Friday, December 29, 2006

மறக்க முடியாத 2006

இந்த வருஷம் எனக்கு மிக மகிழ்வான வருஷம். நினைத்தற்கும் வரமாய் கேட்டதற்கும் அதிகமாக ஆண்டவன் அருள் தந்து, என் உள்ளே சக்தியாய் புகுந்தி எல்லாவற்றையும் நடத்தி கொடுத்த வருடம்..

கிட்டதட்ட ஏழு வருடங்களுக்கு முன்னால் வேண்டிய ஒன்றை திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் நடத்தி கொடுத்ததால், இந்த வருடம் பிப்ரவரி மாதம் கோயில் திருவிழாவின் போது தீச்சட்டி எடுத்தேன். ஒவ்வொரு வருடமும் தள்ளிப் போய் இந்த வருடம் தான் இதை எடுக்க முடிந்தது.அம்மனுக்கு என் நன்றியை அளித்தேன்.. பெரியதொரு உள்ளக் கவலை ஒன்றை அம்மன் சன்னிதியில் இறக்கி வைத்தேன். அதனால் இது மறக்க முடியாத ஆண்டு..

இந்த வருடம் மே மாதம் என் அலுவலகத்தில் சேர்ந்து ஒரு வருடம் ஆனதால் கன்பார்ம் ஆகி, 5/5 என்று ரேட்டிங்கும் கிடைத்த வருடம்..அதனால் இது மறக்க முடியாத ஆண்டு..

ஒரு அண்ணனாய் இருப்பவனுக்கு இருக்கும் கடமை..தங்கை கல்யாணம்..அதுவும் இந்த வருடம் ஜூன் மாதம் 28-ல் கல்யாணம் நடந்தது ஆண்டவன் அருளால்..அடுத்த வருடம் மாமா புரோமோஷன் வேற வெயிடிங்க்..அதனால் இது மறக்க முடியாத ஆண்டு..

அதிகம் தேடாமல் ஆண்டவன் தந்தது இந்த அமெரிக்க வாசம்.. அதுவும் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 17-இல் நடந்தது.. எத்தனையோ கனவுகள் இருந்தாலும் வாழ்கையில் இதுவெல்லாம் ஒரு தனி கனவு.. இதையும் அந்த வடபழநி ஆண்டவன் நடத்தித் தந்தான்.. அதனால் இது மறக்க முடியாத ஆண்டு..

சினிமாக்களிலும் அலுவலகத்தில் மேனேஜர் கையிலுமே பார்த்த வந்த மடிக்கணினி இப்போ நம்ம மடிலையும்..வந்தது அமர்ந்தது இந்த வருஷத்துல தான்

எபோதோ சின்னதாய் ஆரம்பித்து, ஆர்வங்கள் பெருகி, இப்போது புதியதாய்..ஆல விழுதுகளய் நன்பர்கள் கிடைத்து, மன மகிழ வைத்த இந்த பிளாக் உலகம். எத்தனை நண்பர்கள்..எத்தனை திசைகள்..ஒவ்வொரு டிகிரியிலும் பல நண்பர்கள்.. இந்த வருட ஆரம்பத்தில் பின்னூட்டங்கள் இல்லாமல், தண்ணியில்லா ஏரியை போல் கிடந்த இந்த பக்கத்தை பார்த்து, மாரி மழை பெய்யாதோ என்று நினைத்திருக்கிறேன்.. கனவுகள் பெரிய கனவுகள் கண்டிருக்கிறேன்.. இப்போது இந்த வருடக் கடைசியில் அதை திரும்பி புரட்டி பார்த்தால் இந்த தொட்டு விட்ட தூரம் உள்ள உவகையே தருகிறது.. தொட்டெழுந்து பார்த்தால் போகும் தூரமும் நிறையத் தான் இருக்கிறது.

இந்த வருடத்தில் தான் பதிவுகள் எண்ணிக்கை சதமடித்தது.. சேவாக்காகி 300ம் அடித்தது.. பின்னூட்டம் எழுபதையும் தாண்டியது.. முருகன் மாதிரி என் நாடு என் மக்கள் னு ஒரு அமைச்சரவையும் உண்டாகி..ஹிஹிஹி..நமக்கு நாமே முடியும் சூட்டியாச்சு... இதோ அடுத்த மந்திரிசபை விரிவாக்க வேலையும் போயிகிட்டு இருக்கு.. இப்படி பரபரன்னு வாழ்க்கை பதிக்க ஆரம்பிச்சதும் இந்த வருஷத்துல தான்

எழுதிய பதிவுகளை திரும்பி பார்க்கையில், ஆதரவான ஒரு கை தலையை கோதி விடுகையில் கிடைக்கும் ஒரு ஆனந்த மயக்கம், சந்தோசம் உள்ளத்திலே பரவிக் கிடக்கிறது.. ஆனால் நிறைய சினிமா பத்திதான் எழுதி இருக்கிறோமோ என்று ஒரு நெருடல் இருக்கவே செய்கிறது.. அதையும் வருகின்ற 2007-இல் சரிப் படுத்த முயல்வேன் என்று ஒரு நம்பிக்கை இருந்தாலும், சினிமாவே இல்லாமல், தண்ணீரே இல்லாமல், இருக்க முடியாது என்றும் ஒரு எண்ணம் இருக்கிறது.

நண்பர்களே, வருகின்ற 2007 உங்களுக்கு பொன்னான வாழ்க்கையையும் புதுவேக உற்சாகத்தையும் தந்து, உடல் ஆரோக்கியமும், வெற்றி ஏணிகளில் ஏற்றம் என்று மகிழ்வை தர வாழ்த்துக்கள்.

எல்லோருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Thursday, December 28, 2006

உங்ககிட்ட இளையராஜாவோட அரிய பாட்டு ஏதும் இருக்கா?

இசைஞானி இளையராஜா இசையமைத்த எல்லாப் படங்களிலிருந்தும் பாடல்களைத் திரட்டும் பணியினை என் நண்பர்களோடு நானும் செய்து வருகிறேன். இளையராஜா பற்றியும் அவரது இசை ஞானம் பற்றியும் அதிகம் சொல்லத் தேவை இல்லை.. அவரின் எத்தனையோ பாடல்கள் நம் உள்ளம் முழுவதும் கேட்காத பொழுதும் பரவி கிடக்கிறது. அதுவும் அவர் எண்பதுகளில் இசையமைத்த எத்தனையோ பாடல்கள் இன்று கேட்டாலும் கேட்கின்ற காதுகளில் ஈ மொய்க்கும் சுவை மிகுந்தது. அதுவும் இளையராஜா எஸ்பிபியோடி இணைந்து கொடுத்த மெலடி பாடல்கள் பல நமது தனிமைக்கு துணையாய் இருந்திருக்கிறது.

அவரின் பாடல்கள் சேகரிக்கும் பணியிலே இருந்ததால், கடந்த ஒரு மாத காலமாய் வெறும் சினிமா பதிவுகளை மட்டுமே பதித்திருக்கிறேன். பல்சுவை விரும்பிகள் பலர், மனதுக்குள் என்னடா இவன் இப்படி சினிம பதிவாய் போடுகிறானே என்று நினைத்து கூட இருப்பார்கள். இப்போது கிட்டதட்ட பாடல் சேகரிக்கும் பணி முடிவடையப் போகிறது. இந்த தொண்ணூறு சதவீத பாடல்களை தேடுவது பெரிய வேலையாய் இல்லை. ஆனால் மிச்சமுள்ள 550 பாடல்களை சேகரிப்பது தான் மிகவும் கடினமாக உள்ளது.. அதுவும் சத்யராஜின் அமைதிப் படை படத்தில் இரண்டு பாடல்கள் தவிர வேற எதையும் எந்த வளைதளத்திலும் தரவிறக்கம் செய்ய முடியவில்லை.

அப்படிப்பட்ட சில பாடல்கள் உங்களிடம் இருந்தால் அதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். அட..நீங்க வேணும் என்றாலும் எங்க கிட்ட கேளுங்க.. இந்த புத்தாண்டிலிருந்து சினிமா பதிவுகள் மட்டுமல்லாது மற்ற பதிவுகளையும் பழைய வேகத்தோடு தருவேன் என்றும் நினைக்கிறேன்.

சில விட்டுப் போன பாடல்களும் படங்களும்

உன்னைத் தேடி வருவேன் மாலை முதல்
ஒரியா ஒரியா
ஒரு நாளில்
வழியா வந்த
ஏண்டியம்மா

உள்ளே வெளியே ஆரிராரோ பாடும் உள்ளம்
கண்டுபிடி
சொல்லி அடிக்கிறது
உட்டாலக்கடி உட்டாலக்கடி

அமைதி படை அட நானாச்சு
முத்துமணி
வெற்றி வருது


அம்மன் கோவில் திருவிழா தெய்வம்
தேசமுது
மதுரை
(இன்னும் பட்டியல் நீளும்)

Monday, December 25, 2006

ஆழ்வார் பாடல்கள் - பாமரன் விமர்சனம்




அஜித் மறுபடியும் படம் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து, அதாவது பரமசிவன், திருப்பதி போன்ற படங்களின் பாடல்கள் எதுவும் ரொம்பவும் ரசிக்கும் படியாக இருந்ததில்லை. ஆனால் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் வந்திருக்கும் ஆழ்வார் பாடல்கள் கொஞ்சம் நம்பிக்கையை தந்திருக்கிறது. அஜித்துக்கும் தேவாவுக்கும் ஒரு ராசி இருந்திருக்கிறது. இவர்கள் இருவரின் காம்பினேஷனில் வந்த பாடல்கள் ரசிக்கும் படியாகவும் இன்றும் கேட்கும்படியாகவும் இருக்கிறது. உதாரணமாக வாலி, முகவரி படங்களைச் சொல்லலாம். அந்த ராசி ஸ்ரீகாந்த் தேவாவுக்கும் உண்டோ என்று தோன்றவைக்கிறது ஆழ்வாரின் படப் பாடல்கள்

சொல்லித் தரவா
பாடியவர்கள் : சாதனா சர்கம், முகமத் சாலமத்

குத்து பாட்டு மாதிரி ஆரம்பிக்கும் இந்தப் பாடல் மெல்ல ஒரு அழகிய மெல்லிசை பாடலாக விரிந்து மனசை நிரப்புகிறது. வெறும் உள்ளூர் வாத்தியங்களுடன் ஆரம்பித்து அப்படியே வெஸ்டர்ன் இசையோடு கலந்து அழகாக வந்திருக்கு.. முதல் முறை கேட்கும் போதே மனசுல நிற்கும் மெட்டைப் போட்டிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.. முகமதின் குரலும் அஜித் குரலோடு ஒத்துப் போவதும், சாதனா சர்கத்தின் தேன் குரலும் இந்தப் பாட்டிற்கு தூண்கள்.. வழக்கம் போல "தல தல தல தாழாது உந்தன் தல"ன்னு தூக்கி வைக்கின்ற வைர வரிகளும் வாலியின் பேனாவில் இருந்து வந்திருக்கிறது.. இதோடு மிதமான வயலின் இசை மெலடி பாடல் கேட்பவர்களுக்கு நிச்சயம் கொஞ்சம் மயக்கமூட்டும். ஆனால் ஏன் முகமத் தமிழை அப்படி உச்சரிக்கிறார் என்று தெரியவில்லை.. முகமத் தமிழ் தெரியாதவர் போலத் தெரிகிறது.. இன்னொரு உதித் நாராயணன்?

பிடிக்கும் உனைப் பிடிக்கும்
பாடியவர் : மதுரஸ்ரீ

மதுரஸ்ரீயின் உற்சாகமான குரல் இந்தப் பாட்டுக்கு மிகப் பெரிய வலிமை. வாலியின் வார்த்தை விளையாடல்கள் கொண்ட பல்லவிக்கு, ஸ்ரீ காந்தின் இசை மெருகூட்டி இருக்கிறது. உச்சதஸ்தாயில் மதுரஸ்ரீ பாடும்போது கேட்கவே நன்றாக இருக்கிறது. மதுரஸ்ரீ உச்சரிக்கும் வார்த்தைகளே எல்லாவிதமான உணர்ச்சிகளையும் தந்துவிடுகிறது. அவரது குரல் இந்த பாட்டிற்கு பலம்.

பல்லாண்டு பல்லாண்டு
பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன், செந்தில்தாஸ்

டிசம்பர் சீசனுக்கு ஏற்ற பாட்டு. மகாநதியில் வரும் ஸ்ரீரங்க ரங்கநாதரின் பாட்டைப் போலவே செமி-கிளாசிக்காக வந்திருக்கிறது. உன்னி கிருஷ்ணனின் குரலையும் அவரது ஏற்ற இறக்கங்களையும் பற்றிச் சொல்லவே வேண்டாம். உன்னி கிருஷ்ணனுக்கு செந்தில்தாஸ் நேர்த்தியாக கம்பெனி கொடுத்திருக்கிறார். வைஷ்ணவ கோயிலகளில் பாடப் பெறுகின்ற பாடல் போல் தெரிகிறது. கண்மூடிக் கேட்டால் ஏதோ பக்தி பாடல் மாதிரி கன கச்சிதமாக இருக்கிறது.. ஸ்ரீகாந்த் தேவாவுக்கு பாராட்டுக்கள். இப்படி ஒரு அருமையான கர்னாடிக் பாடலை ஸ்ரீகாந்த் தேவாவால் எப்படி தர முடிந்தது என்று இன்னும் ஆச்சரியமாகவே உள்ளது.. இது படத்தில் அஜித்தின் அறிமுக காட்சி என்று சொல்லப்படுகிறது. மற்ற பாடல்களை பார்த்தால் வேறு எதுவும் அறிமுகப் பாடல் இருப்பது போலத் தெரியவில்லை. இந்தக் காலத்தில் இப்படி ஒரு அறிமுகப் பாடல் எடுபடுமா?

அன்புள்ள காதலிக்கு
பாடியவர்கள் : குணால், குஷ்பூ

தீனாவில் வரும் 'நெஞ்சில் என்றும்' என ஆரம்பிக்கும் பாட்டின் சாயல் ஆரம்பத்தில் இருந்தாலும் போகப்போக அதிலிருந்து பாடல் பாதை மாறிவிடுகிறது. ரொம்பவும் ஸ்பீடான பாட்டு இது. இப்படி ஒரு ஸ்பீடான டூயட் ஒவ்வொரு படத்துக்கும் தேவை என்றாகிவிட்டது. குஷ்பூவின் குரல் நம்மை அவரின் வேகத்துக்கு அழைத்தே செல்கிறது.


மயிலே மயிலே
பாடியவர்கள் : ஸ்ரீகாந்த் தேவா, செந்தில்தாஸ், ரோஷிணி, சுருதிப்ப்ரியா, அர்ஜூன் தாமஸ், சுஜவிதா

பரபரன்னு உங்கள் கால்களை ஆடவைத்து, கூடவே உங்களையும் பாடவைக்கும் ஒரு குத்துப் பாடல். இளமையான பாடகர்களின் (சன் டிவியின் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் தேர்தேடுக்கப் பட்டவர்களா எல்லோரும்?) குரலைகளை பயன்படுத்தி வேகப் பாடலை கொடுத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.. இதுவும் படத்துக்கு ஒரு குத்துப் பாட்டு, வேகப் பாட்டு அவசியம் என்னும் பார்முலாவில் வந்திருக்கிறது. இந்தபாட்டு முன் வரிசைக்காரர்களை நிச்சயம் மகிழ்விக்கும்.

ஆஹா..ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு ஆழ்வார் பாடல்கள் இல்லை என்றாலும், கர்னாடிக் ரசிகர்களுக்கு ஒரு பாட்டு, குத்துப் பாட்டு ரசிகர்களுக்கென ஒரு பாட்டு, மெலடி காதலர்களுக்கென ஒரு பாட்டு என கொடுத்து எல்லா ரசிகர்களையும் ஆளவே முயற்சித்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.. ஓரளவு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

போக்கிரி பாடல்கள் விமர்சனம்
பருத்திவீரன் பாடல்கள் விமர்சனம்

கற்பூர நாயகியே கனகவல்லியும் யுவன் ஷங்கர் ராஜாவும்



என்னவாயிற்று யுவன் ஷங்கர் ராஜாவுக்கு. வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு பாடலை காப்பி அடிக்க வேண்டும் என்று வரைமுறை வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. தாஸ் படத்தில் இளையராஜாவின் நீங்கள் கேட்டவை படத்தின் அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி என்ற பாடலை, வா..வா..நீ வராங்காட்டி போ போ என்று மாற்றி போட்டவர், இரண்டு நாட்களுக்கு முன், வெளியான ஹரி இயக்கி, விஷால் நடிக்கும் தாமிரபரணி படத்தில் மற்றொரு தவறைச் செய்திருக்கிறார்.

சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் ஒரு முறையாவது கேட்டிருப்பர் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய கற்பூர நாயகியே கனகவல்லி என்னும் பாடலை. அந்தப் பாடலை அப்படியே மேற்கத்திய இசை வாத்தியங்களுடன் கருப்பான கையாலே என்னை பிடிச்சான் என்று இசைத்திருக்கிறார். இதை கண்டுபிடிக்க யாருக்கும் எந்த இசைஞானமும் தேவை இருக்காது. எல்லா இசையமைப்பாளர்களும் சொல்லும், இயக்குநர் கேட்டதால் அப்படி இசைத்தேன் என்னும் அதே பல்லவியை தான் இவரும் சொல்லப்போகிறார.. என்ன காரணம் யுவன் சொன்னாலும் நல்ல இசைகளினால் மெல்ல உயரிய ஏணியில் ஏறிக் கொண்டிருக்கும் இவருக்கு இது நிச்சயம் சறுக்கலே.

(ஆனால் இந்தப் பாட்டிற்கு முன், கற்பூர நாயகியே பாட்டை கேட்டுவிட்டு நாயகி இந்த டூயட்டை கனவு காண்பது போல் டைரக்டர் ஹரி படமாக்கி இருந்தால் நான் பொறுப்பல்ல)

Sunday, December 24, 2006

கேளுங்கள் அவர் தருவார்...

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே..

ஏசு கிறிஸ்து தோன்றிய இந்த தருணத்தில் அவரை நினைத்து பார்ப்போம். அவர் நமக்காக அளித்த கருத்துக்களையும் உபதேசங்களையும் மனத்தில் இருத்திக் கொள்வோம்.. கேளுங்கள் அவர் தருவார். தட்டுங்கள் அவரின் கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும்.

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

Friday, December 22, 2006

கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது

கவிஞர் மு.மேத்தாவுக்கு, அவரின் ஆகாயத்தில் அடுத்த வீடு என்னும் கவிதை நூலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது..



இவர் எனக்கு தமிழ் சினிமா பாடல்களின் மூலம் தான் அறிமுகமானார். ரெட்டை வால் குருவி படத்தில் வரும் ராஜா ராஜ சோழன் பாட்டின் வசீகிர வரிகளுக்கு சொந்தக்காரர் யார் என்று தேடிப் பார்த்தால் மு.மேத்தா என்ற சேதி கிடைத்தது. இவர் எழுதிய பாடல்களில் மிகுந்த வார்த்தை விளையாடல்கள் தான் இருந்துள்ளன. கீழ்த்தரமான வரிகள் என்றும் இருந்ததில்லை. ரஜினியின் வேலைக்காரன் படத்தை பார்த்த போது அதன் பாடல்களின் வரிகளுக்கும் இவரே சொந்தக்காரர்.. தமிழ் சினிமா பாடல்கள் தடம் மாறி போவதை கண்டு இனிமேல் சினிமா பாடல்கள் எழுத மாட்டேன் என்று சொன்ன புண்ணியவான், கொள்கையாளன்.

இந்த இனிய தருணத்தில் அவருக்கு எந்தன் வாழ்த்துக்கள். மேலும் தரமான படைப்புகளை தமிழுக்கு தர வேண்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

Thursday, December 21, 2006

பூமிகாவின் தங்கையா? நடிக்க வந்த ரோஜாக்கூட்டம்



நடிகை பூமிகாவின் தங்கையும் சினிமா உலகுக்கு வருகிறார்.. ஆப்பிள் கன்னங்கள்.. திராட்சை கண்கள்.. சம்பெய்ன் உதடுகள்.. மொத்தத்தில் அக்காவை போல் வந்திருக்கும் ஒரு ரோஜாக்கூட்டம்.. பெயர் தெரியவில்லை.. அதுவா முக்கியம்னு நம்ம நாட்டாமை கேக்குறார்.. அதுவும் சரி தான்.



பூமிகாவின் தங்கை தானா என்று தெரியவில்லை.. பூமிகா தான் அவர் வீட்டில் இளையவர் என்று எங்கோ படித்த ஞாபகம்.. தகவல் தெரிந்தவர்கள் சொல்லலாமே..



தெரிந்த தகவல் : இவர் பெயர் ஹனிஷ்கா மொட்வானி.. இப்போது அல்லு அர்ஜூன் கூட தேசமுந்துரு என்னும் தெலுங்கு படத்துல நடித்துக் கொண்டிருக்கிறார்



ஜொள்ளுவிடுவதற்காக இந்த படங்களை அனுப்பி வைத்த தங்கை தீக்க்ஷன்யாவுக்கு நன்றி

Wednesday, December 20, 2006

படித்த பள்ளியும் நடித்த நாடகங்களும்

இந்த தொடரின் முதல் பகுதி இங்கே

அப்படி ஒரு முரட்டு உருவம் என் தோள் மீது அமர்ந்தவுடன் என்னால் மூச்சு கூட விட முடியவில்லை. எனக்கு வேற வழி தெரியாமல் அந்த உருவத்தின் தொடையை கடித்து வைத்தேன்.. உயிர் பயத்தில் இருப்பவன் கடித்தால் எப்படி இருக்கும்.. அந்த உருவம் விருட்டென்று பக்கவாட்டில் சரிந்தது வலி தாளாமல்.. நான் மெல்ல மேலே வந்து பாறையை பிடித்து மூச்சுவிட்டேன்.. நான் அப்போது தான் யார் நம்ம மேல ஏறி உட்கார்ந்ததுன்னு பார்த்தேன்.. அட.. பிரதர்.. ஆஹா.. மனுஷன் நம்மை காய்ச்சப் போறாரேன்னு ஒரு பயம் வேற உள்ளூர.. டேய்.. உனக்கு நீச்சல் கத்துக்கொடுக்கத்தான் அப்படி செய்தேன்.. போடா.. நான் உனக்கு நீச்சல் கத்துத் தரவே முடியாது.. அப்படினுட்டார்.. அப்போ என்ன பண்றதுன்னு எனக்குப் புரியல.. அப்படியே விட்டுட்டேன்.. பாவம் கடிபட்ட வலி அவருக்கு.. என்னடா உன்னை மொட்டை அடிக்க வச்சாருன்னு ரொம்ப நாள உன் மனசுல இருந்த கோபத்தை காமிசுட்ட போலன்னு நண்பர்களெல்லாம் ஒரே கிண்டல் வேற..இந்த பிரதர் இருக்காரே.. அவர் அப்போ தான் சாமியார் ஆவதற்கான முதல் லெவல்ல இருந்ததால இன்னும் அந்த கோபம், அமைதியான பேச்சு எல்லாம் வரவில்லை.. நாங்கள் எல்லாம் படிக்கிற மாதிரி அவருக்கு இதுவும் ஒரு படிப்பு தான்.

அந்த பள்ளி மலையில் இருந்ததால விளையாட்டு மைதானம் ஒன்றும் ரொம்பப் பெரியதாக இல்லை.. கிட்டதட்ட ஒரு நூறு அடி நீளமும் நாற்பது அடி அகலமும் தான் எங்கள் விளையாட்டு மைதானம். அந்த மைதானத்தின் ஒரு பக்கம் பள்ளிக் கட்டிடங்களும் மறுபக்கம் சவ்-சவ் மற்றும் ஆரஞ்சு தோட்டங்களும் உண்டு.. விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாடும்போதெல்லாம் ஒரே நாளில் நான் எத்தனை ஆரஞ்சு பழங்களை, பந்தை தேடுறேன் பேர்வழி என்று சாப்பிட்டேன் என்று கணக்கே இல்லை. சில சமயம் பந்து கிடைத்தால் கூட, கால் சட்டைபையில் மறைத்து, வேக வேகமாக பறித்த ஆரஞ்சு பழங்களை தின்ற அனுபவமெல்லாம் உண்டு.

மாலையில் பள்ளி முடிந்தவுடன் தினமும் வாக்கிங் போவோம். கிட்டதட்ட தினமும் நாலு கிலோமீட்டர் அந்த மலைப் பாதையில் நடந்ததுண்டு.. ஒரே குரூப்பாகப் போவதால் தூரம் ஒரு பொருட்டாவே தெரியாது.. எங்கள் வாக்கிங் எல்லாம் கொடைக்கானல் போற பாதையில் தான் இருக்கும்.. அதனால் போகின்ற, வருகின்ற பஸ்களுக்கு டாட்டா சொல்வதே, வீட்டை விட்டு வந்த எங்களுக்கு பெரிய சந்தோசமாக இருக்கும்.

அந்தப் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் அதிகமான பேரும் கிடையாது.. மிஞ்சிப்போனா பத்துப்பேர் இருப்பதே அதிகம் தான்.. அதனால வகுப்புல தூங்கக் கூட முடியாது.. இன்னும் வாயில் எப்போதும் வெற்றிலை குதப்பிக்கொண்டு எங்களுக்கு பாடம் நடத்தும் அந்த தமிழ் வாத்தியாரை ஞாபகம் இருக்கு.. நமக்கு எப்பவுமே தமிழ்னா ஒரு கண்ணு.. சும்மா ஒரு தடவை படிச்சா போதும் செய்யுளும் சரி, கதைகளும் சரி மனசுல ஆணியடிச்ச மாதிரி நிக்கும்.. அதுலையும் அதை பரீட்சைல நம்ம பாணில வேற வித்தியாசமா எழுதினதால அவருக்கு நம்ம மேல அவ்ளோ பாசம்.. அப்போ மட்டுமல்ல, அதுக்குப் பிறகு காந்திகிராம தம்பிதோட்டத்துல படிச்சப்ப தமிழ் வாத்தியாரா எனக்கு தமிழமுது ஊட்டிய த.கதிர்வேல் ஐயாவும் அவர்களுக்கும் சரி.. பரமசிவ பாண்டியன் அண்ணாவுக்கும் சரி நான் ஒரு செல்லப்பிள்ளை தான்..

அங்கே இருந்தப்போ பள்ளி ஆண்டுவிழா வந்தப்போ, மாணவர்கள் கம்மிகிறதால, ஒரே ஆள் ரெண்டு மூணு நாடகத்துல எல்லாம் நடிக்க வேண்டியதாதிருந்தது.. நான் முதலில், அண்ணன் தம்பிகளுக்கிடையில் குதிரையை பிரித்து கொடுகும் தெனாலிராமனாக நடித்தேன்.. பஞ்சகச்ச வெள்ளை வேஷ்டியும் ஒரு துண்டும் தான் காஸ்டியூம்.. வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால் மதுரைக்கு போகணும்னு சொன்னதால எல்லா காஷ்டியூம் ரொம்ப எளிமை தான்.. இதுக்கு முன்னால் ஐந்தாவது திண்டுக்கல் செயின்ட் ஜோசபில் படித்த போது, திருவள்ளுவரோட கற்பனை கதையில், திருவள்ளுவரோட அக்கா பையன், அவரோட பொண்ணுக்கு முறைமாமன் நாகவேள் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தேன்.. பக்கா வில்லன் வேஷம் அது.. (குறிச்சுவைங்கப்பா.. நாமளும் என்ட்ரீ ஆனது வில்லனாத் தான்) திருவள்ளுவர் பொண்ணை கடத்திட்டு போய், கட்டிக்கிறியா இல்லியான்னு மிரட்டி, பயங்கர வில்லத்தனம் எல்லம் செய்து, நாடகத்தோட கடைசில, உடம்பெல்லாம் சங்கிலியால கட்டப்பட்டு, நாலு திருக்குறள் சொல்லி மனசு திருந்தற கதை.. பெரிய மீசை.. ஒரு நாட்டுக்கு ராஜா என்பதால் கிரீடம், என் அம்மாவின் பட்டுச்சேலையில் ராஜாக்கள் அணியும் வேஷ்டி, மார்பு அணிகலன்கள்னு பயங்கர காஷ்டியூம்.. காது குண்டலங்களை மறந்துவிட்டேனே.. ஆனால் இப்போது அதுக்கு எதிர்மாறாக ரொம்ப எளிமையான ஆடைகள் தெனாலிராமன் வேடத்துக்கு..

தெனாலிராமன் நாடகம் முடிந்தவுடன் தோளில் இருக்கும் துண்டை எடுத்து தலையில் உருமாவா கட்டிகிட்டு, நாட்டு மக்களுக்கோர் நற்செய்தின்னு முரசறிவிக்கிறவனா நடித்தேன்.. அது முடிந்தவுடன் இடையில் சில சிரிப்பு துணுக்குகளை நடிச்சு காண்பித்தோம்.. இறுதியில் லவ-குசா ராமாயணத்தில் குசனா நடித்தேன். காவி வேட்டி கட்டிகிட்டு.. இப்போ நினச்சாலும் அந்த நாடகங்களும் அந்த நினைவுகளும் சந்தோசமா இருக்கு.. என்னோட அப்பா அந்த ஆண்டு விழாவுக்கு வந்திருந்தார்.. அவருக்கு என் நடிப்பை பார்த்து ரொம்ப சந்தோசம்.. நான் இந்த மாதிரி எல்லாம் கலந்துகிட்டது இல்ல.. நீ ரொம்ப நல்லா நடிச்சடா.. அதுவும் உன்னோட ஐய ஒரு நாடக வாத்தியார்.. அவரோட பேரனான உனக்கு இவ்ளோ திறமை வந்தது எனக்கு ஆச்சரியமில்லை என்றார்.. எனக்கு அந்த சின்ன வயசுல ஐயா பத்தி என் அப்பா சொன்னது ரொம்ப அதிசயமா இருந்தது.. என் ஐயா, ஒரு முறை பெண் வேடம் போட்டதுக்காக நிஜமாகவே காது குத்திகிட்டாராம், மேக்கப் போடுறப்போ.. அந்த நாடகத்துல காதுல ரத்தம் வழிய வழிய நடிச்சாராம்.. அதுக்கு பிறகு நிறைய பேர் கிட்ட என் ஐயா பத்தி நிறைய விஷயங்கள் இது போல கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன்.. என் ஐய்யாவே நிறைய கதைகளையும் சொல்லி இருக்காரு..

என்னால ஆறாம் வகுப்பு மட்டுமே விவேகானந்தா ஸ்கூல்ல படிக்க முடிந்தது.. மாத மாதம் வரும் ஹாஸ்டல் பில் கட்ற அளவுக்கு என் குடும்ப நிதிநிலை ஒத்துவரவில்லை.. இந்த ஒரு வருடத்திற்கே என் அப்பா ரொம்ப கஷ்டப்பட வேண்டியதாய் இருந்தது.. பள்ளியோட நிர்வாகி, பையன் நல்ல பையன்..நல்லாவும் படிக்கிறான் ஏன் கூட்டிட்டு போறீங்கன்னு கேட்டு வேண்டாம்னெல்லாம் சொன்னார்.. அந்த பள்ளிக்கு, என் அப்பாவுக்கு தெரியாமல், எனக்கே புரியாமல் கண்களில் வழிந்த கண்ணீரால் போய் வருகிறேன் என்று டாடா காண்பித்தேன்.. அதற்கு பிறகு, பல தடவை சுற்றுலாவாக அந்த வழியே சென்று இருந்தாலும் பகலில் அந்த பள்ளியை பார்த்ததில்லை..

