Thursday, September 14, 2006

வேட்டையாடி விளையாடி...

ஒவ்வொரு வருசமும் எப்படா கால்பரீச்சை, அரைப்பரீச்சை, முழு பரீச்சை லீவு வரும்னு தவமா தவங்கிடப்பேன்.. அந்த மாதிரி லீவு நாள்ல சிறுமலை அடிவாரத்துல இருக்கிற என் அண்ணன் தோட்டதுல போய் ஆட்டம் போட. எங்க அண்ணன் தோட்டம் கிட்டதட்ட சென்னை சேப்பாக்கம் கிரிகெட்டு கிரவுண்டை விட கிட்ட தட்ட பத்து மடங்கு பெருசு..பெரும்பாலும் பாதி தோட்டத்துக்கு திராட்சை தான் போடுவாங்க.. கொஞ்சம் செவ்வந்தி பூவும், வாழையும் கூட போடுவாங்க..

அந்த சுகமான காத்து வேற எங்கேயும் கிடைக்காது.. எல்லாமே தோட்டதுக்குள்ளயே இருக்கும்.. பசிச்சா வாழத் தோட்டத்துல புகுந்து ஒரு சீப்பு பழத்தை காலி பண்ண வேண்டியது தான். தண்ணி தாகமாய் இருந்த என் அண்ணன் தோட்டதுக்குள்ள இருக்கிறவரை தண்ணி குடிச்சதில்லை.. நாலஞ்சு இளநீர் தான்.. தோட்டதுக்கு தண்ணி பாய்ச்சுறதுக்கு ஒரு பெரிய தொட்டி ஒண்ணு கட்டி இருப்பாங்க. கிட்டதட்ட 12 இஞ்ச் அகலமும் 10 இஞ்ச் நீளமும் இருக்கும்.. குளிக்கணும்னு போயிட்டா கிட்டதட்ட ஒரு மூணு மணிநேரம் உள்ளார இறங்கினா வெளியில் வர்றதே கிடையாது. எங்க பாட்டி கூட, எரும மாடு மாதிரி தண்ணிகுள்ளாறயே பொழுதுக்கும் கிடைகிறாய்ங்க பாரு..ன்னு அந்த பக்கம் கிராஸ் பண்றப்பவெல்லாம் திட்டும். அது தூரத்துல வர்றதை பாத்தாலே நாங்க தண்ணிகுள்ள போய் மறஞ்சுக்குவோம்.. பாட்டியோ விவகாரமானது. உள்ள மறஞ்சிருக்கோம்னு தெரிஞ்சாலே போதும். ஒரு குச்சியை எடுத்துகிட்டு அடிக்கும்..

அப்படி குளிச்ச பின்னாடி, திராச்சை தோட்டதுக்கு காவலுக்கு போய்டுவோம். திராச்சை தோட்டதுக்கு நடுவுல பரண் ஒண்ணு இருக்கும். அதுல ஆரம்பிச்சு திராச்சை தோட்டதோட எல்லா பக்கமும் கம்பி போகும். கம்பிக்கு இடைல, ஒரு தகர டப்பா கட்டி அதுக்குள்ள கொஞ்சம் கல்லை போட்டு தொங்கவிட்டு இருப்போம். காக்கா மாதிரி எதும் பறவைகள் திராச்சையை கொத்த வந்தா உடனே அந்த பக்கம் போகும் கம்பியை பிடிச்சு ஆட்டுவோம். உடனே பயங்கரமா சத்தம் வரும். எல்லாப் பறவையும் ஓடிடும். இது தான் நம்மளோட டூட்டி அங்கே. வள்ளிக் கதிரை காவல் இருக்கிற மாதிரி நாங்க திராச்சையை காவல் இருப்போம்.

ஆனா அப்போ மதியான சாப்பாடு வருமே அது தன் ஹைலைட்டு.. ஒரு மண்சட்டியில எருமை தயிர் விட்ட கெட்டி தயிர் சாதம்.. சும்மா கொழ கொழன்னு.. இன்னொரு சின்ன பாத்திரத்துல கும்முன்னு வாசனை வர்ற, நல்ல காரம் போட்ட நெய்க் கருவாடு.. சும்மா ஒரு கட்டு கட்டுவேன்.. அதுவும் மூணு மணி நேரம் குளிச்சதுக்கே கொலைப் பசி இருக்கும். இந்த காம்பினேசனுல, சாப்பிட்ட, சரியான டேஸ்டா இருக்கும். இன்னிக்கு வரைக்கும் அந்த காம்பினேசனை அடிசுக்க வேற எதுவுமே இல்லை.. இதை எழுதறப்ப கூட, மனசு அதுக்காக ஏங்குது.. சே.. என்ன ஒரு ரம்மியமான வாழ்க்கை அது..

