண்பர்களிடம் சொன்னது//

அதுதான கவலையேனு அவங்க சொல்லலயே :-)

//இருக்குமோ என்று பயந்துகொண்டே அங்கிருந்த பணிபெண்ணை பார்த்து சிரித்ததும், (வழிஞ்சதுன்னு யாரும் கமெண்ட் போட வேண்டாம்) அந்த பெண்ணும் திரும்ப சிரிச்சது//

இது அசின்க்கு தெரியுமா... :-)

said...

//இது அசின்க்கு தெரியுமா//

ithellaam medathukku theriyaamal cheyra kurumbukal :-))

said...

அட அட கார்த்தி சூப்பர் டேக், ஆனா ஏற்கன்வே ரெண்டு டேக் க்யூல இருக்கற்தனால கொஞ்சம் அட்ஜீஸ் பண்ணிக்கோங்க:) அப்புறமா போடுறேன்:)

said...

இப்போதான் ஒரு சங்கிலி முடிஞ்சது, மறுபடி இன்னொண்ணா? தாங்கலை, உங்க எல்லாரோட ஆப்பும். நறநறநறநற :D

said...

Anna
Am honoured.. So happy that we are still in touch,even though we met last some 3 years back in Chennai in Patni.I still remember how we got to know each other.. Golden days. thanks for ur 'BEST's.. Loved it!

said...

porumaiyaave podunga vetha..avasaram illa

said...

aappellam illai thalaiviye.. chumma ungalaiyum link koththuvidalamnu..hehehe

said...

Oh..thanks sister..