எனது மற்ற நாடக கதைகள்...
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஆசை ஆசையாய் வச்ச மீசை

Tuesday, December 19, 2006

அவதார புருஷன் அனுமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்



சின்ன வயசுல, ஒரு ஐந்து வயசிருக்கும் போது, ஒரு நாள் என் அம்மாச்சி வீட்டின் திண்ணையில் அமர்திருந்தேன்.. அந்த வழியாக கிளி ஜோசியக்காரர் போனார். திண்ணையில் உட்கார்ந்திருந்த கூட்டத்தை பார்த்து, அப்படியே இந்தப் பக்கம் திரும்பினார். எப்படியோ அவருக்கு தெரிந்த தந்திரங்களை வைத்து ஒரு ஆளை ஜோசியம் பாக்க வைத்தார். ஜோசியம் பார்த்தது ஒரு பெண். என் அம்மாச்சி வீட்டுக்கு பக்கத்தில் இருந்தவர். எனக்கு அத்தை முறை. அப்போ அந்த பெண்ணுக்கு வயது இருபத்தேழு இருக்கும். அதனால் கல்யாணம் ஆக வேண்டுமென்றால் வாரவாரம் சனிக்கிழமை பக்கத்தில் இருக்கும் ஆஞ்சேநேயர் கோவிலுக்கு காலையில் போகச் சொன்னார். மொத்தம் ஒன்பது வாரம் அது மாதிரி போகச் சொன்னார். ஆஞ்சநேயர் எனக்கு அறிமுகமானது அப்படித்தான். நான் ரொம்ப சின்ன பையனாக இருந்ததால் நானும் அந்த அத்தைக்கூட திண்டுக்கல் அபிராமி கோவில் பக்கத்துல இருந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய் வந்தேன்.. அந்த சின்ன வயசுல என்னை வியப்பில் ஆழ்த்திய அந்த சம்பவம் நடந்தது.. ரொம்ப நாளா வரன் அமையாம இருந்த அந்த அத்தைக்கு நல்ல அரசு வேலைல இருக்க மாப்பிள்ளை அமைந்தது. அவங்க அதுக்குப் பிறகும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய் அந்த ஒன்பது வாரங்களை முடித்தார்.

அந்த சின்ன வயசுலயே என் மனசுல ஆஞ்சநேயர் உயரமான இடத்துல இருந்தார் இந்த சம்பவத்துக்கு பிறகு..

அதன் பிறகு தூர்தர்ஷன்ல ராமாயணம் பாத்து, எங்க வீட்டுப் பெரியவங்க கிட்ட அவரோட கதையெல்லாம் ஒண்ணுவிடாம கேட்டு நான் வளர்ந்ததைப் போலவே மனசுக்குள்ள அவரும் மெல்ல வளர்ந்தார். அந்த பிரம்மசர்யம், அந்த உறுதி, துணிவு எல்லாம் எனக்கு உள்ளத்திலும் ஊட்டியவர் அவர் தான்.. நான் இந்த இடத்தில் இருப்பதற்கு நான் இரண்டு வருடங்கள் எழுதி வந்த ஸ்ரீராமஜெயம் தான் என்கிற எண்ணம், நம்பிக்கை எனக்கு இன்னமும் உண்டு..

நான் கல்லூரியில் படித்து வந்தபோது என் ஊருக்கு பக்கத்தில் இருக்கும் நி.பஞ்சம்பட்டி போகும் வழியில் இருக்கும் அனுமரை வழிபட்டு வந்தேன்.. அந்த அனுமார் அங்கே வந்ததே ஒரு சுவையான சம்பவம்.. ரொம்ப காலத்துக்கு முன்னாடி எங்கள் ஊர் மலையில் இருந்து வீட்டுக்கு பட்டியக்கல் (சதுர வடிவில் இருக்கும் கல். துணி துவைக்கவோ கோவில்களிலோ இந்த வகை கல்லை பாக்கலாம்) சைக்கிளில் எடுத்துச் சென்றார். இப்போது கோவில் இருக்கும் இடத்திற்கு வந்த போது அந்த சைக்கிள் நகரவில்லை. அவரும் என்னன்னமோ செய்து பார்த்தார். ஹ்ம்ஹும்.. ஒண்ணும் நடக்கவில்லை. அப்போது தான் கவனித்தார் அந்த கல்லில் ஆஞ்சநேயர் உருவம்.. பதறியடித்துப் பார்த்த அவர் அந்தப் பாதையின் அருகிலேயே மணல் மேடுகட்டி அனுமாருக்கு கோவில்கட்டினார்..

எங்கள் ஊர் சிறுமலையும் அனுமாரோடு சம்பந்தப்பட்டது.. அனுமார் சஞ்சீவி மலையை தூக்கி சென்றபோது பல மூலிகைகள் அதிலிருந்து இந்த சிறு மலையில் விழுந்ததாம்.. மலையில் நீங்கள் இருக்கும் போது பாம்பு கடித்தால் கூட, நீங்கள் மலையிலேயே இருக்கும் வரை விஷம் உங்கள் உடம்பில் ஏறாது என்பது இன்றும் எங்கள் ஊர் மக்கள் நம்பி வரும் ஒரு கருத்து..

சென்னை வந்த பிறகு நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அடிக்கடி சென்றதுண்டு. அவ்வளவு உயரிய சிலையை பார்த்த போது தான் புரிந்தது.. அவரை என் மனதில் சிறிய கூட்டுக்குள் அடக்கி வைத்திருப்பதால் தான் என் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்று.. சுருங்கும் போது சிறியவராகி, விரியும் போது பெரியவராகி.. இருக்கும் இடத்தை கோவிலாக்கும் அந்த கருணை அவனுக்கே உண்டு.. அது என் பாக்கியமே ஆஞ்சநேயா..

ஆஞ்சநேயரை பற்றி நான் சொன்னதெல்லம் விரல் நுனியளவு.. இங்கே அம்பி சொல்வதை பாருங்கள்.. அனுமனின் கருணை புரியும்

ஜெய் ஆஞ்சநேயா!!!

இன்று முதல் ஆழ்வார் பாடல்கள்



ஆழ்வார் படத்தை தயாரிக்கும் ஸ்ரீ ராஜகாளியம்மன் பிலிம்ஸ் நிறுவனம், படம் நல்ல தொகைக்கு வாங்கப்பட்டுள்ளதால் தங்களின் கடன்களை அடைத்து நிலம், பொருள்களையும் மீட்டெடுத்து இருக்கின்றது





படங்கள் எல்லாம் தி ஹிந்து மற்றும் தினதந்தியில் வெளிவந்த படத்தின் விளம்பரங்கள்

சிவாஜி ரஜினியின் மொட்டையடித்த படம்




ஸ்டைல் மன்னங்கிறது சரியாத்தானப்பா இருக்கு.. மொட்டையடித்தாலும் ஸ்டைல் தான்.. குடுமி வச்சாலும் ஸ்டைல் தான்..

இது சிவாஜி பட கிளைமாக்ஸ்காக தலைவர் அடித்த மொட்டை..

என்ன கலக்கலா இருக்காரு பாருங்க.. மனுஷன் மொட்டை அடிச்சாலும் அழகு தானப்பா..

அந்த வித்தியாசமான உடைகளும், அதோடு கலந்த ஃப்ரெஞ்ச் தாடி மீசையும், அந்த கண்ணாடியும்..ம்ம்ம்.. தலைவா..உன்னை அசைக்க யாரும் இல்ல இங்கே

பட உதவி - பாலாஜி வழியாக ஃபில்பர்ட்

Monday, December 18, 2006

2006-ன் சிறந்த பொழுதுபோக்கு வலைப்பக்கம்

அதிசயம்! ஆனந்தம்! ஆச்சர்யம்!

கீதையில் கண்ணன் சொன்ன மாதிரி, கடமையை செய்..பலனில் மனசை வைக்காதேன்னு, ஏதோ நம்ம பொழுதுபோறதுக்கு, நமக்கு பிடிச்ச சினிமாவ பத்தி எழுதி வர்றேன்.. நம்ம பாஸ்டன் பாலா எல்லா வலைபதிவுகளையும் அலசி துவச்சு காயப் போட்டு, (அவரோட கூட துவச்சவங்க வெட்டிப்பயல் பாலாஜியும், டைம் பாஸ் மச்சி லக்கிலூக்கும்) நம்ம வலைப்பக்கத்தை சிறந்த பொழுதுபோக்கு வலைப்பக்கமா தேர்ந்தெடுத்து இருக்காங்க.. முதல்ல நம்ம பாலா அண்ணாசிக்கும், வெட்டிப்பயல் பாலாஜிக்கும், டைம் பாஸ் மச்சி லக்கிலூக்கும் என்னோட மனமார்ந்த நன்றிங்க..

இப்படி ஒரு அவார்டை நமக்கு தருவாங்கன்னு நேற்று அசினை பத்தி கனவு கண்டப்பகூட நான் நினைக்கல.. சட்டுப்புட்டுன்னு இப்படி ஒரு அவார்டை கொடுத்துட்டாங்க.. இதுக்காக நான் டெல்லி வந்து நம்ம அப்துல் கலாம் கையால தான் விருது வாங்க சொல்வாங்கன்னு இப்பவே சோபால படுத்து கனா காண ஆரம்பிச்சுட்டேன்..

இப்படி ஒரு இடத்தை நமக்கு அவங்க தந்தாங்கன்னா அதுக்கு நம்ம நண்பர்கள் தான் காரணம்.. நாம என்ன எழுதினாலும் வந்து சூப்பர்.. கலக்கிட்டீங்க.. நமக்கு உற்சாக வார்த்தைகள் சொல்லி இந்த இடத்துக்கு தூக்கி வந்தவங்க அவங்க தான்.. அவங்க எல்லாத்துக்கும் எனது நன்றி.. மனமார்ந்த நன்றி.. இப்படி ஒரு வலைப்பக்கம் இருக்கிறது என்று உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய எனது எல்லா நண்பர்களுக்கு நன்றிகள்.. அப்பப்போ வருகை தந்து இந்த செடிக்கு தண்ணி ஊத்தி இப்போ சில பல பூக்களை மலர வைத்த அன்பர்களுக்கு நன்றி..

இந்த மாதிரி விருதுகள் நடந்து நடந்து களைத்து போய் ஒரு மரத்துகடியில் குளிர்நிழலில் ஓய்வு எடுக்கிறவனுக்கு கொடுத்த கூல் மோர்.. மைதானத்தில ஆடி ஆடி உடல் தளர்ந்து வர்றவனுக்கு தந்த பூஸ்ட்.. இது எனக்கு இன்னும் நிறைய பொறுப்புகளையும் தந்திருக்கு.. நண்பர்கள் நீங்க என் கூட உறுதுணையா இருக்கிறவரை இதெல்லாம் சாத்தியம்..சாத்தியமே..

இன்னொரு முறை சொல்லுங்கன்னு ஆஷிகா சேலை விளம்பரத்துல வர்றவங்க கேக்குற மாதிரி.. நானே நினச்சுகிட்டு மறுபடியும் என்ன உள்ள சந்தோசத்துல உங்களுக்கு சொல்லிக்கிறேன் ரொம்ப்ப்ப்ப நன்றிங்க..

Sunday, December 17, 2006

போக்கிரியின் பாடல்கள் - பாமரனின் விமர்சனம்

விஜய் படத்தின் பாடல்கள் என்றுமே நன்றாக இருக்கும் என்ற ஒரு எண்ணம் மக்களிடையே உண்டு. (புதிய கீதை போன்ற படங்களை தவிர்த்து பார்த்தால்) அந்த எண்ணத்தை பொய்யாக்கப் போவதில்லை என்று வந்திருக்கிறது மணிசர்மாவின் இசையில் போக்கிரி பாடல்கள்.. இந்த போக்கிரியின் ஆல்பம் கொஞ்சம் வித்தியாசமாகவே உள்ளது.. நிறைய பாடகர்கள் புதுசாய் தெரிகிறார்கள்.. இளமையாய் உற்சாகமாக இருக்கிறது அவர்களின் குரல்கள்..

வசந்த முல்லை போல வந்து ஆடிடும் வெண்புறா
பாடியவர்கள் : ராகுல் நம்பியார், வி. கிரிஷ்ணமூர்த்தி

ராகுல் நம்பியாரின் குரல் விஜய்க்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.. அவரின் உச்சரிப்பும், புது வித ஸ்டைலும் கேட்கும் ஒவ்வொருத்தரின் தலையையும் அசைய வைக்கும் வல்லமை கொண்டது.. அதுவும் பாடலின் ஒவ்வொரு வரிகளும் யதார்த்த, ருசிகரமாகவும் உள்ளது.. இந்த வருடத்தின் எல்லா சேனல்களிலும் இடைவிடாமல் இந்த பாட்டு ஓடும்.. மொத்தத்தில் பாடலின் வரியை போலவே பாட்டு நமது நெஞ்சங்களை வசந்தமை நெகிழவைக்கும்.. வளரும் எல்லா திறமையும் ராகுல் நம்பியாருக்கு (வேறு ஏதேனும் பாட்டு பாடி இருக்காரா) உண்டு.. அவருக்கு ஒரு ஷொட்டு.. இந்த ஆல்பத்தின் முதலிடம் இந்த பாட்டுக்குத் தான்

ஆடுங்கடா என்னை சுத்தி...
பாடியவர்: நவீன்

இது நிச்சயமாய் விஜயின் அறிமுக பாடல் என்பது பாட்டின் ஆரம்பத்திலேயே புரிந்து விடுகிறது.. தரை தப்பட்டை மேளம் முழங்க இந்த பாடலை நவீன் பாடியிருக்கிறார். பாட்டின் வரியே சொல்லிவிடுகிறது.. பாடப் போறேன் என்னை பத்தி.. கேளுங்கடா வாயைப் பொத்தின்னு..(பாட்டை கேக்குறதுக்கு இந்த தண்டனை வேறயா) அதனால அப்படித்தான் நானும் இந்தப் பாட்டை கேட்டேன்.. குத்து இசையோடு எப்பவும் விஜய் படங்களில் வரும் அறிமுகப் பாடல் என்பதால் ரொம்ப சொல்றதுக்கு பெருசா ஒண்ணும் இல்ல.. அடிக்கடி போக்கிரி பொங்கல்ன்னு கோரஸ் சத்தம் வருது.. அதனால இந்தப்படத்தின் ஏதாவது ஒரு போஸ்டரிலாவது இந்த வாசகம் வரும் என்பது இப்பவே நாம் சொல்லிவிடலாம்.. குழந்தை தொழிலாளர்கள், சேரியில்லா ஊரு, தீண்டாமை ஒழிப்புன்னு வழக்கம் போல ரஜினி மாதிரி ஓபனிங் பாட்டு தத்துவங்கள் உண்டு இதுலையும்...

மாம்பலமாம் மாம்பலம்
பாடியவர்கள் : ஷங்கர் மஹாதேவன், சுசித்ரா

இது கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னால் வரும் விஜய் படத்தின் அக்மார்க் குத்து பாட்டாய் இருக்குமென்று நினைக்கிறேன். அதனால சில பாடல் வரிகள் கூட அது போலவே இரட்டை அர்த்தங்கள் பொதிந்ததாய் இருக்கிறது.. குத்துப் பாடல் என்று சொல்லிவிட்டதால் அதைவிட பெரியதாக சொல்வதற்கு இந்த பாடலில் ஒன்றும் இல்லை..

நீ முத்தம் ஒன்று கொடுத்தால்
பாடியவர்கள் : ஏ.வி.ரமணன், சுசித்ரா

இது அழகான மெலடி கலந்த ஒரு டூயட் பாடல். இசையும் வார்தைகளும் சரிவிகதமாய் இருந்து பாட்டுக்கு இன்னும் வலுசேர்க்கிறது.. இந்த பாடலில் அரக்க பரக்க நடன காட்சிகள் இருக்க வாய்ப்பில்லை. மிகவும் நளினமான நடன அசைவுகள் தான் இருக்கும். அதுவும் இயக்குநர் பிரபுதேவா என்பதால் சில சுவாரஸ்யமான நடன காட்சிகளை காணலாம் என்று நினைக்கிறேன்.. நிச்சயம் ஒரு வெளிநட்டு இடத்தை பார்க்கும் வாய்ப்பை இந்த பாட்டு உங்களுக்கு தரும்.

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் (ரீமிக்ஸ்)
பாடியவர்கள் : ஏ.வி.ரமணன், சுசித்ரா


இது போன பாட்டின் ரீமிக்ஸ் பாடல்..

என் செல்லப் பேரு ஆப்பிள்
பாடியவர்கள் : ஏ.வி.ரமணன், சுசித்ரா

இந்த பாடல் கேட்கும் போது நிறைய பாடல்கள் உங்கள் ஞாபகத்துக்கு வந்தாலும் ஜே ஜே படத்தின் மே மாதம் பாட்டு சாயல் அதிகமாக இருக்கிறது.. அது மட்டுமல்ல, சுசித்ரா (அந்த பாட்டை பாடிய ரேடியோ மிர்ச்சி சுசித்ரா) தான் இதையும் பாடி இருப்பதால் அந்த எண்ணத்தில் இருந்து தப்பிக்க முடிவதில்லை.. இது இளமை துள்ளல் கொண்டு கொஞ்சம் மாடர்ன் காஸ்டியூம்கள் கொண்டு அசின் ஆடியிருப்பார்னு நினைக்கிறேன். மற்றபடி சொல்வதற்கு அதிகமாக இந்த பாட்டில் ஒன்றும் இல்லை..

