Wednesday, September 06, 2006

தாவணி போட்ட தீபாவளி

தழைய தழைய பாவாடை தாவணி, கூந்தலில் ஒற்றை ரோஜாவோ, இல்லை ஒரு முழ மல்லிகை பூவோ, இரு வில்லெனும் புருவத்தை பூட்டி வைத்திருக்கும் சாந்து பொட்டு, காதோரம் லோலாக்கு, எந்தப் பவுடரும் போடாத முகம், பாக்குற நம்மளை பவுடராக்கும் முகம், இது தமிழ் பெண்களின் அழகு.. எந்த உருவதிற்கும் சட்டென பொருந்திவிடும் உடை தாவணி.. இந்த தாவணிக்கு இருக்கும் அழகு சேலைக்கு கூட இல்லை.. எனக்கு ஆனந்தம் படத்துல, சிநேகா போட்டு வர்ற தாவணி காம்பினேஷன் ரொம்ப பிடிக்கும்.. (சிநேகாவையும் தான்)

ஆனா இந்த வாரம் நியுயார்க் போயிருந்தப்போ, தாவனி ந்போட்ட இந்திய பெண்கள் மட்டுமல்ல.. நாங்களும் அழகு தான் என்பது போல் இருந்தார்கள் நியுயார்க் பெண்கள். நான் போயிருந்த முதல் நாள், சனிக்கிழமை ஒரு மழை நாள்.. எல்லா வீதிகளிலும் நடந்தே சென்றோம்.. மழையில் நனைந்தே சென்றோம். அது உண்மையில் ஒரு இனிய அனுபவம்.. நிறைய விஷயங்களை உன்னிப்பாக கவனிக்க முடிந்தது. கலர் கலராய் ஒரு கையில் குடை.. லெதர் ஷூ.. முழுக்கை ஜெர்கின், முழங்கால் வரை.. தோளில் விழுந்து புரளும் அலை அலையான செந்நிற கூந்தல்.. காதில் சின்னதாய் ஒரு தோடு (ஸ்டட்). கண்களில் பழைய MGR காலத்து நாயகிகளின் பெரிய அளவு கண்ணாடி..ஒரு நளின நடை.. இதுவரை கிணற்றுத்தவளையாய் இருந்துவிட்டேனோ என்று மனம் வருந்தும் அளவு அழகழகாய் பெண்கள்.. மழையில் நனையும் ரோஜாக்கள் போல..

ஒரு உண்மை மட்டும் புரிந்தது.. இந்தியா என்றாலும், அமெரிக்கா என்றாலும், ரோஜா ரோஜா தான்.. அழகு அழகு தான்..

நான் சென்ற இடமெல்லாம், எழுபது சதவீதம் இந்திய மக்களே.. தங்கள் அம்மா அப்பாவை இங்கே கூடிவந்தவர்கள் அழைத்து சென்று காண்பிக்க இது மாதிரி மூன்று நாட்கள் போதுமானவை.. ஒரு இடத்தில் அங்கிருந்த காவலாளி கேட்டே விட்டார்.. என்ன இன்று இந்திய மக்களின் கூட்டம் இவ்வளவு என்று..அந்த அளவு நம்ம மக்கள் கூட்டம்..

ஒரு மரங்கள் உயர்ந்த காடுகளில் போகையில் எப்படி மரங்களை அண்ணந்து பார்த்து ஆச்சரியப்படுவோமோ அது மாதிரி, இங்கே கான்கிரீட் காடுகள்.. ஒவ்வொரு கட்டிடமும் அடுத்த ஒன்றுக்கு சளைக்காமல், உயர்மாய், விண்ணை துளைத்து இருக்கிறது.. எல்லா இடத்திலும் பணம் நன்றாகவே பாய்ந்திருக்கிறது.. முதன்முதலில் 2001-ல் சென்னை வந்த போது எனக்கு LIC யே மலைப்பை இருக்கும்.அண்ணா சாலையே சொர்க்கமாய் தெரியும்..
அதுவும் சுதந்திர தேவி சிலைக்கு படகில் போகும் வழியில் நியுயார்க்கை பார்த்தால் நமது கண்களெல்லாம் அளவை மீறி விரிய வேண்டி இருக்கும்... ஆனால் அங்கே வானத்தை தாங்கி கொண்டு உயரமாய் நின்ற உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.. நினைத்து பார்த்ததை அந்த கட்டிடங்கள் இருந்த இடத்துக்கு சென்ற போது போட்டோவில் பார்த்த போது, என்னையும் மீறி நெஞ்சம் கலங்கியது.. ஒரு தீவிரவாத எண்ணத்தின் விளைவு எப்படி இருக்கும் என்று கண்முன்னே பார்த்தபோது, எதிர்கால உலகை நினைத்து அஞ்சாமல் இருக்க முடியவில்லை.

24 பின்னூட்டங்கள்:

said...