என் நண்பர்கள் யாராவது வந்தாலே நான் அவங்களை அண்ணன் தோட்டதுக்கு கூட்டிட்டு போய்டுவேன். அப்படித்தான் என் கல்லூரி நண்பர்கள் கிரிஷ்ணகுமாரும், பார்த்தாவும் வந்து இருந்தாங்க.. நாங்க என் அண்ணன் கூட வேட்டைக்கு கிளம்பினோம். மதியான நேரம். ஒரு பறவையை கூட காணோம். என் அண்ணன் என்கிட்ட துப்பாக்கியை கொடுத்துட்டு ஏதாவது அடிச்சுட்டு வாங்கடான்னுட்டு போய்ட்டாரு. கொஞ்ச நேரத்துக்கு பிறகு, ஒரு மரத்துல நல்ல உயரத்துல ஒரு பறவை வந்து உட்காந்துச்சு. எங்கலுக்கு ஒரே மகிழ்ச்சி.. வேட்டைதுப்பாக்கில சாதாரணது மாதிரி ஒரு குண்டு கிடையது.. சின்ன சின்னதா நிறைய போடுவோம். அதனால குத்துமதிப்பா குறி பாத்து சுட்டா போதும்.. குறி பாத்து சுட்டோம்.. அதிசயம்.. அந்த பறவையும் அடிபட்டு கீழ விழுந்துடுச்சு.. ஐயோ.. எங்க எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம்.. ஒரே சத்தம் தான்.. சந்தோசத்துல மேல கீழன்னு குதிச்சோம்.வேகமா ஒடிப் போய் அந்த பறவையை தூக்கிகிட்டு என் அண்ணன் கிட்ட ஓடினோம். அவருகிட்ட காட்டினோம்.. அவர் கேட்ட கேள்வில எங்க முகத்துல ஈயாடல..என்ன கேட்டருனா..என்னடா இது ஆந்தையை சுட்டு கொண்டு வந்துறிகீங்க.. அதுக்கு பகல்ல கண்ணு தெரியாததாலா.. இதை கேட்டவுடன், சந்தோசமெல்லாம் போய், ஆட்டமெல்லாம் நின்று, டமால் டமால்னு எங்க இதயம் உள்ளுகுள்ள வெடிச்ச சத்தம் கேட்டது..

21 பின்னூட்டங்கள்:

said...

enna karthik ore oor kadhaigal...after coming to US...nan kooda ennoda friend ooruku poi avanga thoppuku ponappa appadi than....thagama irukuna udane elani than...antha thanni thotiyila pota attam innum marakala....chance illanga....never get that life back :)

said...

aNtha maathiri vaazhaththaan mudiyala.. athukku vadikaalkaL thaan intha maathir post.. hmm.. athu oru kanaak kaalam...

said...

Bharani, appadiye ninaiththu enjoy pannunga.. antha pump set kuliyalaiennikume marakka mudiyaathu

said...

nice memories. vry well written, with apt words. kalakara karthik.

but thayir sathathuku vadu maanga or oil vittu, kaaram potta maanga urukaai thaan enakku therinju best combo! (he hee, asin kooda paadi irukaale)
but hunting ellam too much. paavam illa antha birds. namma kushi(?) kkaga athuga uyir thaana kidachathu? if it is vice versa, say dinosour, namakku epdi irukkum?
inime ipdi ellam pannatha sariyaa?

said...

அண்ணே, சத்தமா சிரிச்சுட்டேன், கடைசி para படிக்கும்போது.office-ல எல்லாரும் திரும்பி பார்த்துட்டாங்க! பரவாயில்லை,its all in the game. சின்ன வயசு நியாபகங்கள் எப்போதுமே அருமையா இருக்கும்!
I truly loved this post!keep writing more!
-deeksh

said...

Correct Ambi. My friend also used to tell that combo. But I liked karuvaadu+thayir satham also.. taste differs fom ppl to ppl..

hunting..ha haa..athu romba kaalathukku munnadi pOnathu ambi.. eppo forest officers kidupidinaala, porathula.. inimelum pokaporathillai okya.. :-))

said...

Thanks ma Thangachchi.. enakku intha maathiri sutti thanama velaikalna romba pidikkum.. sure.. I will post more ma..

Anonymous said...