டோலு டோலு தான் அடிக்கிறான்
பாடியவர்கள் : ரஞ்சித், சுசிதா

ஆல்பத்திலேயே ரேட்டிங்கில் மிகவும் கீழே இருக்கும் பாட்டு இது தான்.. ஒண்ணும் பெரிதாக எழுதுவதற்கு இதில் ஒன்றும். ரொம்பவும் மாடர்ன் இசை கலந்த இந்த பாட்டு எல்லோரையும் கேட்க வைக்குமா என்பது சந்தேகமே..

வசந்த முல்லை பாடலைத் தவிர இசை கணக்கில் வேற எதுவும் பெரிதாக சொல்வதற்கு இல்லை.. விஜய் ரசிகர்களின் மனதை கவர ஆடுங்கடா பாட்டு உதவும்.. விஜய் படத்தின் பாடல்களை கொண்டே அது படத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சொல்லிவிடலாம். நிறையப் பாடல்கள் இருப்பதால் படத்தில் ஏதேனும் ஒரு பாடல் இல்லாமல் இருக்க வாய்ப்புகள் உண்டு. மேலே சொன்ன பாடல்களோடு போக்கிரி தீம் பாடலும் மணிசர்மாவின் குரலில் உண்டு, போனசாக.. ஆனால் பிரபுதேவா படத்தின் இயக்குநர் என்பதால் படத்தின் பாடல்களில் விஷூவல் ட்ரீட் சில இருக்கலாம்..இருக்கும்..

(ஏற்கனவே சொல்லிக்கிட்ட மாதிரி...நமக்கு ராகம், தாளம், பல்லவின்னு ரொம்ப எல்லாம் தெரியாது.. மனசுக்கு கேட்டவுடன் புடிச்சிருக்கா.. அது தான் மேட்டர்..அத மனசுல வச்சுத்தான் இந்த விமர்சனம் எழுதி இருக்கேன்)

Saturday, December 16, 2006

கோலிவுட்டில் புதுசு - தனுஷின் தேசிய நெடுஞ்சாலை

தாம் தூம் ஜெயம் ரவி, ரத்தக்கண்ணீர் சத்யராஜ்

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 16

சிட்டுக்குருவிக்கு நேற்று ஒரு பார்சல் வந்தது அதோட லவ்வர்கிட்டயிருந்து.. ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு மறுபடியும் காதல் கோட்டை படத்தை ஓட்டுறாங்கப்பா.. அந்த பார்சலில், ஒரு அழகான ஸ்வெட்டர் இருந்தது.. ரோஸ் கலர்ல.. இதயப் பகுதில சிவப்பு கலர்ல ஒரு சின்ன இதயம் அழகா பின்னப்பட்டிருந்தது.. இப்போ எல்லாம் சிட்டுக்குருவி அந்த ஸ்வெட்டரோட தான் வாழ்க்கையை ஓட்டுது.. அது மட்டுமில்ல குளுருக்கு இதமா ஒரு சின்ன குல்லா.. அது வெள்ளை சிவப்பும் கலந்த வண்ணத்தில் இருந்தது.. கால்களுக்கு ரோஸ் கலர்ல சாக்ஸ் வேற.. சிட்டுக்குருவியை பாக்க அவ்ளோ க்யூட்டா இருக்குங்க. சே.. என்ன மாதிரி ஒரு லவ் இருந்தா இம்பூட்டு அழகா ஒரு ஸ்வெட்டரை அந்த லவ்வர் குருவி அனுப்பி இருக்கும்.. சே.. எப்படி பொறாமையாய் பாக்கதப்பான்னு சிட்டுக்குருவி நக்கல் வேற அடிக்குது.. ஹ்ம்ம்..நானும் பாரதி மாதிரி, வேற வழி இல்லாமல், நிற்பதுவே நடப்பதுவேன்னு இயற்கையை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.

சரி இப்போ சில சினி பிட்ஸை கொறிக்கிற நேரம்...

ரீமேக் ஜூரம் இப்போ கோடம்பாக்கத்தில் ரொம்பவே பரவிகிடக்கு.. பில்லாவை அஜித்தும், முரட்டுக்காளையை விஜயும் ரீமேக் செய்வது ஊரே அறிஞ்ச ரகசியம்.. எப்போதும் வாய்சவடால் பேசும் சிம்பு, தான் மட்டும் என்ன அவர்களைவிட குறைவான்னு, தானும் ஒரு ரஜினி படத்தை கையில தூக்கிகிட்டு நடிக்க போறாராம்.. ஏற்கனவே இப்படி பேசிப் பேசியே வல்லவன்ல வாங்குன காயத்துக்கு மருந்து போட்டுகிட்டு இருக்கும்போதே.. மறுபடியுமா சிம்பு.. இப்போ விஷயம் அது இல்ல.. நம்ம சத்யராஜும் எம்.ஆர்.ராதா நடிச்சு பின்னு பின்னுனு பின்னின ரத்தக்கண்ணீரை ரீமேக் பண்றதுல நடிக்கப்போறாராம்.. ஹ்ம்ம். இன்னும் எத்தனை படம் ரீமேக் ஆகப்போகுதோ..

குத்து படத்துல சிம்பு கூட குத்தாட்டம் போட்ட ரம்யா, அதுக்கு பிறகு கிரில அர்ஜூன்கூட காதல் பண்ணிட்டு, ஒரு வாய்ப்பும் வராம கன்னடப் பக்கம் போயிட்டாரு.. அங்கே உடல் இளைச்சு ஸ்லிம் ஆகி, பெரிய நடிகர்களுடன் ஒரு ரவுன்டு வந்தா, நடிச்ச படமெல்லாம் செம்ம ஹிட்டு.. ஆனாலும் அவருக்கு கோலிவுட் மேல ஒரு கண்ணு இருந்துகிட்டே இருந்தது.. இப்போ அந்த கனவை டைரக்டர் கௌதமன் நினைவாக்கி வச்சிருக்கார். அவர் சூர்யாவை வச்சு எடுக்கும் வாரணம் ஆயிரம் படத்துக்கு அம்மணி தான் ஹீரோயின்..

இந்த வருஷம் கோலிவுட்ல கல்யாண சீசன் போல.. சூர்யா, ஜோதிகாவுக்கு தாலியை கட்ட, அந்தப் பக்கம் விஜயகுமார் மகன் அருண்குமார் திருமணம் முடிச்சார். இப்போ தான் பாரதிராஜா பையன் மனோஜுக்கு கல்யாணம் ஆச்சு. அதுக்குள்ள செல்வராகவன்-சோனியா திருமணமும் முடிந்தது, சூப்பர் ஸ்டார் ரஜினி தலைமைல.. எல்லா தம்பதிகளுக்கும் வாழ்த்துக்கள். ஆனா சோனியா எப்பவும் போல மணமேடைல கூட ஒரு மாதிரி சோகமா இருக்காரே.. எனுங்க அம்மணி..நீங்க எப்பவுமே எப்படித்தானா?

இம்சை அரசனுக்குப் பிறகு மறுபடியும் வடிவேலு கதாநாயகனா வர்றார். படத்துக்கு பேர் இந்திரலோகத்துல நா அழகப்பன்.. இது சிவாஜி நடிச்சு வெளிவந்த ஒரு படத்தின் கதையாம்.. பூலோகத்துல இருக்க ஒருத்தன் இந்திரலோகம் போய் ரம்பையை காதலிக்கிற படமாம். இது ரம்பையா நடிக்க ஹிந்தி நடிகை ஷில்பா செட்டியை கேட்டிருப்பாங்க போல.. மறுபக்கம் சிம்ரனுக்கும் வலைவீச்சு நடக்குதாம்.. பார்ப்போம் இந்த அழகப்பன் எந்த ரம்பையோட ஆடப்போறாருன்னு.

இளமையா காட்சிகளை மட்டுமல்ல படத்தை கொடுப்பதிலும் ஜீவா பெரிய ஆளுதான்.. 12பி படத்துல ஷ்யாமை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தந்து உள்ளம் கேட்குமேல அசின், பூஜா, ஆர்யாவை (மூவரும் முதலில் ஒத்துக்கொண்ட படம் இது தான்) தந்து, இப்போ வெளிவரப் போகும் உன்னாலே உன்னாலே படத்துல வினய், தனிஷான்னு ஒரு ரெண்டு பேரை அறிமுகப் படுத்தி இருக்கார்.. இப்போ இவரோட அடுத்த படத்துல ஜெயம் ரவி தான் ஹீரோ.. படத்து பேர் தாம் தூம்... எப்பவும் போல படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ் தான். படம் புக்கானதுல இருந்து ஜெயம் ரவி தாம் தூம்னு தான் வீட்ல குத்திக்கிறாரம்..

அப்புறம் இன்னொரு விஷயம். ஜெயம் ரவி வர்ற பொங்கல்ல தீபாவளி கொண்டாட போறார்..அட..இவரோட தீபாவளி படம் அப்போதானே ரிலீஸ் ஆகுது.. ஏற்கனவே நாலு படம் சேர்ந்து வந்தா ஓட்டடுறதுக்கு தியேட்டர் இல்ல.. இப்போ இந்த பொங்கலுக்கும் அதுக்குத் தான் பிரச்சனையே..அஜித் ஆழ்வாரா உங்களையெல்லாம் ஆள வர்றார்.. விஜய் போக்கிரியா வர்றார். இது இல்லாம எஸ்ஜே சூர்யா வியாபாரியா வர்றார்.. அட தியேட்டர் கிடைக்காதது அவங்க பிரச்சனை.. நாம எல்லாம் சக்கரை பொங்கல் வாயிக்கு மட்டுமல்ல, கண்ணுக்கும் கொடுப்போம்..

ஏங்க மேல ஒரு ஆறு சினிமா விஷயம் இருக்குமாங்க.. இதை சொல்லி முடிக்குறதுக்குள்ள எத்தனை தடவ அந்த ஸ்வெட்டரை தொட்டு பாக்குறது.. எத்தனை தடவை அதுக்கு முத்தம் கொடுக்குறது.. இருந்தாலும் இந்த சிட்டுக்குருவி பண்றது ரொம்பவே டூ மச்.. என்ன மாதிரி ஒரு மனுஷனை முன்னடி வச்சுகிட்டு இப்படி கடுப்பேத்தலாமா.. சே.. வேற வாழி இல்லாம நாலஞ்சு ஐஸ் கியூப்களை அப்படியே முழுங்கினேன்..ஹ்ம்ம்.. எரியிற வயிறை அணைக்கத் தான்.

(அடுத்த பதிவு - பாமரனின் போக்கிரி பாடல்கள் விமர்சனம்)

Thursday, December 14, 2006

அடித்த மொட்டையும் ஆறாம் வகுப்பும்

கார்த்தி உனக்கு தம்பிதோட்டம் ஸ்கூல்லயே இடம் கிடச்சுடுச்சுன்னு செலெக்சன்ல டெஸ்ட்ல பாஸான விவரம் லெட்டெர்ல வந்ததை என் அப்பா படிச்சு பாத்துட்டு சொன்னார். பாவம் அந்த ஸ்கூல்.. எனக்கெல்லாம் படிப்பு சொல்லித் தரப்போவுதுன்னு நினச்சுகிட்டேன். ஆனா விதி வலியது..என்னை அங்கே சேர விடல.. மதுரைக்கு பக்கத்துல இருக்க சோழவந்தான்ல, பிரசித்தி பெற்ற விவேகானந்தா மிஷன் ஒண்ணு இருக்கு.. அதுல சேர்ந்த நல்லதுன்னு என் அப்பாவோட தூரத்து தம்பி ஒருத்தர் சொல்ல நான், என் அப்பா, அவர் மூணு பேரும் அங்கே சேருவதற்கு போனோம்.. ஆனா அங்கே பள்ளில படிக்கிறவங்களுக்கு ஹாஸ்டல் வசதி இல்லைனும் அப்படி வேணும்னா கொடைக்கானல் போற வழில ஊத்து என்னும் இடத்தை தாண்டி, பண்ணைக்காட்டுப் பிரிவுல இருக்க விவேகானந்தா மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல ஹாஸ்டல் வசதி இருக்குன்னு சொன்னாங்க.. எனக்கு என்னமோ அங்கே சேர்றதுக்கு ஆசை.. ஆனா வீடு நிதி நிலமை ஒத்து வரல..ஆனா என் முகம் சோகத்துல சுருங்கி போனதை பாத்த என் அப்பா அங்கேயே சேத்து விடுறேன்னு சொன்னார். ஆனா அதுக்கு பின்னாடி அவர் எவ்வளவு கஷ்டப்படணும்னு அப்போ அந்த சின்ன வயசுல தெரில.. ரொம்ப சந்தோசத்துல அந்த பள்ளில போய் நானும்சேர்ந்துட்டேன்..

அந்த பள்ளியை விவேகானந்தா மிஷன் நிர்வகித்து வந்ததால அதை ஒரு சாமியார் தான் நிர்வகிச்சு வருவார். எங்க பள்ளியையும் அப்படி ஒருத்தர் தான் நிர்வகித்து வந்தார். அவரை நாங்கள் பிரதர்னு தான் அழைப்போம்.. அவர் முழுக்க வெள்ளையாடை தான் அணிவார்.. வேஷ்டி துண்டு தான் அவரின் பிரதான ஆடை.. நானும் இன்னும் சில நண்பர்கள் சுரேஷ், இளையராஜா, முத்துக்குமார் போன்றோர் அவரின் ஆஸ்தான சீடர்கள் மாதிரி.. எங்களுக்கு அவர் தனியாக இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்னு நிறைய கதை சொல்லி கருத்தும் சொல்வார்.. அதனால எங்களுக்கு அவரை ரொம்ப பிடிக்கும், கதை நிறைய சொன்னதால..

அங்க ஹாஸ்ட்டலில் உணவு பரிமாறுவதென்பது எங்களுக்கிடையே பகிர்ந்து கொடுக்கப்பட்ட வேலை.. வாரம் ஒரு குழுன்னு இதை எல்லாம் கவனிக்கனும்.. சும்மா சொல்லக்கூடாது.. எப்போ யாரை கேட்டாலும் அவங்க இருந்த ஹாஸ்டல் சாப்பாடு பத்தி கதை கதையா கட்டுக்கட்டாய் குறைகள் சொல்வார்கள்.. ஆனால் இங்கே சாப்பாடு என்பது வீட்டுச் சாப்பாடுக்கு நிகரானது. அவ்வளவு ருசியா இருக்கும்.. அதுவும் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.. நான் ஆறாவது படித்த அந்த நேரத்தில் எட்டாவது படித்த சிவக்குமார் என்னும் பையன் கிட்டதட்ட பதினாறில் இருந்து இருபது சப்பாத்தி வரை சாப்பிடுவான்.. சாப்பிடுவதற்கு முன்னால் சாமியை, அன்னலட்சுமியை கும்பிட்டு தான் சாப்பிடுவோம்.. மூணு வேலை பூஜை உண்டு.. தினமும் மாலை முக்கால் மணி நேர பெரிய பூஜை உண்டு.. நானும் மேற்சொன்ன நன்பர்கள் தான் பக்தி பாடல்கள் பாடுவதிலிருந்து, பக்கத்தில் இருந்த பாய்ஸ் டவுனில் போய் பூக்களை பறித்து வந்து சாமிக்கு மணியடிச்சு தீபாரதனை காண்பிப்பது வரை எல்லாமே நாங்கள் தான்.. ஒவ்வொரு முறை வீட்டுக்கு லீவில் வரும் போதும், சாப்பிடும் போது அந்த மந்திரங்களை சொல்லும் என்னை என் தாய் தந்தையர் பெருமிதத்தோடு தான் பார்த்தார்கள்..

ஒரு முறை அந்த பிரதர் எங்களை மொட்டை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதால் (என்னென்ன காரணங்கள் சொன்னார் அவர் இதற்காக என்று ஞாபகம் இல்லை) நாங்கள் அனைவரும் மொட்டை போட்டுக் கொண்டோம்.. அடுத்த நாள் ஸ்கூலுக்கு போனோம்.. இந்த பிரதரையும் அவரது செயல்களையும் பிடிக்காதவங்கன்னு சில பேர் ஆசிரியர்களாய் இருந்தார்கள்.. அவர்களுக்கு எங்களை பார்த்தவுடன் அதிர்ச்சி.. பயங்கரமாய் கிண்டல் செய்தார்கள்.. இப்படி எல்லாம் இந்த சின்ன வயசுல மொட்டை எல்லாம் போடக்கூடாதுன்னு சொன்னாங்க.. கிளாஸ்ல வருகை பதிவேடு எடுக்கிறப்போ எல்லாம் என்னை கார்த்திகேயானந்தா என்று தான் பெயர் சொல்வார்.. என் நண்பர்களுக்கும் இதே கதை தான்.. அப்போ ரொம்ப எங்களுக்கு அவமானமா இருந்தது. எது சரி எது தவறுன்னு தெரியாத சின்ன வயசு அது.. இருந்தாலும் இனிமேல் பிரதர் சொன்னாலும் மொட்டை அடிக்கக் கூடாதுன்னு அப்போ முடிவு பண்ணினோம் நாங்க..