ஏங்க தாவணியில் ஆரம்பித்து...
சோகத்துல கொண்டுமுடிக்கிறீங்களே!!
இது உங்களுக்கே நல்லா இருக்கா??
:-))

said...

nalla ezhuthura baa

said...

//இந்தியா என்றாலும், அமெரிக்கா என்றாலும், ரோஜா ரோஜா தான்.. அழகு அழகு தான்..
//

appadi podu aruvalaa! mothathula joollings of India pannitu vanthrukka. superrrr writing! ;)

said...

Verum article mattum pota eppadi.. photos onnum illaya.. OOti photos maadhiri ungaloda photos mattum podaama konjam Newyork cityum kannula kaatunga.

Alagu dhaavaniyaa shortsaa appidingaradha vida paakura kannula thaan irukku.. Ellathaium alagaa paakuravangalukku, ellaame alagaathaan therium.

said...

குமார், கொஞ்சம் வித்யாசம எழுதலாமேன்னு தான்.. முதல் வருகைக்கு நன்றி

said...

நன்றி குரு..ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வர்றீங்க போல

said...

நன்றிங்க அம்பி.. என்ன பண்றது..அங்க போய் ஒரே ஜொள்ளு மழை தான்.. ஆன நீங்க பஞ்சாபி குதிரையை பார்த்து விட்ட அளவு இருக்காது

said...

எதிர்பாருங்கள் சசி..விரைவில் புகைப்படங்கள்..

said...

yow! vidungayaa! side gapula santro ottiruveengale! :)

said...

பெண்கள் எங்கே இருந்தாலும் அழகு தாங்க:) நல்லா தான் சுத்தி பார்க்குறீங்க:)

said...

ambi..yen yen eppadiyoru tension.. koodiya viraivil ethirparungal ungal paththiya oru post.. aapu vaikkira post..

said...

உண்மை உண்மை உண்மை வேதா.. ஆமா, நான் ஊரை சுத்தி பாத்ததை தானே சொல்றீங்க

said...

நல்லா எண்ஜாய் மாடி....என்ன இன்னும் கொஞ்சம் சம்மர் இருக்கும் போதே வந்து இருந்தீங்கனா கண்னுக்கு நல்லா இருந்து இருக்கும்... :-)


//பெண்கள் எங்கே இருந்தாலும் அழகு தாங்க//

வேதா உள்குத்து ஒன்னும் இல்லயே :-)

said...

You have expressed your varied emotions (from jollu to fear of terrorism) very nicely.
title write-up kku suit agadha madhiri thonudhu enakku. Lot of stuff inside. Title indicates only a bit of it.

Expecting more posts with pics.

said...

aama shyam, Nalla enjoy panninen..Neenga enga poneenga, long weekend

said...

priya, just to attract readers only, i have titled as this..

said...

//Neenga enga poneenga, long weekend//

yenga unga nakkaluku oru alave illaya...naan thaan diaper change la busy ye :-)

said...

achchoo..Sorry paa

said...

i was also in NY on last saturday...i was looking for ppl..whom i know....but i dont find anyone...including u...so sad :(

said...

oh bharani.. miss pannittOma.. rendu perum meet panra chance-a..che.. marupadiyum eppadiyoru chance kidaikkumaa..parpom

said...

சினிமாவுல Directorial Touchனு ஒரு பதம் இருக்கு. டைரக்டர் தன்னோட தனித்தன்மையை அங்கங்கே காட்டுவாரு...அது போல உங்கப் பதிவுலயும் அங்கங்கே டச் பண்ணியிருக்கீங்க :)

//ஒரு நளின நடை.. இதுவரை கிணற்றுத்தவளையாய் இருந்துவிட்டேனோ என்று மனம் வருந்தும் அளவு அழகழகாய் பெண்கள்.. மழையில் நனையும் ரோஜாக்கள் போல..//
ஜொள்ளு...ஆனாலும் ரசிக்கும்படியா இருக்கு.

//ஒரு உண்மை மட்டும் புரிந்தது.. இந்தியா என்றாலும், அமெரிக்கா என்றாலும், ரோஜா ரோஜா தான்.. அழகு அழகு தான்..//
இது பிலாசஃபி

//ஒரு தீவிரவாத எண்ணத்தின் விளைவு எப்படி இருக்கும் என்று கண்முன்னே பார்த்தபோது, எதிர்கால உலகை நினைத்து அஞ்சாமல் இருக்க முடியவில்லை.//
இது ஃபீலிங்ஸ்

நல்லாருந்ததுங்க.
:)

said...

பாலிஷ்டா சைட்டு + ஜொள்ளு.. நடத்துங்க..

said...

ரொம்ப நன்றி கைப்புள்ள.. எவ்வளவு பாராட்டுக்கு நான் தகுந்தவனான்னு தெரில.. ஆனா இப்படி எழுத தான் எனக்கு ஆசை..

said...

இப்படி எல்லாம் சபைல பட்டுன்னு போட்டு உடச்சுடக்கூடாது பொற்கொடி..