Thala looks dashing...see the stills for yourself...
AAZHWAR STILLS from VIKATAN

http://www.vikatan.com/av/2006/sep/24092006/p156.jpg

http://www.vikatan.com/av/2006/sep/24092006/p156a.jpg

http://www.vikatan.com/av/2006/sep/24092006/p157.jpg

http://www.vikatan.com/av/2006/sep/24092006/p157a.jpg

http://www.vikatan.com/av/2006/sep/24092006/p158.jpg

said...

ஐயோ வேட்டை அது இதுனு சொல்லி ஊர ஞாபக படுத்திட்டீங்களே...ஏற்கனவே ஊர்ல எல்லோரும் எண்ஜாய் பண்ணிட்டு இருக்காங்களேனு புகைல இருக்கேன் இதுல உங்க போஸ்ட் எறியர தீல ஸ்பீடு பெட்ரோல் ஊத்திருச்சு :-)

said...

பதிவு ரொம்ப நல்லா இருக்கு! nostalgia! பழைய ஞாபகங்களை கிளரிவிட்டுடீங்க! :)

said...

cinema ல வர மாதிரி இருக்கு உங்க experience..அதுவும் துப்பாக்கி வச்சி வேட்டையாடரது...உங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும் போல இருக்கு.

said...

ஆமா ஷ்யாம்.. அதை ஏன் கேக்குறீங்க.. ஒவ்வொரு நாளும் ஊருக்கு போன் பண்றப்போ எல்லாம் எதாவது கதை சொல்றப்போ எல்லாம் என் கதுல இருந்து புகை தான் வ்ரும்.. பசங்க நல்ல எஞ்சாய் பன்றாங்க

said...

ஹ்ம்ம்ம்.. கிராமம் என்னிக்குமே அழகு தான்.. பம்ப் செட் சரி ஆத்துல குளிச்சது இல்லியா? ஆனா வேட்டை எல்லாம் ரொம்ப ஓவர்.. :( பாவம் இல்ல பறவை.. அம்பி அண்ணா சொன்ன மாதிரி இனிமே பண்ணாதீங்க.. :((

said...

muthal visituku thanks indianangel.. amaa.. its nothing but walking down in our memory lane

said...

Thanks for links Leo.. Thala is radiating in those pictures

said...

ayyO priyaa.. enna ithu.. vEttaiyai paththi chonna udane alalalukku back adikireenga payaththula.. Naan paravaiyai thaan sutten.. ungalai ellam suda maatten

said...

porkodi, unga annaaththa sonna maathiri irunthukiren.. avar en solraarnu theriyutha...

machchaan thaana mappillai yoda uchurukku poruppu.. enakku ethavathu nadantha ambi akka asin pavam la..athu thaan.. chE.. akka mela enna oru paasam ambikku

said...

Karthi.. Yappa.. Enakku oor gyabagam vandhiduchu.. Ungalukku thair saadham karvaadunnaa, enakku chola koolum, achuvellamum.. Appuram kammanjoru thair vittu pachai vengayam kadichikkittu kudikkanum.. Enga periyamma naan varenu therinjale ellaam ready panniduvaanga.. Naan saapiduradha paathu periyamma, akka ellaarum nalla sirippaanga..
Angaum oru periya thotti, nandu sindugaloda enga akkas ellarum sendhu neechal adippom.. Naan swimmingla konjam weak.. romba neram dhum katta mudiyaadhu..
Appuram andha pakkam tobacco vellamai adhigam.. So adha padha paduthura velai irukkum.. oru sidela irundhu innoru side maathi potu adukkanum.. Smell romba kaatama irukkum.. Andha roome romba heataa irukkum. Irundhaalum poti potuttu velai seivom..
Malai kaalathula kodai kaalan thedittu vandhu varuthu saapiduvom.
Puliyangai eduthu uppu vechu oraichu saapiduvom.. Season wise mathavanga thotathula pugundhu edhaavadhu suttuttu varuvom..
Erumai savaari, Panai maram eri vilundhadhu.. Innum neriyaa irukku.
Ulla thoongittu irundha gyaabagangala kelappi vittuteengale..

said...

@Syam, pogachal listla ennaium sethukkonga.. But enna oru vishayamnaa, naan innikku nenaichaalum oorukku poven.. Unga rendu peraalaum mudiyaadhe.. Jolly Jolly..

said...

sasi..cool.. romba enjoy thaan pannuva pOla oorla.. Good

said...

sasi, oor Ekkaththoda irunthu, appuram oorukku pora antha santhosam, thirupthi, enakkum shyamukkum kidaikkum..unakku kidaikkaathula