எங்கள் பள்ளியை ஒட்டிதான் மஞ்சளாறு ஓடுகிறது.. தினமும் காலை ஐந்து முப்பதுக்கே ஹாஸ்டலில் எழுந்திருக்க வேண்டும்.. அங்கேயே குளிப்பவர்கள் குளிக்கலாம்.. சுடுதண்ணி எல்லாம் கிடைக்கும்.. பிரதர் கூட ஆற்றுக்குக் கூட செல்லலாம்.. நான் பெரும்பாலும் ஆற்றுக்கு தான் செல்வேன்.. அங்கே நீச்சல் தொட்டி மாதிரி பாறையிலே இருக்கும்.. நீச்சல் தெரியாத நாங்க எல்லாம் அதில் தான் விழுந்து குளிப்போம்.. நீச்சல் தெரிந்த பசங்க, அதுக்கு மேல ஒரு பத்தடி உயரத்துல இருந்து குதிச்சு குளிப்பாங்க.. என்னடா கிராமத்துல இருந்து வந்திருக்கானே..நீச்சல் கூட தெரியாதுங்குறான்னு நினைக்காதீங்க.. நான் சின்ன வயசுல நீச்சல் கத்துக்கலாம்னு நினைக்கிற காலத்துல நீச்சல் கத்துக்கப் போன ரெண்டு பசங்க தண்ணில முங்கி இறந்து போனாங்க. அதுனால பயந்து போய் என்னை நீச்சல் கத்துக்க அனுப்பவேயில்லை.. அதுக்கு பிறகு ரொம்ப நாள் கழிச்சு நான் நீச்சல் தொட்டில கத்துகிட்டு எங்க ஊர் கிணத்துல இப்போ தான் டைவ் அடிச்சு பழகினேன்..

மெல்ல நானும் மேலயிருந்து அந்த பாறைத் தொட்டில குதிச்சு குளிக்க ஆரம்பிச்சேன்.. அப்படி ஒரு நாள் நான் மேலயிருந்து குதிச்சேன்.. மேலேயிருந்து குதித்ததால் சர்ருன்னு கொஞ்சம் தண்ணிக்குள்ள போயிட்டேன்.. அப்போ ஒரு முரட்டு உருவம் என் தோள் மேல ஏறி அமர்ந்தது.. என்னால மூச்சு கூட விட முடியல.. கார்த்தி நீ செத்தடான்னு மனசுக்குள்ள அம்மா, அப்பா எல்லோரையும் கடைசியா நினைச்சுக்கிட்டேன்..

(அப்புறம் எப்படி தப்பிச்சு உங்களை எல்லாம் போட்டு தாக்குறேன்னு நாளை சொல்றேன்)

தொடர்ச்சி பகுதி இங்கே

Wednesday, December 13, 2006

மந்திரிசபை மாற்றியமைப்பு.. விரிவான செய்திகள் விரைவில்..

நண்பர்களே.. நமக்கென்று ஒரு உலகம், நாடு, ஆட்சின்னு நாம எல்லாம் வாழ்ந்து வர்றது உங்களுக்கே தெரியும்.. அந்த ஆட்சில நாம எல்லோரும் சேர்ந்து ஒரு மந்திரிசபை கூட நிர்வகித்து வர்றதே இந்த உலகத்துக்கே தெரியும்.

அதுலைப்போது அமைச்சர் பொறுப்பில் இருக்கும் சிலபேர் சொந்த காரணத்தால் அலுவல்களை கவனிக்க முடியாததாலும், மேலும், நமது கட்சியில் இருக்கும் மற்ற நண்பர்களும் அமைச்சர் பதவிக்கு தகுதியானவர்களாய் இருப்பதாலும், விரைவில், நமது மந்திரிசபை மாற்றியமைக்கப்படுகிறது..

புதிதாக வருபவர்கள் அவர்களுக்கு வேண்டிய துறைகளை தலைவரிடமும் (பின்னூட்டத்துல தான்), கொ.ப.செவிடமும் (அவங்க பின்னூட்டதுல..இல்லைனா..இங்கேயே) சொல்லுங்கள்.. நீங்கள் ஆசைபட்ட பதவிகளை மற்றவர்கள் கேட்காத பட்ச்சத்தில் அது உங்களுக்கு அளிக்கப்படும்..

எப்பவும் போல நிறைய பின்னூட்டம் போடுபவர்களின் மச்சான் மாதிரி உறவினருக்கு வாரியத் தலைவர் போஸ்ட் தரப்படும் என்பதையும் கட்சி அறிவித்துகொள்கிறது.

வேதாவின் 100 வேதங்கள்

தன்னுடைய இந்தப் பதிவோடு தோழி, எங்கள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், வேதா, சதமடித்துள்ளார். சதமடிப்பது சாதாரண விஷயம் அல்ல.. அதுவும் எல்லா பதிவுகளையும் உருப்படியாக எழுதுவது சற்றும் சுலபமான காரியம் இல்லை. என்னை மாதிரி அசினுக்கு ஆணி குத்தியதையோ, அஜித்துக்கு விளம்பரம் கொடுத்தோ ஆயிரம் பதிவுகள் எழுதலாம்.. ஆனால் எழுதும் ஒவ்வொரு பதிவையும் கருத்துள்ளதாய், பயனுள்ளதாய், சமுதாய சிந்தனையோட எழுதுறது என்பது மிகவும் கஷ்டம்.. என்னைப் போல ஆட்கள் மரம் வைம்மா.. பிடிச்ச மூணை போடும்மான்னு மிரட்டி போட்ட பதிவுகளை தவிர்த்து பார்த்தால், பயண கட்டுரை, கவிதைகள், கதைகள்ன்னு பட்டயை கிளப்பியிருக்காரு..

அல்லும் பகலும் உழைத்து, விருட்சமாய் வளர வேண்டிய குழந்தைகள் வெறும் விழுதுகளாய், குடும்பத்தை தாங்கும் பெரிய மனுஷனாய் வாழும் அவலத்தை கண்டு மனம் கொதித்திருக்கிறார் வேதா, தன் பதிவிலே.. பெண்ணடிமை பற்றியும் அவர்களுக்கு ஏற்படும் கொடுமைகளையும் சாடி இருக்கிறார்.. நமக்கெல்லாம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கதையிலும் சொல்லி இருக்கிறார்.. ஒரு விஷயத்தையும் விட்டு வைக்கவில்லை.. ஏன் அரவாணிகளும் மனிதர்களே என்று அவர்களுக்காக மனம் கலங்கியிருக்கிறார்.. தமிழ் தெள்ளமுதை அள்ளி கவிதைகள் படைத்திருக்கிறார்.. இப்படி எல்லா விஷயத்திலும் தனது உணர்வுகளை பிரதிபலித்திருக்கிறார்.. வேதா.. உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட்.


இவங்க பிளாக் ஆரம்பிச்சது ஜூலை 2005
முதல் பதிவு ஜூலை 16 (ஆங்கிலத்துல)
ஜூலை 30 (தமிழில்)

இவர் தன்னுடைய முதல் பதிவிலயே இரண்டு பின்னூட்டங்கள் வாங்கியிருக்கார். அந்த பின்னூட்டத்தை இட்டவர் லீ என்பவர்..

படப் பதிவு.. வெறும் படங்களை மட்டுமே வைத்து இவர் ஒரு பதிவிட்டுருக்கிறார். அது பிப்ரவரி 12 அன்று

நான் முதலில் படித்த இவங்க பதிவு ஆறு மனமே ஆறு.. முதல் பின்னூட்டமும் இதுக்கு தான்..

என்னை(யும்) தலைவராக ஏறுக்கொண்டு இடைவிடாமல் கட்சித்தொண்டு ஆற்றி கட்சியை வளர்த்து வரும் கொள்கைபரப்பு செயலாளர் வேதாவுக்கு, வாழ்த்தி ஒரு பதிவு கூட போடலைனா எப்படி..

சதமடித்த டெண்டுல்கரை பெருமையோடும் மகிழ்ச்சியோடும் பாக்குற ஒவ்வொரு இந்தியனைப் போல தோழி வேதாவோட இந்த சதத்தை பாக்குறேன்.. கட்சிக்குள்ளே இருந்து, கட்சிக்காக உழைத்து, இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்திருக்கும் வேதாவுக்கு கட்சியின் சார்பாக விழா எடுக்க வேண்டுகிறேன்.. மேலும் சென்னை வேளச்செரியில் இருக்கும் தெருவுக்கு வேதா தெரு என்று பெயர் மாற்றி இந்த சாதனையை நாங்கள் அங்கீகரிக்கிறோம்..

மென்மேலும் இதுப் போல கருத்துள்ள பதிவுகள் 1000 எழுதி வளர கட்சியின் சார்பாக வாழ்த்துகிறோம்.

மேலும் அவரோட கவிதை பக்கத்துல 25வது கவிதையும் எழுதியிருக்கிறார் வேதா..

டபுள் வாழ்த்துக்கள் வேதா.. இந்த ரெண்டையும் படிச்ச நாங்கள் தேன்கிண்ணத்தில் விழுந்த எறும்பாய் திளைக்கிறோம்

Monday, December 11, 2006

சூப்பர் ஸ்டாருக்கும் இயக்குநர் சேரனுக்குமொரு ஒற்றுமை



தமிழகத்தின் சூப்பர் ஸ்டார், தலைவர் ரஜினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

அபூர்வ ராகங்களாய் கதவை திறந்து தமிழகத்துக்குள் வந்தவர், இன்னும் தங்க மகனாக, ராஜாதி ராஜனாக எத்தனையோ இதயங்களில் குடி கொண்டிருக்கும் இந்த சிவாஜி ராவுக்கு, இன்று பிறந்த நாள்..

தலைவா.. இனிய பிறந்த நாள் வாழ்துக்கள்.. உங்களின் படங்கள் இப்போது ரீமேக் செய்யப்படும் காலம்.. அவைகளும் உங்கள் பெயரை பறைசாற்றட்டும்..





சிறந்த படங்களை மட்டுமே ஆபாசம் இல்லாமல் விரசம் இல்லாமல் இது வரை தந்துகொண்டிருக்கும் நல்ல இயக்குநர் சேரனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பாரதி கண்ணமாவில் தொடங்கி இன்றைய தவமாய் தவமிருந்து வரை இவரது ஒவ்வொரு படைப்பும் சிறந்தது.. இப்போது இவர் இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் மாயக்கண்ணாடியை பார்க்க மிக ஆவலாய் இருக்கிறோம்.

இயக்குநர் சேரன் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அட, ஒற்றுமை என்னன்னு சொல்லணுமா என்ன, நண்பர்களே?

பாரதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்



சுதந்திர போருக்கும், பெண்ணடிமை எழுச்சிக்கும் போன நூற்றாண்டு ஆரம்பதிலேயேஅக்னி குஞ்சை, தீயை கொழுத்தி போட்ட, முறுக்கு மீசை வைத்த முண்டாசு கவிஞர் பாரதிக்கு,

இந்த தமிழ் நெஞ்சத்தின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

நிற்பதும், நடப்பதும் என எல்லா உயிருக்கும் அன்பு செய்தான்..
ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தை அழிப்போம் என்றான்..
பட்டங்கள் ஆள சட்டங்கள் செய்ய பாரினில் பெண்கள் நடத்த வந்ததாக கூற்று சொன்னான்..
வெறும் வேடிக்கை மனிதரை போல் தான் இல்லை என்று கர்ஜித்தான்..

வெறும் பாட்டாய் மட்டும் பாடாமல் இவன் கண் சூரிய ஒளியை நாமும் கொஞ்சம் பெற்று, உள்ளத்திலே நிறுத்தி,
இச்சமுதாயம் சிறக்க ஒற்றுமையோடு வாழ்வோம்..

பாரதியின் எண்ணங்களுக்கு உயிர் கொடுப்போம் நண்பர்களே..

Friday, December 08, 2006

ஸ்ரீரங்கத்து பெருமாளும் ஈரோடு பெரியாரும்

கடவுளும் இல்லை.. எல்லாம் கல் என்று சொன்ன பெரியாருக்குச் சிலை.. அந்த சிலை, ஸ்ரீரங்கத்தில் அதே போன்று எதிர்மறையான எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கு சிலைகள் அமைத்து அவர்களின் நம்பிக்கையை தொடர்வதற்காகவும், பழம் தமிழ் மக்களின் கட்டிடக் கலைக்கு சான்றாகவும் விளங்கும் கோவிலின் முன்னே இருந்தது இடிக்கப் பட்டுள்ளது.. இந்த செய்தி ஒரு பெரிய சம்பவமாக, விழியிழந்தோர் யானையை தொட்டுப் பார்த்து காத்தாடி..தூண் என்று அவர்களின் எண்ணங்களுக்கேற்ப ஒவ்வொரு கருத்துகளை சொன்னது போல தங்களின் ஊடங்கங்கள் வழியாக ஒவ்வொரு செய்திகளை பரப்பி வருகின்றனர். எப்பவும் போல இந்த சம்பவம் விறகு இருக்கும்வரை எரியும் அடுப்பு போல எரிந்து விட்டு பிறகு அணைந்து போவது உறுதி.

இப்போதெல்லாம் ஊடகங்கள் அதன் உரிமையாளரின் எண்ணங்களை பிரதிபலிப்பதற்காகவும் ஆதராவாகவும் செய்திகள் பரப்புகின்றன. அதுவும் ஒவ்வொரு பத்திரிக்கையின் விற்பனை, படிப்பவர் எண்ணிக்கை எல்லாம் அளவுகோலாக இருப்பதால் வாசகர்களை கவருவதற்காகவே செய்திகளை வெளியிடுகின்றன. போன வாரம் காஷ்மீர் எல்லையில் ஏதோ ஒரு சிறிய சண்டையில் ஒரு இராணுவ வீரர் நாட்டுக்காக உயிரை விட்டிருக்கிறார். அது பிபிசி செய்திகளில் ஒளிபரப்புகிறார்கள். ஆனால் நமது நாட்டு சேனல்களோ, சஞ்சய் தத் பெயிலில் வெளிவந்ததையும், அதற்கு இன்னொரு 'உத்தம ராசா' சல்மான்கான் தரும் பேட்டியையும் மாற்றி மாற்றி ஒளிபரப்பி இருக்கின்றனர். போட்டிகள் சேனல்களுக்கிடையே இருக்கலாம்.. அதற்காக இப்படியா செய்திகளை தருவது.

பெரியார் கடவுள் இல்லை என்றும்.. அப்படிப்பட்ட வழிபாடு தவறு என்று சொன்னார் என்றும் வைத்து கொள்வோம்.. அப்படிச் சொன்னவருடைய கருத்துக்கு முரணாக அவர் 'வழிபடுவோர்', வழிபட சிலை அமைத்தது தவறு என்றும் வைத்துக் கொள்வோம்.. ஆனால் சிலை வைத்து, அமைதி, சாந்தம், நிம்மதி, பிறரை துன்புறுத்தாமை என்று உலகிற்கு போதித்தவரை வணங்கும் அன்பர்கள் ஏன் இப்படி ஒரு துவேச செயலை செய்ய வேண்டும்.. வெளிச்சம் நிறைந்த பகல் இருப்பதால் தான் அடர்ந்த இரவின் அழகு உலகிற்கு தெரிகிறது. வெயில் இருப்பதால் தான் நமக்கு நிழலின் அருமை புரிகிறது. பெரியார் போன்ற சிலர் சொன்னது உண்மையோ பொய்யோ, சரியோ தவறோ.. அவரும் அவருடையோ கருத்துகளும் இன்னும் இருப்பதாலேயே கடவுள்களை வழிபடும் அன்பருக்கு அவர்களுக்கு அந்த ஆன்மீக சக்தியின் மேல் இருக்கும் பற்றும், அந்த சக்தியின் உண்மையும் தெரிகிறது. அதற்கு நாம் அப்படிப்பட்ட ஒரு சுய சிந்தனையை நமக்குள் தூண்டி விட்ட பெரியாருக்கு நன்றியல்லவா சொல்ல வேண்டும்..

கடவுளை கண்மூடித்தனமாக எதிர்த்தார் பெரியார் என்பதை இப்போதைக்கு மறந்துவிடுவோம். சாதிய வேறுபாட்டை களைய முற்பட்டாரே அதை வரவேற்கலாமே.. பெண்ணியதுக்கு ஆதரவாக பல கருத்துகளை கூறியுள்ளாரே அதை கடைபிடிக்கலாமே.. அதுக்காக சிலை வைத்தார்கள் என்று எண்ணிக்கொள்வோம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகமும் ஒரு கடவுளும் இருகின்றது. ஒன்று முழித்திருக்கும் போது மற்றொன்று ஆழ்ந்த தூக்கத்தில் கிடக்கிறது. இரண்டையும் புரிந்து, கடவுளின் காலடியில் நாமும் சாத்தானின் குடுமியை கையிலும் பற்றி இருந்தாலே போதும்.. ஒரு மனிதன் சொல்லும் எல்லாவற்றையும் என்றைக்குமே யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.. பெரியாருக்கே சிலை வைத்த அவரது தொண்டர்களைப் போல.. ஆனால் நாம் தெய்வத்தை வணங்குபவர்கள்.. அந்த தெய்வம் நாம் இப்படி இருக்க வேண்டும் என்றும் ஒரு பெரிய கீதையே வாசித்து, போதித்து போயிருக்கிறார். ஒரு பைபிளையும் குரானையும் தந்துவிட்டு போயிருக்கிறது.. அதையெல்லாம் படித்த நாம் என்ன தான் எதிரியாய் இருந்தாலும், என்ன தான் நமது கருத்துகளுக்கும் எண்ணங்களுக்கும் நம்பிக்கைக்கும் எதிராக இருந்தாலும் மற்றொருவர் மனதை புண்படுத்துமாறு இப்படியொரு செயலை செய்யலாமா.. யாராய் இருந்தாலும் அவர் கருத்து எதுவாக இருந்தாலும் நமக்கு எரிச்சல் மூட்டுவதாக இருந்தாலும் சகித்துகொள்ள வேண்டும்.. நீங்கள் எவ்வளவு நாள் தான் இதையெல்லாம் சகித்துக் கொள்வது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.. அதற்காக சிலை உடைப்பு நமது வேலை இல்லையே. அப்படி செய்தால் நாமும், நமக்கு சொல்லப்பட்ட, போதிக்கப் பட்டவைகளுக்கு எதிராகவும், அதை எதிர்த்தும் செய்தது போலவும் ஆகிடாதா..

ஒரு கொள்கையை ஆதரிப்பவர் குறைவு என்பற்காக அந்த கொள்கை தவறு என்பதோ, அதிகம் என்பதால் அது சரி என்பதோ உண்மை கிடையாது. இன்று பெரியார் சிலையை உடைத்தற்காக எத்தனை பேர் பொங்கி எழுந்தனர்.. பொங்கி எழுந்தவர் குறைவு என்பதால் இவ்வாறு நடக்க எல்லோரும் அனுமதித்தால், இன்னொரு கோணத்தில் பார்த்தால், கருத்து சுதந்திரம் என்பது இல்லாமல் போய்விடுமே.. எதிர்காலத்தில் புதிதாய் ஒரு கருத்தை சொல்ல எல்லோருக்கும் பயமே வரும். உலகம் உருண்டை என்பதை சொன்னதால் தூக்கிலிடப் பட்ட கலிலியோ மாதிரி.

பெரியாரின் நல்ல கொள்கைகளை மட்டும் எடுத்து கொண்டு அல்லவற்றை அல்ல என்று ஒதுக்கிவிட்டு, நாம் என்றும் நமது நம்பிக்கையின் வழியிலே செல்லலாம். இதை வைத்து அரசியல் செய்வதும் சில நாட்கள் வெறும் வாயை மெல்வதும் தமிழகத்தில் பல பேருக்கு கை வந்த கலை.. இது போன்ற சம்பவங்கள் நடப்பதால் தேவையில்லாத பிரச்சினைகளும், பெரியாருக்கு தேவை இல்லாத விளம்பரமும் தான் கிடைக்கும்.

தெருக்கு தெரு மைக் போட்டு இவர்கள் என்ன பேசினாலும், அங்கங்கே கறுப்பு பலகை வைத்து தினமும் ஒரு திருக்குறள் மாதிரி பெரியாரின் முரண்பட்ட கருத்துகளை எழுதி வைத்தாலும், சிலைகளை வைத்து மாலைகள் போட்டு கடவுளே இல்லை என்று சொன்னவரை இன்னொரு கடவுளாக்க முயற்சி நடந்தாலும் நீங்கள் கண்டு கொள்ளாமல் இருங்கள். அய்யா, பெரியார் சீடர்களே, தயவு செய்து உங்கள் கருத்துக்களை மற்றவர் மனம் நோகாதவாறு சொல்லுங்கள்.. நமக்கு அளிக்கப்பட்ட கருத்து சுதந்திரம் நமது கருத்துகளை சொல்லத் தான்.. மற்றவர் மனதை புண்படுத்த இல்லை.

நீங்களும் இது மாதிரி மறுபடியும் சிலை உடைப்பு சம்பவங்களில் ஈடுபடாதீர்கள்.. சிலைகளை உடைப்பதாலேயே பிரச்சினைகள் தீர்ந்து விடாது.. எந்த கருத்துகளையும் அழித்து விட முடியாது.

அவனவன் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், தண்ணீர் பிரச்சனை, மாசுபட்டுப் போன இயற்கை, ஏறி இறங்கும் நாட்டின் பொருளாதாராம், வெளிநாட்டு தீவிரவாதிகளின் ஊடுருவல் இப்படி சொல்லிகொண்ட போகிற அளவுக்கு அத்தியாவசிய பிரச்சினைகள் இருக்கும் போது, வெடிகுண்டு செய்வது எப்படி, சஞ்சய் தத் பெயிலில் வந்தது என்று உப்புசப்பு இல்லாத விஷயங்களை போட்டு மக்களை ஏமாற்றும் டிவி சேனல்கள் மற்றும் பத்திரிக்கைகள், இனிமேலாவது மக்களிடையே அன்பும், அடுத்தவரை மதிக்கும் மாண்பும், எதிரியை பார்த்து புன்னகைத்து அவனது கருத்தை மட்டும் எதிர்க்கும் பக்குவப்பட்ட மனநிலையை தரும் செய்திகளையும் விஷயங்களையும் போடுங்கள்.. உங்களுக்கு கருத்து சுதந்திரம் மட்டுமல்ல, பத்திரிக்கை தர்மம் மற்றும் மனித நெறி காக்கும் ஒப்பற்ற பணியும் இருக்கிறது.

முதல்வர் பேசிய பேச்சில் எனக்கு பிடித்தமான வரியை தான் நான் இங்கே போட்டிருந்தேன்.. அதை நீக்கி விடுகிறேன் இப்போது..

Thursday, December 07, 2006

நடிகை அசினுக்கு காலுல அடி..

அசினை பத்தி இப்படி எல்லாம் எழுதிட்டு ஒரு மன நிறைவா உட்கார்ந்தா நம்ம சினி பிட்ஸ் சிட்டுகுருவி.. ஒரு குண்டை தூக்கி போடுது

போக்கிரில டான்ஸ் ஆடினப்போ அசினுக்கு ஏதோ காலுல அடியாம்.. ஏதோ ஒரு குத்துப்பாட்டுக்கு காலுல ஷூவோ செருப்போ இல்லாம ஆடியிருக்காங்க.. கீழ கிடந்த ஒரு ஊசி அப்படியே காலை தச்சிடுச்சாம்.. ஏ.வி.எம் தளமே அதிர்ற மாதிரி வலில... பாவம் பொண்ணு கத்தியிருக்கு.. என்ன கல் மனசு அந்த ஊசிக்கு.. இல்ல அதுக்கு முத்தம் இப்படித்தான் கொடுக்கத் தெரியுமோ என்னமோ.. அவ்வளவு காதலாம் அதுக்குக்கு கூட அசின் மேல.. ஆனாலும் அசினோ பத்தே நிமிசத்துல மறுபடியும் ஆட ரெடின்னு சொல்ல டைரக்டர் பிரபுதேவாக்கு இன்ப அதிர்ச்சி.. இருந்தாலும் இவ்வளவு கடமை உணர்ச்சி இந்த பொண்ணுக்கு ஆகாது. அதுமட்டும் இல்லாம போற வழில ஹாஸ்பிட்டல் ஒரு ஊசிய போட்டுகிட்டு ஆழ்வார் டப்பிங்கலயும் ஆஜர்..

இந்த சின்சியாரிட்டிக்காகவே அசின் பெண்ணே திரையுலகில் இன்னும் பல காலம் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து பேர் வாங்க வாழ்த்துக்கள்..

வெற்றித் திருமகள் அழகிய அசின்



காலை எழுந்த சூரியன் உலகிற்கு மஞ்சள் பெயின்ட் அடித்து கொண்டிருந்த நேரம்.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்.. வெளியூர் பஸ் எல்லாம் பயணிகளை இறக்கி விட்டுக்கொண்டிருந்தது.. மஞ்சள் கலர் சுடிதாரில் அவள்.. பஸ்ஸின் முன்பக்க வழியா எட்டிப் பார்க்கிறாள்..என்ன ஒரு அழகு.. கடவுளின் சொந்த நாடு என்று கேரளாவை சொல்வார்கள்.. அந்த கேரளாவின் இயற்கை அழகிற்கு ஒத்துப் போவது போல் அவளும் இருந்தாள்.. கறுப்புகலர் பேண்ட் போட்ட குதிரைவால்.. மஞ்சள் நிற சால்வரில் ஒரு கையில் பையுடன் அவள் நடந்து வரும் அந்த பாவனைக்கு, அவள் கேட்பது அடுத்தவனிடன் இருந்தால் கூட பிடுங்கி தரலாம்..ஹ்ம்ம்..திருடியும் தரலாம்.. சின்ன பருக்கள் கொண்ட வெண்ணிலா முகம்.. நெற்றியில் மெருன் கலர் ஸ்டிக்கர் பொட்டு.. உதட்டில் எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும் அழகுப் புன்னகை.. கட்..கட்..கட்..

இப்படித்தான் இருக்கும், எம்.குமரன் சன் ஆப் மகாலெட்சுமியில் அசின் அறிமுக காட்சி.. அசினுக்காகவே ஆறேழு தடவை பார்த்த படம்.. என்ன ஒரு விளையாட்டுத்தனமான, துடுக்குத்தனமான நடிப்பு.. ஸ்டைலா நின்னு பீடி குடிக்க முயற்சி பண்ணுவதாகட்டும்.. பிராந்துன்னு ஜெயம் ரவியை கிண்டல் பண்ணுவதாகட்டும்..இடுப்பை ஒடித்து அய்யோ அய்யோ ன்னு பாட்டு பாடுவதாகட்டும்.. படத்த பாத்த எல்லோருக்கும் மனசுல நிச்சயம் நிக்கிற ஆள் அசின்.. அதுக்கு அடுத்து வந்த கஜினி படத்துல அசினோட நடிப்பை பத்தி சொல்லவே வேண்டாம்.. படம் பாத்துட்டு வெளிய வர்றப்போ.. சாகுறதுக்கு முன்னாடி கண்களாலையே ஆயிரம் வார்த்தைகள் பேசுற, அந்த நடிப்பும் அந்த முகமும் மனசை போட்டு பிசையவே செய்திருக்கும்.. அப்படி ஒரு இயற்கையான நடிப்பு ஆற்றல் அசினுக்கு உண்டு.. அதன் பிறகு வந்த உள்ளம் கேட்குமே (இந்த படத்தில் தான் அவர் நடிப்பதற்காக முதலில் ஒப்பந்தம் ஆனார்), சிவகாசி, மஜா, வரலாறு போன்ற படங்களில் இவர் நடிப்பு திறனுக்கு ஏற்ற கதை இல்லையென்றாலும் இவரை கொண்டு போய் உச்சியில் இந்த படங்கள் வைத்ததென்னவோ உண்மை..



இப்போது அஜித்துடன் ஆழ்வாரிலும், விஜயுடன் போக்கிரியிலும், கமலுடன் தசவதாரத்தில் இரு வேடத்தில் நடிச்சுகிட்டு இருக்க அசின், தனது கதாபாத்திரத்தின் அழுத்தம் கதையில் பார்த்தே படங்களை ஒப்புக்கொள்கிறார்..

சமீபத்தில் சிஃபி.காம்-ல் பார்த்த ஒரு கட்டுரை தான் இந்த பதிவுக்கு ஒரு மூலாதாரம். மற்ற எந்த நடிகையை விடவும் வெற்றி சதவிகிதம் அசினுக்கு அதிகம் என்று அந்த கட்டுரை சொல்கிறது. அது என்ன அப்படின்னு நாமளும் சற்று பார்ப்போமே..

கடந்த இரண்டு வருடத்தில் அசின் நடித்த படங்களும் அந்த படத்தின் வெற்றி தோல்விகளும்...

எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி (சூப்பர் ஹிட்)
கஜினி (வெள்ளிவிழாப் படம் - பிளாக்பஸ்டர்)
உள்ளம் கேட்குமே (ஹிட்)
சிவகாசி (சூப்பர் ஹிட்)
மஜா (தோல்வி - பிளாப்)
வரலாறு (சூப்பர் ஹிட்)




வெளிவந்த ஆறு படங்களில் மஜாவைவிட மற்ற ஐந்து படங்கள் நல்ல மகசூலைத் தான் தந்திருக்கின்றன.. கிட்டதட்ட 83% வெற்றி.. இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனை.. அதுவும் இல்லாமல் வேறு எந்த நடிகருடன் இதுவரை இவரை யாரும் கிசுகிசுத்துப் பேசப்படவில்லை.. கால்ஷீட் பிரச்சனை தராமல், தயாரிப்பாளருக்கும் எந்த தொந்தரவும் தந்ததில்லை.. அதனால் இப்போது எல்லோரும் புருவம் தூக்கி பார்க்கும் வண்ணம் உயர்ந்து இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு அந்தஸ்தை இவருக்கு தந்தது கஜினியின் கல்பனா பாத்திரம் தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.. மேலும் ஹிந்தியிலும் கஜினி ரீமேகில் இவர் நடிப்பார் என்பது இப்போது நடக்காத ஒரு விஷயமாகி விட்டது. இல்லை என்றால் ஸ்ரீதேவிக்கு பிறகு ஹிந்திக்கு செல்லும் நடிகைகளில் மிகவும் எதிர்பார்ப்பு உள்ளவராக இருந்திருப்பார்.

கடந்த காலத்தில் சாவித்ரி போன்ற நடிகைகள் பெரும்பாலும் கதையம்சம் கொண்ட படங்களில் நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்தனர். இப்போதெல்லாம் நடிகைகள் படங்களுக்கு மசாலா ஐயிட்டம் போலத் தான் பயன்படுத்தப் படுகிறார்கள்.. இதற்கு நல்ல கதையம்சம் இல்லாமல் பத்துபாட்டு ஒரு படத்துக்கு..அதில ரெண்டு குத்துப்பாட்டுன்னு ஒரு கலாசாரம் வேற.. கஜினிக்கு பிறகு அசினுக்கு சும்மா திரையில் தோன்றி என்னாத்த சொல்வேனுங்க ன்னு ஹீரோ கூட ஒரு குத்தாட்டம் போட்டோமா என்பது போலத் தான் படங்கள் கிடைத்து வருகின்றன..

இப்போது நடித்து வரும் படங்களில் கூட ஆழ்வாரிலும் போக்கிரியிலும் ஹீரோவுக்கு காதலியாகத் தான் வந்து போவார் என்று நினைக்கிறேன்.. இரு வேடத்தில் வரும் தசவதாரத்திலாவது ஏதாவது ஒன்றில் தனது கல்பனா போன்ற நடிப்பை காட்டுவாரா என்று பார்ப்போம்..



அதுவரை..இப்படி வெற்றித் திருமகளாக வலம் வரும் அசின் மேலும் வெற்றிப் பெற அசின் ஜொள்ளர்கள் சங்கம் வாழ்த்துகிறது.. அதுவும் தல, தளபதி நடிச்சு பொங்கல் அன்று வெளிவரும் படங்கள் வெற்றி பெற இப்போவே அசின் உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

Wednesday, December 06, 2006

காதலனே கண்கண்ட தெய்வம் - பகுதி 4 (நிறைவு பகுதி)

இந்த கதையின் முந்தைய மூன்று பகுதிகளை படிக்க...

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி


ஆட்டோ தரமணியை நெருங்கி இருந்தது.. பின்னால் இன்ஸ்பெக்டர் இன்பவேலன் ஆட்டோவை நெருங்கி இருந்தார்.. அதற்குள் அவர் கொடுத்த தகவல் கிடைத்து வேளச்சேரி போலீசும் ஜீப்பில் விரட்டி வந்து கொண்டிருந்தது.. ரோட்டில் போகும் மொத்த சனமும் என்னமோ ஏதோ என்று இந்த துரத்தல் காட்சியை பார்த்து கொண்டிருந்தது..

சண்முகம் சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தான்.. இப்படி செஞ்சு வச்ச சிலை மாதிரி ரெண்டு பொண்ணுக மாட்டும் என்று அவன் கனவுல கூட நினைக்கவே இல்லை.. மெல்ல தலையை நீட்டி பின்னால் திரும்பி பார்த்தான்.. பசித்த புலி மாதிரி இன்பவேலன் பறந்து வந்து கொண்டிருந்தேன்.. இவன் தலையை பார்த்ததும் இன்பவேலனுக்கு இன்னும் கோபம் கூடி வண்டியின் வேகமும் கூடியது.. இவன் எப்படி இங்கே வந்தான்..சிவ பூஜைல கரடி மாதிரி.. நம்மள பாலோ பண்றதே இவன் வேலையாப் போச்சு..என்று நினைத்தவாறே மயக்க மருந்தை எடுத்த சண்முகம், மெல்ல பாவனா பக்கம் திரும்பி மேடம் மேடம் என்று அழைத்தான்... மெல்ல திரும்பினாள் பாவனா.. அவள் முகத்துக்கு நேரே வைத்து மயக்க ஸ்ப்ரேயை அடித்தான் சண்முகம்.. அந்த நேரம் பார்த்து.. அதிலிருந்து காத்து கூட வரவில்லை..சட்டுன்னு நிலைமையை உணர்ந்த பாவனா தனது ஹை-ஹீல்ஸ் செருப்பு போட்ட காலால் சண்முகத்தை ஓங்கி உதைத்தாள்.. இதை சற்றும் எதிர்பாராத சண்முகம் ஆட்டோவைவிட்டு வெளியே போய் தலைகுப்புற விழுந்தான் அந்த தார்ரோட்டில்.. விழுந்த வேகத்தில் எழுந்தான் சண்முகம்.. ஆட்டோவை நோக்கி ஓடினான்.. இவன் கீழே விழுந்தவுடன் பயந்து போன காளிதாஸ் ஆட்டோவிலிருந்து குதித்து ஓடினான்..

அதுவரை சமத்து பிள்ளையாய் இன்ப்வேலன் கையில் படுத்துக் கிடந்த கைத் துப்பாக்கி சண்முகத்தை நோக்கி எழுந்தது.. ஓடிய சண்முகம் டிரைவர் இல்லாமல் ஓடிய ஆட்டோவை பிடிக்கவும் இன்பவேலனின் துப்பாக்கி குண்டு சண்முகத்தின் காலை முத்தமிடவும் சரியாக இருந்தது.. காலில் குண்டடி பட்டாலும் கையில் பற்றிய ஆட்டோவை விடாமல் அதுகூடவே விந்தி விந்தி ஓடினான் சண்முகம்.. அந்த இடத்தில் இன்பவேலனை பார்த்தவுடன் சொல்லாத அந்த பாசம்.. காதல்.. மனசுக்குள் முட்டி பாவனாவின் கண்களில் கண்ணீராய் பெருகியது.. வேலன் என்று கத்திகொண்டே ஆட்டோவை விட்டு வெளியேற இந்தப்பக்கம் வந்த பாவனாவை பிடித்து வெளியே இழுத்தான் சண்முகம்.. அவன் இழுத்ததில் நிலைகுலைந்த பாவனா ரோட்டில் விழப்போக, அவள் தலைமுடியை கொத்தாக பிடிக்க போனான் சண்முகம்.. அதே நேரத்தில் அந்த இடத்துக்கு வந்த இன்பவேலன், சண்முகத்தை வலது காலால் எட்டி உதைத்தான்.. இடது கையால் பாவனாவை தாங்கினான்.. நிலைதடுமாறி ஓடிய ஆட்டோ ரோட்டின் பக்கவாட்டில் இருந்த ஒரு பள்ளத்தில் இறங்கி நின்றது.. உள்ளே இந்த சம்பவத்தை எல்லாம் பார்த்து காவ்யா மயக்கம் போட்டு கிடந்தாள்..

வேலன்..வேலன்..என்று அவன் மார்பில் தலை சாய்த்து அழுதாள் பாவனா.. அவளின் தலை தடவி சமாதானப் படுத்தவா.. இல்லை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து..காதல் பூ ஒரு போர்க்களத்தில் பூத்தது கண்டு இன்பத்தில் திளைத்து கிடந்தான். அதே நேரம் ஆட்டோவுக்குள் மயங்கி கிடந்த காவ்யாவை கண்ட சண்முகம் மெல்ல எழுந்து அவளை நோக்கி குண்டு பாய்ந்த கால்களை இழுத்துக் கொண்டு நடந்தான்.. ஏதேச்சையாக திரும்பி பார்த்த இன்பவேலன் சண்முகத்தின் மார்பை நோக்கிச் சுட்டான்.. கொண்டு பட்ட வேகத்திலே சுருண்டு விழுந்தான் சண்முகம்..

இன்பவேலன் வீடு

பாவனாவின் பெற்றோர்களும் இன்பவேலனின் பெற்றோர்களும் முறையாக இன்பவேலனுக்கும் பாவனாவிற்கும் இடையே கல்யாணத்தை நிச்சயம் செய்தனர்.. தனது தோழியே தனக்கு அண்ணியாக வரப்போவதை நினைத்து பவித்ரா மிகுந்த சந்தோசத்தில் இருந்தாள்..

இரவு வேலை..மொட்டை மாடி..வான் நிலா தனியாக மேகத்துக்கிடயே நடை போட்டுகொண்டு இருக்க, வையத்து நிலா பாவனா இன்பவேலனின் தோளில் சாய்ந்து கொண்டிருந்தாள்..இருவரும் அங்கேயே இல்லை.. பின்ன ஒரு கட் சொல்லி பாத்தா மொரிஷியஸ்ல புது லொகேசன்ல..ரெண்டு பேரும் டூயட் தான்..

காக்கிச் சட்டை போட்ட மச்சான்..
கொக்கி போட்டு மனசை தச்சான்..
என்று யுவன் இசைல கேகேவும், சுஜாதாவும் பாட.. ஒரு உல்லாச உலகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

(நான்கு வாரத்திற்குள் முடிய வேண்டிய கதை நேரமின்மை காரணமா ஏழு வாரங்களில் தான் முடிக்க முடிந்தது.. இது சென்னையில் ஒரு கால் சென்டர் பெண்ணுக்கு நடந்த ஒரு கொடுமையை படித்துகொண்டு இருந்தப்போ உதித்தது.. )

Tuesday, December 05, 2006

அம்மா அப்பாவும் ஒரு 4000 டாலரும்

பணம்..பணம்..பணம்..இப்படி மனசுகுள்ள லப்டப்னு அடிக்கிறதுக்கு பதிலா உங்க மனசு அடிச்சக் கூட பரவாயில்லை.. இந்த உலகத்துல இது இல்லாம நீங்க இருக்க முடியாதுங்குற வாதத்தை நான் ஏத்துக்குறேன்.. ஒரு மனுஷன் கிட்ட எவ்வளவு பணம் இருந்தாலும் வசதிகள் இருந்தாலும் ஒரு பிள்ளையை வளர்த்து நல்லதொரு இடத்துல வச்சு பாக்குறது எவ்வளவு கஷ்டம்ங்கிறது அனுபவிச்சவங்களுக்கே தெரியும்.. சின்ன வயசுல மறக்காம போலியோ தடுப்பு ஊசி போடுறதுல இருந்து ஒவ்வொரு விஷயமும் பெத்தவங்களுக்கு பெரிய சோதனைகள் தான்.. சின்னதா உடம்புக்கு வந்தாக்கூட டாக்டர்கிட்ட ஓடி என்னன்னு பார்த்து... அது சரியாகி பொக்கை வாய் விரிச்சு சிரிப்பீங்களே..அது வரைக்கும் எங்க போனாலும் அவங்களுக்கு அந்த பிள்ளையோட நினைப்பாத்தான் இருக்கும்.. இப்படி உருகி உருகி வளர்த்த பிள்ளைக்கு பெத்தவங்களை விட 4000$ தான் பெருசா..?

பள்ளிகூடதுக்கு போறதுல எவ்வளவு பிரச்சனைகள்..ஷேர் ஆட்டோல போனா..அய்யோ புளிமூட்டை மாதிரி அடச்சுட்டு போறானேன்னு ஒரு வருத்தம்..அய்யா..பணக்காரனா கார்ல ஸ்கூலுக்கு போனாக்கூட கூட்டிட்டு போற டிரைவர் யார்கூடவாவது சேர்ந்து பணத்துக்காக கடத்தாம இருக்கனுமேன்னு ஒரு பயம்..நடந்து போனா..எப்படி ரோட்டை கிராஸ் பண்ணி போயிட்டு வரப்போறானோன்னு ஒரு பயம்.. இப்படி நொடிக்கு நொடி பிள்ளை மேல பெத்தவங்க வச்ச பாசத்துக்கு 4000$ மதிப்பு கூடவா இல்லாம போயிடும்..?

எனக்கு சின்ன வயசுல பஸ் ஏறினாவே தூக்கம் வந்துடும்..தூங்கிடுவேன்.. அப்போ நான் மூணாவது படிச்சுகிட்டு இருந்தேன்.. அப்படி ஒரு நாள் திண்டுக்கல்ல பஸ் ஏறி எங்க வெள்ளோட்டுப்பிரிவுல இறங்காம விட்டுட்டேன்..பஸ் காந்திகிராமம் போயிடுச்சு..(இது நான் இறங்கவேண்டிய ஸ்டாப்ல இருந்து மூணு கிலோமீட்டர்) எழுந்து பார்த்த நான் வெளில வேற ஸ்டாப் பேர் பார்த்து பஸ் அதிர்ற மாதிரி ஒரே அழுகை.. பஸ் கண்டக்டர் என்னை சமாதானப் படுத்தி திரும்பி வர்றப்போ என்னை அதே ஸ்டாப்ல இறக்கிவிடுறேன்னு சொன்னார்.. திரும்பி அந்த பஸ் ஸ்டாப் வர்றதுக்கு கிட்டதட்ட ஒரு மணி நேரதுக்கும் மேல ஆயிடுச்சு.. என் ஸ்டாப்ல இறங்கி எங்க ஊருக்கு ஒரு கிலோமீட்டர் நடக்கனும்..நடந்து போய் என் வீட்டுக்கு போனா ஒரே கூட்டம்.. எங்கம்மா என்னைக் காணாம எல்லா பசங்ககிட்டயும் விசாரிச்சு இருக்காங்க.. ஒவ்வொருத்தரும் ஒரு பதில் தர பயந்துபோயிட்டாங்க.. அப்ப அழ ஆரம்பிச்சவங்க தான் என் முகத்த பார்த்தவுடன் தான் முகதுல சிரிப்பு வந்தது.. இப்படி ஒவ்வொரு மகனையும் மகளையும் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து இருப்பங்க..அப்படி பட்ட அப்பா அம்மாவோட அன்புக்கு ஒரு 4000$ கூட பெறுமானம் ஆகாதா என்ன..

எனக்கு அப்போ ரெண்டு மூணு வயசு இருக்குமாம்.. நாங்க அப்போ மும்பை பக்கத்துல பொம்பூர்னாங்கிற இடத்துல இருந்தோம்.. வாசலில எனக்கு எங்கம்மா பருப்பு சோறு ஊட்டிகிட்டு இருந்தாங்க.. நான் அப்போ சாப்பாடெல்லாம் மத்த குழந்தைகள் மாதிரி அடம் பிடிக்கமாட்டேனாம்.. எடுத்துட்டு வந்த சோறு தீர்ந்து போனதால, சமையல் ரூம்ல சாதம் எடுக்க போயிருந்தாங்களாம்.. சமயல் ரூம் அங்கே இருந்து ரெண்டு ஸ்டெப்தான் இருக்குமாம்.. அதனால என்னை விளையாடவிட்டுட்டு உள்ள போயிட்டாங்களாம்.. வந்து பாத்தா எனக்கு முன்னால பாம்பு..நான் அதை பிடிக்க கையை நீட்டிகிட்டு போறேனாம்.. பாத்தவுடன் எங்கம்மாவுக்கு உசிரே இல்லியாம்.. ஒரே கத்த கத்திகிட்டு என்னை தூக்கி இருக்காங்க..பாம்பும் பயந்தும் பக்கத்துல இருந்த ஒரு புதருக்குள்ள போயிடுச்சாம்.. அப்படி நம்மள பாதுகாத்த அம்மா அப்பவை போய் பாக்க 4000$ செலவு ஆகுதுன்னு போகாம இருக்க ஒரு பையனை நினைத்தா என்ன செய்றது..?

அரும்பாடுபட்டு உங்களை காத்ததால தான் இன்னைக்கு நீங்க சொகுசா அமெரிக்காவுல உட்கார்ந்து பிள்ளைகுட்டியோட என்ஜாய் பண்றீங்க.. அவங்க மகனை பாக்கணும்னு இந்தியாவுக்கு கூப்பிட்ட 4000$ செலவாகுமேன்னு ஒரு காரணம் சொல்லி போகாமல் இருக்கும் உங்களை மாதிரி மனுஷங்களை எங்கேயா கொண்டு போறது.. உங்களையும் எப்படித் தான் இந்த பூமிமாதா சும்மா சுமக்குறாளோ.. உலகத்துல எந்த எந்த விஷயத்துக்கு கூட நீங்க ஒப்பீடு செய்றதுக்கு இன்னொரு விஷயம் இருக்கும்..ஆனா அம்மா அப்பா பாசத்துக்கு.. அவங்க அன்புக்கு.. அவங்களோட தியாகத்துக்கு.. எதையும் ஒப்பீடு செய்யமுடியாது..ஏன் இன்னொரு அம்மா அப்பா பாசத்தையே கூட ஒப்பீடு செய்யமுடியாது.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்துல தனித்து நிக்ககூடியது..

அட..ஏற்கனவே பலபேர் பலதடவை சொல்லி இருக்கலாம்.. சொல்லி இருப்பாங்க.. அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்னு எழுதிதான் நீங்க பரீட்சைல மார்க் கூட வாங்கி இருப்பீங்க.. ஆனா அதை வாழ்க்கைல கடைபிடிச்சாத் தாங்க நீங்க உசந்த மனுசன்.. இல்லைனா.. அட போங்க.. சுடுகாடு போற பிணத்துக்கு கூடத்தான் மாலை விழுது.. அதுக்காக சாமியாகிட முடியுமா.. மனுஷங்களோட வாழ்றதால உங்களை மனுஷனா சொன்னா.. அட.. சொல்லமுடியுமா என்ன.. அப்படி நான் சொன்னாத் தான் நீங்க மனுஷன் ஆகிட முடியுமா என்ன..

ப்ரியாவோட மனிதரில் எத்தனை நிறங்கள்ங்கிற பதிவை பார்த்தவுடன் அதுல ஒரு மகன் அம்மா அப்பா கூப்பிட்டதுக்கு சொன்ன பதிலை படித்தவுடன் என்னால மனசுல இருக்க கோபத்தை அடக்க முடியல.. அது தாங்க இந்த பதிவு..

வாழ்க்கைல என்னிக்கும் மறந்துடாதீங்க..

மாதா, பிதா, குரு, தெய்வம்..இது தான் உயர்வுக்கு வரிசை..
இல்லைன்னா எப்படியோ அனுபவிப்பீங்க அதற்கான தண்டனை என்னும் பரிசை..

Monday, December 04, 2006

நாலு பேர் சேர்ந்து வளக்குற மரம்

ஒரு கதை.. அதை நிறைய பேர் சேர்ந்து எழுதினா எப்படி இருக்கும்.. அப்படி ஒரு கதையா(பேயா)ட்டம் தான் இது.. நம்ம கட்சியோட கொள்கை பரப்பு செயலாளர் வேதா..தலைவா..நீங்க இந்த கதையோட தொடர்ச்சியை எழுதுங்க அப்படின்னு ஒரு அன்புக் கட்டளை போட்டுட்டாங்க.. சுற்றுப்பயணம் எல்லாம் போயிட்டு வந்ததுல கொஞ்சம் தாமதமாயிட்டது.. அவங்களைப் போலவே நான் இதை கிரைம் வழிலயே கொண்டு போயிருக்கேன்..

இது வேதாவை எழுதச் சொன்ன உஷாவோட கற்பனை

The Unusual Endings
"Ennadhan panra ava anga?" he wondered aloud, as he got out of the cab outside the building that flaunted a board that read "Amanushya vishayangaluku anugavum: Dr. JevitsJayaraj". Aniku kalaila, he had got a call, and pesinadhu Meeradhan. Aana he could notice the difference between the voice he had listened to 2 days ago and the one he heard in the morning. '2 days munnadi sema super-a veenai madhiri ketta kural iniku kaalaila eppadi husky-a vichitrama?', he shuddered for a moment recollecting the conversation he had.."Hello, iss it Vassisht, naan Meera" - there was an eerieness around the voice he heard...


இது நம்ம கொ.ப.செ வேதா எழுதின பகுதி...

மீராவின் குரலை இப்ப நினைத்தாலும் ஒரு பயம் அவன் மனதில் பரவியது. சட்டென்று நினைவை கலைத்தது அவன் கைப்பேசி. அவன் அதை எடுக்...

ட்ரிங்,ட்ரிங்

'சே நல்ல கட்டத்துல இப்படி போன் அடிக்குதே, சத்யா சத்யா போன் அடிக்குது பார் எடு'

ட்ரிங்,ட்ரிங்

'அடச்சே, இந்த அத்தியாயத்தை இன்னிக்கு பத்திரிக்கைக்கு அனுப்பனும் இந்த நேரம் பார்த்து எழுத இவ்ளோ தடங்கல்'

ட்ரிங்,ட்ரிங்

'இந்த சத்யா எங்க போய் தொலைஞ்சா? நானே போய் எடுக்க வேண்டியது தான்'

இவன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தது போல் தொடர்ந்து அடித்த போனை எடுத்தான் எழுத்தாளன் சூர்யா.

'ஹலோ யாரு?'

'நான் தான்' என்று ரகசியம் பேசுவது போல் ஒரு பெண் குரல்

'அட யாருன்னு சொல்லித்தொலைங்க'

'மீரா பேசுறேன்'

'எந்த மீரா?'

'என்ன சூர்யா அதுக்குள்ள மறந்துட்ட? இப்ப தான என்னை பத்தி எழுதின?'

'என்னது? யாருங்க இது?'

'உன் கதையின் கதாபாத்திரம் மீரா' என்று கூறிய குரல் அவன் நினைவலைகளில் நீந்தி எதிரொலித்தது.

அதிர்ந்துப்போன சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...


ஹிஹி..நம்ம கைவண்ணம் இங்கேயிருந்து தொடங்குதுங்க

ரத்தமெல்லாம் உறைய அப்படியே சேரில் அமர்ந்தான் சூர்யா..

யா..யார் போன் பண்ணி இருப்பா..

அவன் தலைக்குள்ளே ஆயிரம் கேள்விகள்... சரியாக அந்த நேரம் பார்த்து மின்சாரம் போய் அந்த இடமே கருங்கும்மென இருட்டாகியது.. நெஞ்சில் பயத்துடன் மெல்ல மெழுகுவர்த்தியை தேடி மெதுவாக அடி எடுத்து வைத்தான்.. அப்போ காற்றில் மெல்ல கொலுசு சத்தம் கேட்டது.. அந்த சத்தம் மெதுவாக இவனை நோக்கி வந்தது..எடுத்து வைத்த காலைக்கூட திரும்ப பின்னால் எடுத்து வைத்தான்.. கொலுசு சத்தம் நெருங்க நெருங்க மல்லிகைப்பூ வாசமும் இவன் நாசியை துளைத்தது.. சூர்யாவுக்கு அதிர்ச்சியில் தொண்டை வறண்டது..

சூர்யா.. எப்படி இருக்க சூர்யா.. காதல் தொய்த்த மயக்கம் கலந்த ஒரு பெண் குரல் கேட்டது.. இந்த இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று சூர்யா குழம்பிய போது..

என்ன சூர்யா..என்னை மறந்துட்டியா..நான் தான் நீ காதலிச்சு ஏமாத்துன மலர்விழி..


நம்ம பகுதி முடிஞ்சதுங்க...

இதே கதைக்கு வேற மாதிரி தொடர்ச்சி வேண்டுமா..

நம்ம நிதி அமைச்சர் மாப்ள
பரணியும், சுத்த சிகாமணி சுகாதார அமைச்சர் தோழி ப்ரியாவும் எழுதியதை படிங்க..

அட.. யாரையாவது மாட்டிவிடலைன்னா எப்படி..

கிளீவ்லேண்டுக்கு ஆணி புடுங்குறேன் பேர்வழின்னு போயிருக்க நம்ம நண்பர்
அருண் (மேட்டரே இல்லை எழுதன்னு சொன்னீங்கலே), (அருணை ஏற்கனவே வேதா வேற டேகிட்டதால நான் கவனிக்கல.. அதனால அவங்களை இதிலிருந்து தப்பிக்க விட்டு, இருக்கவே இருக்கார் நம்ம டிரீம்ஸ்..(சீக்கிரம் தீபா படத்த போடுங்க சார்)அவரை எழுதவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்)மலேசியாவுல இருந்து நமக்கு போட்டியா சினிமாவை அலசுற தோழி மை பிரண்ட், புதுசா வந்திருக்க தோழி திவ்யா (வாம்மா மின்னல்) எல்லோரும் இந்த கதையோட தொடர்ச்சிய எழுதுவாங்க..

அப்படி எழுதலைன்ன அருண் வீடுக்கு ஒரு மோஹினியையும், மை பிரண்ட் மற்றும் திவ்யா வீட்டுக்கு ஒரு மோஹனையும் (மோஹினியோட ஆண்பால் இது தானே) அனுப்பி வைக்கப்படும்..

அடடே..இதை எழுத சில சட்டதிட்டங்கள் இருக்கு.. அது என்னன்னா.. அட நீங்க ஏன்
இங்க போயி படிச்சுக்கக் கூடாது..

நம்ம மாப்ள பரணி சொல்ற மாதிரி BREAK THE RULES...

ஆனா அந்த மரத்த மட்டும் உங்களுக்கு படம் போட்டு கட்டிடுறேன்..



மேல இருக்குல்ல அது தான்பா நாம எல்லோரும் சேர்ந்து வளர்க்கப் போற மரம்...

Saturday, December 02, 2006

பில்லா ரீமேக்கில் அஜித் - சூடான சினிமா செய்திகள்

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 15

மாறிவரும் தட்ப வெட்ப சூழ்நிலையில் நம்ம சிட்டுக்குருவி ரொம்ப அல்லாடிகிட்டு இருக்கு. குளிர்ல எங்க தங்குறதுன்னு அதுக்கு ஒரே பிரச்சனை. நம்ம கூட வந்து இந்த பனிகாலத்துல தங்கிக்கலாமான்னு கேட்டது.. நானும் ஓகே சொல்லிட்டேன்.. அதனால இனிமேல் சிட்டுக்குருவியோட நியுஸ் சுடச்சுட உங்களுக்கு கிடைக்கும். வழக்கம்போல இந்த தடவையும் அது நியுஸ் பேக்ஸ்ல அனுப்பிடுச்சு..

வதந்தியாக சொல்லப்பட்ட பில்லாவின் ரீமேக்கில் அஜித் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தை டைரக்டர் விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார். எல்.சுரேஷ் ஆனந்த பிக்சர்ஸ்க்காக தயாரிக்க, யுவன் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய படம் மார்ச் 2007 ஆரம்பிக்கிறது. இதற்காக விஷ்ணு ஸ்க்ரிப்ட் எழுத தொடங்கிவிட்டார். ஒரிஜினல் படத்தின் இரண்டு புகழ் பெற்ற பாடல்களான 'மை நேம் இஸ் பில்லா'வும் 'வெத்தலையை போட்டேண்டி'யும் புதிய ஆக்கத்திலும் ரீமிக்ஸ் ஆக வரப் போகிறது. ரஜினியிடமும் இது பற்றி பேசி ஒப்புதல் வாங்கிவிட்டதாக தெரிகிறது.

ராஜீவ்காந்தி கொலையை மையப்படுத்தி ஆர்.கே.செல்வமணி தயாரித்து இயக்கிய குற்றப்பத்திரிக்கை படம் 14 ஆண்டுகளுக்கு பல சோதனைகளை தாண்டி இன்னும் ஒரு மாதத்தில் வெளிவருகிறது. சென்னை உயர்நீதி மன்றம் பல சர்சைக்குள்ள காட்சிகளை நீக்கிய பிறகு படத்துக்கு 'ஏ' சர்டிபிகட் கொடுத்து படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது.

வடிவேலுவை போலவே விவேக்கும் சொல்லி அடிப்பேன் படத்தில் நகைச்சுவை கதாநாயகனாய் நடித்து வருவது தெரியும். ஆனால் கிட்டதட்ட இரண்டு வருட காலமாக இழுத்துக்கொண்டிருந்த படம் வெளிச்சத்தை விரைவில் பார்க்கப்போகிறது. ரஜினி, ஷங்கர், பாலசந்தர் முன்னிலையில் இந்த படத்தின் ஆடியோ கேசட் வெளியானது.

இது சந்தானம் காலம்.. ஆம்.. லொள்ளு சபா சந்தானம் தற்போது மிக அதிக படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். இவரின் இயல்பான வசன உச்சரிப்பும் டைமிங் காமெடியும் ரசிகர்களை கவர்ந்திருப்பதாக தெரிகிறது. தர்போது கீரீடம் (மகுடம்), அழகிய தமிழ் மகன், வியாபாரி போன்ற பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இரட்டை அர்த்த கமெடியை தவிர்த்தால் முன்னுக்கு வரலாம் இந்த சந்தானம்.

இப்போதைக்கு இவ்ளோதாங்க நியுஸ். சிட்டுக்குருவி வீடு ஷிப்ட் பண்றதுல மும்மரமா இருக்கிறதால இப்போதைக்கு அப்பீட்..அப்புறம் ரிப்பீட்..

தொட்டால் பூ மலரும் - ரசிக்கவைக்கும் வீடியோ

பழைய தொட்டால் பூ மலரும் பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் புது வடிவம் கொடுக்க, அந்த புது வடிவ இசையில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் டூயட் பாடினால் எப்படி இருக்கும்.. கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்.. மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் ரசிக்கும்படியாகவும் இந்த முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் மற்றும் சரோஜாதேவியின் உதடசைப்பு கூட நுணுக்கமாக கையாளப்பட்டிருக்கிறது..



இந்த வடிவ மாற்றத்தை செய்த பெயர் தெரியாத அந்த கலைஞனுக்கு வாழ்த்துக்கள்..

கொலம்பஸிலிருந்து கொலம்பஸ் வரை

இது ஒரு விளம்பர பகுதி..பதிவு

லாஸ் வேகாஸில்...

போதை வழிந்த கண்களுடன் உங்களை நான் கட்டிபிடிச்சுக்கவா என்று அந்த பெண் கேட்டவுடன் அதிர்ந்து போனேன். அதுவரையில் என் நண்பர்களை போட்டோ எடுத்துகொண்டிருந்ததால் என் கையில் கேமரா இருந்தது.. அதை பார்த்தவுடன் உன் கூட நான் போட்டோ எடுத்துகலாமா என்று கேட்டாள்.. எனக்கு பயமாய் இருந்தது.. ரெண்டு ஸ்டெப் பின்னால் எடுத்து வச்சேன்..

கிராண்ட் கேனியானில்..

டேய் பாத்துடா.. மகனே..கொஞ்சம் ஸ்டெப் மாறி போனாலும் கீழ எலும்பு தனியா சதை தனியாத் தான் கிடப்ப என்று நாங்கள் சொல்வதை கேட்காமல் என் கூட வந்த.....


லாஸ் ஏஞ்சலில்..

ஸ்பீட் லிமிட் 65 என்ற போர்டை பாத்து விட்டு என் காரின் ஸ்பீடோமீட்டர் பார்த்தால் அது 100-ஐ காட்டியது.. பின்னால் திரும்பி பார்த்தால் போலீஸ் கார் வந்துகொண்டிருந்தது...

இப்படி சுவையான சம்பவங்களுடன் எதிர்பாருங்கள் கொலம்பஸிலிருந்து கொலம்பஸ் வரை.. ஒரு உற்சாக சுற்றுலா தொடர்..

விரைவில்..
கொலம்பஸிலிருந்து கொலம்பஸ் வரை..

ரொம்ப பில்டப் கொடுத்திருந்தாலும் ரொம்ப எதிர்பார்க்காம படிங்க.. ஏன்னா ஓவரா விளம்பரம் கொடுத்த எந்த வெத்து சினிமாவும் நல்லா ஓடினதா சரித்திரம் இல்ல.. ஹிஹி..சும்ம ஒரு பஞ்ச் டயலாக்..

இது என்னோட முதல் பயண கட்டுரை.. கீதா மேடம் மாதிரியோ நம்ம கட்சியோட கொ.ப.செ வேதா மாதிரியோ இருக்குமாங்கிறது சந்தேகம் தான்.. ஏதோ புலியை பாத்து கோடு போட்டுகொண்ட பூனையாய்..கழுகை பார்த்து பறக்க முயற்சி பண்ற வாத்தாய் தான் எழுதப்போறேன்..

உங்கள் கருத்துகள் எதுவாயினும் எடுத்துரைங்கள் நண்பர்களே..

Friday, December 01, 2006

எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி நாளும் வாசித்த செய்திகளும்

இன்று உலக எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி நாள்.
















இது போன வருடம் இட்ட பிரச்சாரப் படம். இதைவிட ஒரு நல்ல பிரச்சாரப் படம் சிக்கவில்லை. அதனால் இதையே மறுபடியும் பதிவாய் இடுகிறேன்.

முடிந்தவரை ராமராய் இருக்கப் பாருங்கள்.. இல்லையென்றால் கேடயம் கொண்ட காமனாய் இருந்துவிடுங்கள்.

ஒரு சின்ன மலரும் நினைவுகள்..

நான் பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது, பள்ளியில் காலை பிரேயர் நேரத்தில் செய்திகள் வாசிப்பது வழக்கம். ஒரே மாதிரி செய்திகள் வாசிக்காமல் பல மாற்றம் செய்து எல்லோரையும் செய்தியை கேக்கவைத்தோம் நானும் என் தமிழ் வாத்தியார் ஐயா த.கதிர்வேலும்...

அப்போதுதான் டிசம்பர்.1, உலக எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி நாள் என்று அறிந்து அதையும் செய்திகளில் சொன்னேன்.. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது..அப்போதெல்லாம் எயிட்ஸ் என்பதே உச்சரிக்கக்கூடாத வார்த்தையாய் இருந்தது..இதை வாசித்தவுடன் கூட்டத்தில் ஒரு சலசலப்பு கூட ஏற்பட்டது என்றால் பார்த்துகொள்ளுங்களேன். இதே மாதிரி ஒரு நாள் செய்திகள் வசிக்கும்போது, 'சந்தனகடத்தல் வீரப்பன் பிடிபட்டான்' என்று சொல்லி ஒரு சின்ன இடைவெளி விட்டு என் முன்னே நிற்கும் கூட்டத்தை பார்த்தேன்.. பிரேயரில் சீரான வரிசையில் நின்றிருந்த எல்லோரும் அதிர்ச்சி மற்றும் ஆர்வத்தில் மற்றொருவர் கூட என்ன என்பது போல் பார்த்தும் பேசியும் கொண்டனர்.. அதன் பிறகு 'என்று செய்திதாள்களில் அச்சேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று வால்டர் தேவர் பேட்டியளித்தார்' என்று முடித்தவுடன் எல்லோருடைய முகத்திலையும் ஒரு சின்ன புன்னகை தவழ்ந்தது இன்னும் மனசில் அப்படியே பதிந்து கிடக்கிறது..